“23. சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளுதலும், புதிய மற்றும் திரும்பவரும் உறுப்பினர்களை பலப்படுத்துதலும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“23. சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளுதலும், புதிய மற்றும் திரும்பவரும் உறுப்பினர்களை பலப்படுத்துதலும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
23.
சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளுதலும், புதிய மற்றும் திரும்பவரும் உறுப்பினர்களை பலப்படுத்துதலும்
23.0
முன்னுரை
சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைப்பது இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியின் ஒரு பகுதியாகும்.(1.2 இந்தக் கையேட்டில்; மத்தேயு 28:19–20 பார்க்கவும்). இதில் அடங்கியவை:
-
ஊழியப்பணியிலும் ஊழியக்காரர்களாக சேவை செய்வதிலும் பங்கேற்குதல்.
-
புதிய மற்றும் திரும்ப வரும் சபை உறுப்பினர்கள் உடன்படிக்கை பாதையில் முன்னேற உதவுதல்.
23.1
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும்
23.1.1
அன்பு
தேவன் மீதுள்ள அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி, அவருடைய பிள்ளைகளை நேசிப்பதும் அவர்களுக்குச் சேவை செய்வதுமாகும் (மத்தேயு 22:36–39; 25:40 பார்க்கவும்). இயேசு கிறிஸ்து செய்தது போல் நாம் அன்பு செலுத்தவும், சேவை செய்யவும் முயற்சி செய்கிறோம். இந்த அன்பு எல்லா மதங்கள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களைச் சென்றடைய நம்மைத் தூண்டுகிறது (அப்போஸ்தலர் 10:34; 2 நேபி 26:33 பார்க்கவும்).
23.1.2
பகிர்ந்துகொள்ளவும்
நாம் தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிப்பதால், இயற்கையாகவே அவர் நமக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் (யோவான் 13:34–35 பார்க்கவும்) மற்றும் இஸ்ரவேலைச் கூட்டிச் சேர்க்க உதவுகிறோம். நாம் உணரும் மகிழ்ச்சியை மக்கள் உணர உதவ முயற்சிக்கிறோம் (ஆல்மா 36:24 பார்க்கவும்). இரட்சகரைப்பற்றியும், நம் வாழ்வில் அவருடைய செல்வாக்கைப்பற்றியும் நாம் வெளிப்படையாகப் பேசுகிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 60:2 பார்க்கவும்). தனிப்பட்ட, நேரலை மற்றும் பிற தொடர்புகளின் ஒரு பகுதியாக சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் இவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.
23.1.3
அழைக்கவும்
மற்றவர்களை எவ்வாறு அழைப்பது என்பதற்கான உணர்த்துதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக நாம் ஜெபிக்கிறோம்:
-
இயேசு கிறிஸ்து, அவருடைய சுவிசேஷம் மற்றும் அவரது சபை மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களை வந்து பாருங்கள் (யோவான் 1:37–39, 45–46 பார்க்கவும்).
-
தேவையிலிருக்கும் மக்களுக்கு சேவை செய்ய, வந்து எங்களுக்கு உதவுங்கள்.
-
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபைக்கு வந்து சொந்தமாகுங்கள்.
பெரும்பாலும், அழைப்பது என்பது நாம் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் செயலில் நமது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்வதாகும்.
23.2
புதிய உறுப்பினர்களை பலப்படுத்துதல்
ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் நட்பு, சேவை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆவிக்குரிய போஷித்தல் தேவை. சபையின் உறுப்பினர்களாக, புதிய உறுப்பினர்களுக்கு நமது அன்பையும் ஆதரவையும் வழங்குகிறோம் (மோசியா 18:8–10 பார்க்கவும்). அவர்கள் சபைக்குச் சொந்தமானவர்கள் என்ற உணர்வை உணர உதவுகிறோம். உடன்படிக்கையின் பாதையில் முன்னேறவும், மிக ஆழமாக “கர்த்தருக்குள்ளே மனமாற்றம்” அடையவும் அவர்களுக்கு உதவுகிறோம் (ஆல்மா 23:6).
