“31. உறுப்பினர்களுடனான நேர்காணல்கள் மற்றும் பிற சந்திப்புகள்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“31. உறுப்பினர்களுடனான நேர்காணல்கள் மற்றும் பிற சந்திப்புகள்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
31.
உறுப்பினர்களுடனான நேர்காணல்களும் பிற சந்திப்புகளும்
31.0
முன்னுரை
இயேசு கிறிஸ்து அடிக்கடி மற்றவர்களுக்கு ஒவ்வொருவராக ஊழியம் செய்தார் (உதாரணமாக, பார்க்கவும், யோவான் 4:5–26; 3 நேபி 17:21). அவர் தேவனின் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். அவர் அவர்களுக்கு தனித்தனியாக உதவி செய்கிறார்.
தனிப்பட்ட உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்புள்ள அனைத்து தலைவர்களுக்கும் இந்த அத்தியாயம் உதவும்.
31.1
31.1 வழிகாட்டுதலின் கொள்கைகள்
31.1.1.
ஆவிக்குரிய விதமாக ஆயத்தமாகுங்கள்
ஜெபம், வேதப் படிப்பு மற்றும் நீதியான வாழ்க்கை மூலம் உங்களை ஆவிக்குரிய விதமாக ஆயத்தப்படுத்துங்கள். பரிசுத்த ஆவியின் முணுமுணுப்புகளைக் கேளுங்கள்.
31.1.2.
உறுப்பினர் தேவனின் அன்பை உணர உதவுங்கள்
உறுப்பினர்கள் நேர்காணலுக்காகவோ அல்லது தனிப்பட்ட சவாலுக்கு உதவிக்காகவோ உங்களிடம் வரும்போது, பரலோக பிதா அவர்களை நேசிக்கிறார் என்பதை அறிந்துகொள்வதே பெரும்பாலும் அவர்களுக்குத் தேவை.
வேதங்களும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் ஆவியானவரை அழைக்கின்றன மற்றும் பரிசுத்த கோட்பாட்டைக் கற்பிக்கின்றன. கண்டிக்கவோ, வற்புறுத்தவோ அல்லது பயத்தை ஏற்படுத்தவோ அல்ல, உணர்த்தவும் ஊக்குவிக்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் (லூக்கா 9:56 பார்க்கவும்).
31.1.3.
உறுப்பினர் இரட்சகரின் வல்லமையை பெற உதவுங்கள்
அவரிடம் திரும்ப உறுப்பினர்களை ஊக்குவிக்கவும். பலப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும், மீட்பதற்கும் அவருடைய வல்லமையைப் பெற அவர்களுக்கு உதவுங்கள்.
31.1.4.
உறுப்பினர் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர உதவுங்கள்
ஒரு நேர்காணல் அல்லது சந்திப்பின் போது வேறு யாராவது இருக்க வேண்டும் என்று விரும்பலாம் என்பதை உறுப்பினருக்கு எப்போதும் தெரிவியுங்கள். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரை, குழந்தை அல்லது இளைஞரைச் சந்திக்கும் போது, பெற்றோர் அல்லது மற்றொரு பெரியவர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கும் உறுப்பினரின் விருப்பங்களைப் பொறுத்து அவர் அல்லது அவள் சந்திப்பில் உடன் இருக்கலாம் அல்லது அறைக்கு வெளியே காத்திருக்கலாம்.
உறுப்பினர் அனுமதி அளிக்காத வரை, உங்கள் மனைவி அல்லது பிற சபைத் தலைவர்கள் உட்பட யாருடனும் ரகசியத் தகவலைப் பகிர வேண்டாம்.
31.1.5.
உணர்த்தப்பட்ட கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் கவனமாகக் கேளுங்கள்
ஒரு உறுப்பினரைச் சந்திக்கும் போது, அவருடைய நிலைமையைப் புரிந்துகொள்ள உதவும் கேள்விகளைக் கேளுங்கள்.
