“வேதங்களை ஏன் படிக்க வேண்டும்”? வேதப் படிப்பு ஆலோசனைகள் (2021)
“வேதங்களை ஏன் படிக்க வேண்டும்”? வேதப் படிப்பு ஆலோசனைகள்
வேதங்களை ஏன் படிக்க வேண்டும்?
நாம் வேதத்தை கருத்துடன் படிக்கும் போது, நாம் இயேசு கிறிஸ்துவை நெருங்கி, அவருடைய சுவிசேஷம் மற்றும் பாவநிவாரண பலியை நன்கு புரிந்துகொள்கிறோம். தீர்க்கதரிசி நேபி இந்த வழியில் நம்மை ஊக்கப்படுத்தினான்:
ஆகையால், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரண நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடும் நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனால் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டுகளித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வீர்களானால், இதோ, நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என பிதா உரைக்கிறார்” (2 நேபி 31:20).
நம்முடைய பரலோக பிதாவிடம் திரும்புவதற்கு வேதத்தின் போதனைகள் நமக்கு உதவும். தனி நபர்களாகவும், பொருந்தக்கூடிய இடங்களில் குடும்பங்களாகவும் அவற்றைத் தவறாமல் படிக்கும்படி நம்முடைய பிற்கால தீர்க்கதரிசிகள் கேட்டுக் கொண்டார்கள். 1 நேபி 19:23ல் உள்ள நேபி அறிவுரைப்படி, வேதத்தில் உள்ளவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், இன்று நம் வாழ்வில் வேத விவரங்கள் மற்றும் போதனைகளைப் பயன்படுத்தவும் அவர்கள் நம்மை அழைத்துள்ளனர். வேதங்களைப் படிக்கவும், “கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டு களிக்கவும்” பூர்வகால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளும் நம்மை அழைத்துள்ளனர்.
தலைவர் ரசல் எம். நெல்சனும் வேத வசனங்களில் “உண்டு களித்தல்” பற்றிய இந்த முக்கியமான உண்மையைப் போதித்தார்:
“உண்டுகளித்தல் என்பதற்கு சுவைத்தலைவிட அதிகப்பொருள் உண்டு. உண்டுகளித்தல் என்றால் சுவைத்து அனுபவித்தல் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பின், உண்மையுள்ள கீழ்படிதலின் ஆவியோடு நாம் வேதங்களைப் படிப்பதில் நாம் அவைகளை உண்டுகளிக்கிறோம். நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளில் உண்டுகளிக்கும்போது, அவை ‘இருதயங்களாகிய சதையான பலகைகளில்’ பதிக்கப்படுகிறது [2 கொரிந்தியர் 3:3]. அவை நமது சுபாவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகின்றன” (“Living by Scriptural Guidance,” Ensign, Nov. 2000, 17).
தனிப்பட்ட மற்றும் குடும்ப வேதப் படிப்பில் நாம் தொடர்ந்து பங்கேற்கும்போது, நம் நாளின் பல சவால்களுக்கு எதிராக நாமும் நம் குடும்பங்களும் வழிநடத்தப்படவும், பாதுகாக்கப்படவும், பலப்படுத்தப்படவும் முடியும்.