23.3
திரும்பவரும் உறுப்பினர்களை பலப்படுத்துதல்
சில உறுப்பினர்கள் சபையில் பங்கேற்பதை நிறுத்த முடிவு செய்கிறார்கள். இரட்சகர் கூறினார், “அப்படிப்பட்டோருக்கு தொடர்ந்து ஊழியம் செய்வீர்களாக; ஏனெனில் அவர்கள் திரும்பிவந்து, மனந்திரும்பி, இருதயத்தின் முழுநோக்கோடு என்னிடத்தில் வருவார்களென்றும், அப்பொழுது நான் அவர்களை குணப்படுத்துவேனென்பதைத் தவிர வேறெதையும் நீங்கள் அறியீர்கள்; நீங்கள் அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிற கருவிகளாயிருப்பீர்கள்.” (3 நேபி 18:32).
முழுமையாக பங்கேற்காத உறுப்பினர்கள், சபை உறுப்பினர்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தால் அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய உறுப்பினர்களைப் போலவே, அவர்களுக்கும் நட்பு, சேவை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆவிக்குரிய போஷித்தல் தேவை.
23.4
பிணையத் தலைவர்கள்
23.4.1
பிணையத் தலைமை
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் புதிய மற்றும் திரும்பவரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் பிணையத் தலைவர் பிணையத்தில் திறவுகோலை தரித்திருக்கிறார். அவரும் அவருடைய ஆலோசகர்களும் இந்த முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
வழக்கமாக மாதந்தோறும், பிணையத் தலைவர் மற்றும் தொகுதி தலைவர்கள் மற்றும் முழுநேர ஊழியக்காரர்களுக்கு இடையேயான முயற்சிகளை ஒருங்கிணைக்க, பிணையத் தலைவர் ஊழியத் தலைவரைச் சந்திப்பார்.
23.4.3
உயர் ஆலோசகர்கள்
மூப்பர் குழுமத் தலைமைகளுக்கும் ஊழியத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தவும் ஆதரவளிக்கவும் உயர் ஆலோசகர்களை பிணையத் தலைவர் நியமிக்கலாம். இந்த முயற்சிகளை வழிநடத்துவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் ஆலோசகர்கள் நியமிக்கப்படலாம். இருப்பினும், அனைத்து உயர் ஆலோசகர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கும் குழுமங்களுக்குமான இந்தப் பொறுப்புகளைக் கொண்டுள்ளனர்.
23.4.4
ஒத்தாசைச் சங்க தலைமை
பிணையத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் தொகுதி ஒத்தாசைச் சங்கத் தலைமைகளுக்கு அவர்களின் பொறுப்புகளில் பிணைய ஒத்தாசைச் சங்கத் தலைமை அறிவுறுத்துகிறது மற்றும் ஆதரிக்கிறது.
23.5
தொகுதி தலைவர்கள்
23.5.1
ஆயத்துவம்
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதிலும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதிலும் தொகுதி முயற்சிகளை அவர்கள் நடத்தும்போது மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகளுடன் ஆயம் ஒருங்கிணைக்கிறது. இந்த தலைவர்கள் அடிக்கடி ஒன்றாக ஆலோசனை செய்கிறார்கள்.
இந்த முயற்சிகள் தொகுதி ஆலோசனைக் குழுவிலும் தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவதை ஆயம் உறுதி செய்கிறது.
பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களை நடத்த, ஆலய பரிந்துரைக்கு பொருத்தமான வயதுடைய புதிய உறுப்பினர்களை ஆயர் நேர்காணல் செய்கிறார் (26.4.2 பார்க்கவும்). ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்குத் தகுந்த வயதுடைய சகோதரர்களையும் அவர் நேர்காணல் செய்கிறார். உறுப்பினர் திடப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவர் பொதுவாக இந்த நேர்காணல்களை நடத்துவார்.
23.5.2
மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகள்
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் தொகுதியின் அன்றாட முயற்சிகளை மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமைகள் நடத்துகின்றன (8.2.3 and 9.2.3 பார்க்கவும்).
