வேதங்கள்
Gospel Library App பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்


“Gospel Library App பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” வேதப் படிப்பு ஆலோசனைகள்(2021)

“Gospel Library App பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” வேதப் படிப்பு ஆலோசனைகள்

பெண்ணும் குழந்தையும் டாப்லட்டைப் பார்த்தல்

Gospel Library App பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்

கேட்கவும்

வேதத்தைப் படிப்பதற்கு ஒரு சிறந்த வழி, பதிவுகளைக் கேட்பதாகும். இதை உங்கள் வீட்டில் அல்லது கிட்டத்தட்ட எங்கும் செய்யலாம். நீங்கள் மாறுபட்ட வேகத்திலும் வெவ்வேறு மொழிகளிலும் கேட்கலாம்.

தலைப்புவாரியாக படிக்கவும்

தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி, தொடர்புடைய தேடல் முடிவுகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் கொடுக்கப்பட்ட தலைப்பைப்பற்றிய வசனங்களை நீங்கள் காணலாம். கொடுக்கப்பட்ட தலைப்புக்கான முக்கிய வேத வசனங்களை வழங்கும் Gospel Topics வெளியீட்டையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

தலைப்புவாரியாக ஒழுங்கமையுங்கள்

“Tags” மற்றும் “Notebooks,” பயன்படுத்தி நீங்கள் தலைப்புவாரியாக உள்ளடக்கத்தை ஒழுங்கமைக்கலாம். நீங்கள் ஒரு செய்தி அல்லது பாடம் தயாரிக்கும் போது இந்த தலைப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கியமானதென குறியிடுங்கள்

ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து ஒரு பாணியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வேதவசனங்களை முக்கியமானதெனக் குறியிடலாம் அல்லது குறிக்கலாம். அந்த பாணி வெவ்வேறு வண்ணங்களின் கலவையாகவும், அடிக்கோடிடுதல் அல்லது முக்கியமானதெனக் குறியிடுவதாகவும் இருக்கலாம்.

இணைப்புக்களை உருவாக்கவும்

நீங்கள் வசனங்கள், பொது மாநாட்டு செய்திகள் மற்றும் பிற உள்ளடக்கங்களுக்கு இடையே இணைப்புகளை உருவாக்கலாம். நீங்கள் உருவாக்கிய இணைப்புகளை நினைவில் வைத்து விரைவாகப் பெற இது உங்களுக்கு உதவும்.

விளக்கங்களைத் தேடுங்கள்

ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, “Define” பொத்தானைத் தட்டுவதன் மூலம், வேதவசனங்களில் உள்ள ஒரு வார்த்தையின் விளக்கத்தை நீங்கள் எளிதாகப் பார்க்கலாம்.

புக்மார்க்குகள் மற்றும் திரைகளைப் பயன்படுத்தவும்

குறிப்பிட்ட இடங்கள் மற்றும் திரைகளைக் கண்காணிக்க புக்மார்க்குகளைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் விரைவாகப் பெறலாம். புக்மார்க்குகளைப் பயன்படுத்துவது, ஒரே நேரத்தில் பல்வேறு அதிகாரங்களையும் பிற உள்ளடக்கங்களையும் திறந்து வைத்திருக்க உங்களை அனுமதிக்கும்.

ஒரு கால அட்டவணையை அமைக்கவும்

வேதங்களைப் படிப்பதில் உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் ஒரு படிப்புத் திட்டத்தை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் படிப்பு இலக்குகளை அடைய உங்களுக்கு உதவ நினைவூட்டல்களையும் அமைக்கலாம். என்னைப் பின்பற்றி வாருங்கள் அட்டவணையைப் பின்பற்றவும் அல்லது தனிப்பட்ட முறையில் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும் ஒரு அட்டவணை உங்களுக்கு உதவும்.