“22. உலகப்பிரகாரத் தேவைகளை வழங்குதலும் சுயசார்பை வளர்த்தலும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“22. உலகப்பிரகாரத் தேவைகளை வழங்குதலும் சுயசார்பை வளர்த்தலும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
22.
உலகப்பிரகாரத் தேவைகளை வழங்குதலும் சுயசார்பை வளர்த்தலும்
22.0
முன்னுரை
“ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்கவும், … துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், … ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும்,” சபையின் உறுப்பினர்கள் உடன்படிக்கை செய்கிறார்கள் (மோசியா 18:8–9).
சபை உறுப்பினர்கள் சிரத்தையுடன் வேலை செய்வதன் மூலமும் கர்த்தருடைய உதவியினாலும் தங்கள் சுயசார்பை வலுப்படுத்த ஆலோசனை வழங்கப்படுகிறார்கள். சுயசார்பு என்பது தனக்கும் குடும்பத்திற்கும் வாழ்க்கையின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார தேவைகளை வழங்குவதற்கான திறன், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியாகும்.
தனிப்பட்ட மற்றும் குடும்ப முயற்சிகள்
22.1
சுயசார்பை வளர்க்கவும்
கர்த்தருடைய உதவியுடன், உறுப்பினர்கள் பின்வரும் வழிகளில் சுயசார்பை வளர்க்கிறார்கள்:
-
ஆவிக்குரிய, சரீர மற்றும் உணர்ச்சி வலிமையை வளர்த்துக் கொள்ளுகிறார்கள்.
-
கல்வி, வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
-
உலகப்பிரகார ஆயத்தத்தை மேம்படுத்துகிறார்கள்
22.1.4
உலகப்பிரகார ஆயத்தம்
ஆயத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வேதங்கள் போதிக்கின்றன (எசேக்கியல் 38:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:30 பார்க்கவும்). உறுப்பினர்கள் தங்களை, தங்கள் குடும்பத்தினர் மற்றும் பிறரைத் தேவைப்படும் நேரங்களில் கவனித்துக் கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உறுப்பினர்கள் தங்கள் நிதி ஆயத்தத்தை அதிகரிக்க:
-
தசமபாகம் மற்றும் காணிக்கைகளைச் செலுத்துதல் (மல்கியா 3:8–12 பார்க்கவும்).
-
முடிந்தவரை கடனை தீர்த்தல் மற்றும் தவிர்த்தல்.
-
வரவுசெலவுக்குள் ஆயத்தம் செய்து வாழுதல்.
-
வருங்காலத்திற்காக சேமித்தல்.
-
தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும், அவர்களுக்கு உதவ பொருத்தமான கல்வியைப் பெறுதல் (22.3.3 பார்க்கவும்).
அவசரநிலையின் போது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதற்கான திட்டத்தை உருவாக்குவதும் தயார்நிலையில் அடங்கும். உணவு, தண்ணீர் மற்றும் பிற தேவைகளின் குறுகிய கால மற்றும் நீண்ட கால கையிருப்பை உருவாக்க உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
22.2
உலகப்பிரகார மற்றும் உணர்வுபூர்வ தேவையிலிருப்போருக்கு ஊழியம் செய்யுங்கள்
கர்த்தருடைய சீடர்கள் “ஒருவரோடொருவர் அன்புகூரவும், ஒருவருக்கொருவர் சேவை செய்யவும்” கர்பிக்கப்படுகிறார்கள் மற்றும் “உதவியை நாடி நிற்போருக்கு உதவவும்” கற்பிக்கப்படுகிறார்கள். (மோசியா 4:15–16). அவர்களின் தனித்துவமான பலம் மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டு, இரட்சகர் அவர்களைப் பார்ப்பது போல் உறுப்பினர்கள் மற்றவர்களைப் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இந்தத் தேவைகளில் உணவு, உடை, வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் உணர்வுபூர்வ நல்வாழ்வு ஆகியவை அடங்கும்.
22.2.1
கர்த்தரின் பண்டகசாலை
உலகப் பிரகார தேவைகள் உள்ளவர்களுக்கு உதவ சபைக்கு கிடைக்கும் அனைத்து வளங்களும் கர்த்தருடைய பண்டகசாலை என்று அழைக்கப்படுகின்றன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:18–19 பார்க்கவும்). தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காக உறுப்பினர்களின் நேரம், திறமைகள், இரக்கம், பொருட்கள் மற்றும் நிதி வளங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கர்த்தருடைய பண்டகசாலை ஒவ்வொரு தொகுதியிலும் பிணையங்களிலும் உள்ளன. தொகுதி மற்றும் பிணைய உறுப்பினர்களால் வழங்கப்படும் அறிவு, திறன்கள் மற்றும் சேவையின் மூலம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்கு தீர்வுகளைக் கண்டறிய தலைவர்கள் அடிக்கடி உதவலாம்.