இந்த தலைவர்களுக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:
-
சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும், இரட்சகரின் ஆசீர்வாதங்களைப் பெற மற்றவர்களை அழைக்கவும் தேவனின் பிள்ளைகளை நேசிக்க, உறுப்பினர்களுக்கு உணர்த்த உதவுங்கள்.
-
புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களுக்கு ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகளை நியமிக்கவும் (21.2.1 பார்க்கவும்).
-
தொகுதி ஊழியத் தலைவரின் பணியை வழிநடத்துங்கள்.
மூப்பர் குழுமத் தலைவர், ஒத்தாசைச் சங்கத் தலைவர் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவ ஒரு தலைமை உறுப்பினரை நியமிக்கிறார்கள். இந்த இரண்டு தலைமை உறுப்பினர்களும் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் (23.5.7 பார்க்கவும்).
23.5.3
தொகுதி ஊழியத் தலைவர்
ஒரு தொகுதி ஊழியத் தலைவரை அழைப்பதை தீர்மானிக்க, பிணையத் தலைவருடன் ஆயம் ஆலோசனை நடத்துகிறது. இந்த நபர் ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவராக இருக்க வேண்டும். இந்தத் தலைவர் அழைக்கப்படாவிட்டால், மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் ஒருவர் இந்தப் பாத்திரத்தை நிரப்புவார்.
தொகுதி ஊழியத் தலைவர் அவர்களின் ஊழியப் பொறுப்புகளில் மூப்பர் குழுமத் தலைமையையும், ஒத்தாசைச் சங்கத் தலைமையையும் ஆதரிக்கிறார். அவருக்கு பின்வரும் பொறுப்புகளும் உள்ளன:
-
தொகுதி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், தொகுதி ஊழியக்காரர்கள் மற்றும் முழுநேர ஊழியக்காரர்களின் பணியை ஒருங்கிணைக்கவும்.
-
வாராந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தவும் (23.5.7 பார்க்கவும்).
23.5.4
தொகுதி ஊழியக்காரர்கள்
23.1-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதின் மகிழ்ச்சியை தொகுதி உறுப்பினர்கள் அனுபவிக்க தொகுதி ஊழியக்காரர்கள் உதவுகிறார்கள். அவர்கள் தொகுதி ஊழியத் தலைவர் அல்லது இந்தப் பாத்திரத்தை நிரப்பும் மூப்பர் குழுமத் தலைமைகளின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுகிறார்கள்.
23.5.5
தொகுதி ஆலோசனைக் குழுவும் தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவும்
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களை பலப்படுத்துவது குறித்து தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டும். தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள தொகுதி ஊழியத் தலைவரை ஆயர் அழைக்கலாம்.
பின்வருவனவற்றைப் போல படிவங்கள் இந்த விவாதங்களுக்கு உதவும்:
தொகுதியில் உள்ள இளைஞர்களின் தேவைகளைப்பற்றி கலந்துரையாடுவதில், தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழு புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்கள் மற்றும் ஊழியக்காரர்களால் கற்பிக்கப்படும் இளைஞர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
23.5.7
ஒருங்கிணைப்புக் கூட்டங்கள்
சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்தவும் சுருக்கமான முறைசாரா கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும், நடத்தப்படுகின்றன. தொகுதி ஊழியத் தலைவர் அழைக்கப்பட்டால், அவர் இந்தக் கூட்டங்களை நடத்துகிறார். இல்லையெனில், இந்தப் பாத்திரத்தை நிரப்பும் மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் நடத்துகிறார்.
அழைக்கப்பட்ட மற்றவர்கள்:
-
நியமிக்கப்பட்ட ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழுமத் தலைமைகளின் உறுப்பினர்கள்.
-
தொகுதி ஊழியக்காரர்கள்.
-
ஆசாரியர் குழுமத்தில் உதவியாளர் (அல்லது தொகுயில் ஆசாரியர்கள் இல்லாவிட்டால் ஆசிரியர்கள் அல்லது உதவிக்காரர் குழுமத் தலைவர்).
-
இளம் பெண்கள் வகுப்பில் மூத்த தலைமை உறுப்பினர்.
-
முழுநேர ஊழியக்காரர்கள்.