உறுப்பினர் பேசும்போது, கவனமாகவும் கூர்ந்தும் கேளுங்கள்.
31.1.6.
சுயசார்பை ஊக்குவிக்கவும்
உறுப்பினர்கள் மீதான உங்கள் அன்பின் காரணமாக, அவர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க நீங்கள் விரும்பலாம். இருப்பினும், அவர்களின் சொந்த தீர்வுகளைக் கண்டறிந்து அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க உதவுவதன் மூலம் நீங்கள் அவர்களை மேலும் ஆசீர்வதிப்பீர்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:8).
31.1.7.
மனந்திரும்புவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும்
ஒருவரின் கடுமையான பாவங்களை நிவர்த்திக்க ஆயர் அல்லது பிணையத் தலைவர் மட்டுமே உதவ முடியும். 32.6ல் இவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பினர் இந்தப் பாவங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்திருந்தால், அவர் உடனடியாக ஆயர் அல்லது பிணையத் தலைவரைச் சந்திக்க வேண்டும்.
31.1.8.
துஷ்பிரயோகத்திற்கு தகுந்த முறையில் பதிலளிக்கவும்
துஷ்பிரயோகத்தை எந்த வடிவத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது. துஷ்பிரயோக தகவல்களை தீவிரமானதாக எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நீங்கள் அறிந்தால், துஷ்பிரயோகத்தை உள்ளூர் அதிகாரிகளிடம் புகாரளிக்கவும், ஆயருடன் ஆலோசனை செய்யவும். 38.6.2ல் துஷ்பிரயோகத்தைப்பற்றி புகாரளிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
31.2
நேர்காணல்கள்
31.2.1.
நேர்காணலுக்கான நோக்கங்கள்
பொதுவாக, சபைத் தலைவர்கள் உறுப்பினர்களை நேர்காணல் செய்து அவர்களைப்பற்றி தீர்மானிக்கிறார்கள்:
-
ஒரு நியமத்தைப் பெற அல்லது பங்கேற்க தயாராக உள்ளனரா.
-
சபையில் ஒரு பதவிக்கு அழைக்கப்பட வேண்டுமா.
31.2.2.
நேர்காணல் விதங்கள்
|
யார் நேர்காணலை நடத்தலாம் |
நேர்காணலின் நோக்கம் |
|---|---|
யார் நேர்காணலை நடத்தலாம் ஆயர் மட்டும் | நேர்காணலின் நோக்கம்
|
யார் நேர்காணலை நடத்தலாம் ஆயர் அல்லது அவர் நியமிக்கும் ஆலோசகர் | நேர்காணலின் நோக்கம்
|
31.2.3.
ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் நேர்காணல்கள்
31.2.3.1
பதிவேட்டிலுள்ள உறுப்பினர்களாக இருக்கும் குழந்தைகள்
ஆயர் தனது தொகுதியில் உள்ள 8 வயதான பதிவேட்டிலுள்ள உறுப்பினர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோலை தரித்திருக்கிறார். இந்த காரணத்திற்காக, அவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஞானஸ்நானத்திற்காக பின்வரும் நபர்களை நேர்காணல் செய்கிறார்:
-
பதிவேட்டிலுள்ள 8 வயது குழந்தை உறுப்பினர்கள்.
-
பதிவேட்டில் உறுப்பினர்களாக இல்லாத, ஆனால் பெற்றோர் அல்லது பாதுகாவலரைக் கொண்ட 8 வயது குழந்தைகள்.
-
அறிவு குறைபாடுகள் காரணமாக 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஞானஸ்நானம் பெறுவது தாமதமாகும்போது.
நேர்காணலில், ஆயத்தின் உறுப்பினர் குழந்தை ஞானஸ்நானத்தின் நோக்கங்களைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்கிறார்(2 நேபி 31:5–20 பார்க்கவும்). குழந்தை ஞானஸ்நான உடன்படிக்கையைப் புரிந்துகொள்வதையும், அதன்படி வாழ உறுதிபூண்டிருப்பதையும் அவர் உறுதிசெய்கிறார் (மோசியா 18:8–10 பார்க்கவும்). அவர் குறிப்பிட்ட கேள்விகளின் பட்டியலைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது தகுதியைத் தீர்மானிப்பதற்கான நேர்காணல் அல்ல, ஏனெனில் “சிறு பிள்ளைகளுக்கு மனந்திரும்புதல் அவசியமில்லை” (மரோனி 8:11).
31.2.3.2
மனமாறியவர்கள்
மனம் மாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான ஆசாரியத்துவ திறவுகோல்களை ஊழியத் தலைவர் தரித்திருக்கிறார். இந்த காரணத்திற்காக, ஒரு முழுநேர ஊழியக்கார நேர்காணல்:
-
ஞானஸ்நானம் பெறாத திடப்படுத்தப்படாத 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள். அறிவு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு விதிவிலக்குக்காக 31.2.3.1 பார்க்கவும்.
-
8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, பெற்றோர்கள் சபையில் உறுப்பினர்களாக இல்லாத குழந்தைகள்.
-
ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட பெற்றோரைக் கொண்ட 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள்.
31.2.4.
ஆரோனிய ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமனம் செய்வதற்கான நேர்காணல்கள்
கூடுதல் தகவலுக்கு, 18.10.2 பார்க்கவும்.
31.2.5.
ஆலய பரிந்துரை நேர்காணல்கள்
ஆலயம் கர்த்தரின் வீடு. ஆலயத்தில் பிரவேசிப்பதும், நியமங்களில் பங்கேற்பதும் பரிசுத்த சிலாக்கியம். அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவத் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டபடி, ஆவிக்குரிய பிரகாரமாக தயாராகி, கர்த்தருடைய தராதரங்கள்படி வாழ முயற்சிப்பவர்களுக்கு இந்தச் சிலாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தீர்மானிக்க, ஆசாரியத்துவத் தலைவர்கள் LCR (26.3லுள்ள வழிகாட்டுதல்களையும் பார்க்கவும்) உள்ள கேள்விகளைப் பயன்படுத்தி உறுப்பினரை நேர்காணல் செய்கிறார்கள்.
31.2.6.
மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமனம் செய்வதற்கான நேர்காணல்கள்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளுவதற்கான ஆசாரியத்துவ திறவுகோல்களை பிணையத் தலைவர் தரித்திருக்கிறார். மூப்பர் மற்றும் பிரதான ஆசாரியர் அலுவல்களுக்கான திறவுகோலையும் அவர் தரித்திருக்கிறார்.
பிணைய தலைமையின் ஒப்புதலுடன், ஆயர் மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவ நியமனப் பதிவேட்டில் வழங்கப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி உறுப்பினரை நேர்காணல் செய்கிறார்.
31.3
தலைவர்கள் உறுப்பினர்களை சந்திப்பதற்கான பிற வாய்ப்புகள்
-
உறுப்பினர்கள் தங்களுக்கு ஆவிக்குரிய வழிகாட்டுதல் தேவைப்படும்போது அல்லது முக்கியமான தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்போது ஒரு சபைத் தலைவரை சந்திக்கும்படி கேட்கலாம்.
-
ஆயர் அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் உலகப்பிரகார தேவைகளைக் கொண்ட உறுப்பினர்களைச் சந்திக்கிறார் (22.6 பார்க்கவும்).
-
ஆயத்தின் உறுப்பினர் ஒவ்வொரு 11 வயது சிறுவனையும் அவன் அல்லது அவள் ஆரம்ப வகுப்பிலிருந்து உதவிக்காரர் குழுமம் அல்லது இளம் பெண்கள் வகுப்பிற்குச் செல்லும்போது சந்திக்கிறார்.
31.3.1.
இளைஞர்களுடன் சந்தித்தல்
ஆயர் அல்லது அவரது ஆலோசகர்களில் ஒருவர் ஒவ்வொரு இளைஞரையும் வருடத்திற்கு இரண்டு முறை சந்திப்பார். ஒவ்வொரு வருடமும் இந்தக் கூட்டங்களில் குறைந்தபட்சம் ஒன்று, ஆயருடன் இருக்க வேண்டும். இளைஞனுக்கு 16 வயது ஆகும் வருடத் தொடக்கத்திலிருந்து, வருடத்தின் இரண்டு சந்திப்புகளும், சாத்தியமானால் ஆயருடன் நடக்க வேண்டும்.
இளம் பெண்கள் தலைவருக்கும் ஒவ்வொரு இளம் பெண்களுக்கும் ஊழியம் செய்யும் பொறுப்பு உள்ளது. இளம் பெண்களை தனித்தனியே சந்திப்பதன் மூலம் (அல்லது மற்றொரு பெரியவர்களுடன்) அவர் இதைச் செய்யலாம்.
31.3.1.2
கலந்துரையாடுவதற்கான தலைப்புகள்
இளைஞர்களுடனான சந்திப்புகளின் முக்கிய நோக்கம் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை வளர்த்து, இளைஞர்கள் அவர்களைப் பின்பற்ற உதவுவதாகும். இந்த சந்திப்புகள் மேம்படுத்தும் ஆவிக்குரிய அனுபவங்களாக இருக்க வேண்டும்.
31.3.2.
இளம் வயது வந்தோருடன் சந்தித்தல்
ஆயர் தனது தொகுதியில் உள்ள ஒற்றை இளம் வயதுவந்தோரின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார். அவர் அல்லது பணிக்கப்பட்ட ஆலோசகர் ஒவ்வொரு இளம் வயது வந்தோரையும் வருடத்திற்கு ஒரு முறையாவது சந்திப்பார்.
31.3.3.
அவர்களின் அழைப்புகள் மற்றும் பொறுப்புகள் பற்றி கலந்துரையாட உறுப்பினர்களுடன் சந்தித்தல்
பிணையத் தலைமைகள், ஆயர்கள் மற்றும் பிற தலைவர்கள் தங்கள் அழைப்புகள் பற்றி அறிக்கை கொடுக்கும் உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்திக்கின்றனர்.
உறுப்பினரின் சேவைக்கு தலைவர் நன்றி தெரிவித்து ஊக்கமளிக்கிறார்.
31.3.6.
தொழில்முறை ஆலோசனை மற்றும் சிகிச்சை
சபைத் தலைவர்கள் தொழில்முறை ஆலோசகர்களாக அல்லது சிகிச்சை அளிக்க அழைக்கப்படுவதில்லை. அவர்கள் கொடுக்கும் உதவி ஆவிக்குரியது, இயேசு கிறிஸ்துவின் பலப்படுத்துகிற, ஆறுதலளிக்கிற, மீட்கும் வல்லமை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த முக்கியமான மற்றும் உணர்த்தும் உதவிக்கு கூடுதலாக, சில உறுப்பினர்கள் தொழில்முறை ஆலோசனைகள் கிடைக்கும் இடத்தில் இருந்து பயனடையலாம்
31.4
உறுப்பினர்களுடனான மெய்நிகர் சந்திப்பு
பொதுவாக, தலைவர்கள் நேர்காணலுக்காகவும் ஆவிக்குரிய உதவி மற்றும் ஊழியம் செய்யவும் உறுப்பினர்களை நேரில் சந்திப்பார்கள். இருப்பினும், விதிவிலக்காக, நேரில் சந்திப்பது சாத்தியம் இல்லாதபோது அவர்கள் மெய்நிகராக சந்திக்க முடியும்.