22.2.2
உபவாசம் மற்றும் உபவாசக் காணிக்கைகளுக்கான நியாயப்பிரமாணம்
கர்த்தர் தம் மக்களை ஆசீர்வதிப்பதற்காகவும், தேவையிலிருப்போருக்கு சேவை செய்வதற்கான வழியை வழங்குவதற்காகவும் உபவாசம் மற்றும் உபவாசக் காணிக்கைகளுக்கான நியாயப்பிரமாணத்தை நிறுவியுள்ளார். உபவாசத்தின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுவதால், உறுப்பினர்கள் கர்த்தருடன் நெருக்கமாகி ஆவிக்குரிய வலிமையை அதிகரிக்கிறார்கள். (ஏசாயா 58: 6– 12; மல்கியா 3: 8–12 பார்க்கவும்.)
எந்த நேரத்திலும் உபவாசம் மேற்கொள்ளலாம். இருப்பினும், உறுப்பினர்கள் வழக்கமாக மாதத்தின் முதல் ஓய்வுநாளை உபவாசத்தின் நாளாகக் கைக்கொள்ளுகிறார்கள். உபவாச நாள் பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
-
ஜெபித்தல்
-
24 மணிநேரத்திற்கு உணவு மற்றும் பானம் இல்லாமல் இருத்தல் (உடல் திறன் இருந்தால்)
-
தாராளமான உபவாசக் காணிக்கைகளை வழங்குதல்
உபவாசக் காணிக்கை என்பது தேவைப்படுபவர்களுக்கு உதவும் நன்கொடை. உறுப்பினர்கள் உபவாசம் இருக்கும்போது, சாப்பிடாத உணவின் மதிப்புக்கு சமமான காணிக்கையைக் கொடுக்க அழைக்கப்படுகிறார்கள்.
உறுப்பினர்கள் தங்களின் உபவாசக் காணிக்கை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளின் படிவத்தை ஆயரிடமோ அல்லது அவரது ஆலோசகர்களிடமோ கொடுக்கலாம். சில பகுதிகளில், அவர்கள் தங்கள் நன்கொடைகளை ஆன்லைனிலும் செய்யலாம்.
தலைவர்களின் முயற்சிகள்
22.3
சுயசார்பைக் வளர்ப்பதற்கும் தேவையிலிருப்போருக்கு ஊழியம் செய்வதற்குமான மாதிரி
22.3.1
தேவையிலிருப்போரை நாடவும்
தேவையிலிருப்போரை தேடிக் கவனித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்தப் பொறுப்பு ஆயருக்கு உள்ளது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:112 பார்க்கவும்). இந்த பொறுப்புடன் ஆயருக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றவர்கள்:
-
ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள்.
-
ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழும தலைமைகள்.
-
ஆயரின் ஆலோசகர்கள்.
-
தொகுதி ஆலோசனைக்குழுவின் பிற உறுப்பினர்கள்.
22.3.2
குறுகிய கால தேவைகளை மதிப்பிடவும், நிவர்த்தி செய்யவும் உறுப்பினர்களுக்கு உதவவும்
உறுப்பினர்கள் தங்கள் சொந்த முயற்சிகள் மற்றும் கூட்டுக் குடும்பத்தின் உதவி மூலம் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்கின்றனர். இது போதுமானதாக இல்லாதபோது, உறுப்பினர்களுக்கு பின்வரும் பிற ஆதாரங்களிலிருந்து உதவி தேவைப்படலாம்:
-
அரசு மற்றும் சமூக ஆதாரங்கள் (22.12 பார்க்கவும்).
-
சபை உதவி
சபை உதவியில் உணவு, சுகாதார பொருட்கள், உடைகள், வீடுகள் அல்லது பிற அடிப்படைகள் போன்ற குறுகிய கால தேவைகளுக்கான உதவியும் அடங்கலாம். இந்தத் தேவைகளுக்குப் பதிலளிக்க ஆயர்கள் உபவாசக் காணிக்கைகளைப் பயன்படுத்தலாம். ஆயர்களின் ஆணைகள் கிடைக்கும் இடங்களில், ஆயர்கள் பொதுவாக உணவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களை வழங்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர் (“Bishops’ Orders and Referrals” in Leader and Clerk Resources [LCR] பார்க்கவும்).
22.3.3
நீண்ட கால சுயசார்பை உருவாக்க உறுப்பினர்களுக்கு உதவவும்
நீண்ட கால சவால்களை எதிர்கொள்ள உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தேவைப்படலாம். கல்வி, தொழில் பயிற்சி அல்லது பிற ஆதாரங்கள் அவர்களுக்கு சுயசார்பை உருவாக்கவும், அவர்களின் நீண்ட கால தேவைகளை வழங்கவும் அவர்களுக்கு உதவும்.
சுய-சார்புத் திட்டம் உறுப்பினர்கள் தங்கள் பலம் மற்றும் தேவைகளை அடையாளம் காண உதவுகிறது. பயனுள்ள வளங்களை அடையாளம் காணவும் இது அவர்களுக்கு உதவுகிறது. சபை உதவியை கருத்தில் கொள்ளும் ஒவ்வொரு முறையும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.
22.3.4
உணர்வுபூர்வ தேவையிலிருப்போருக்கு ஊழியம் செய்யவும்
பல உறுப்பினர்கள் உணர்ச்சிகரமான சவால்களை அனுபவிக்கின்றனர். ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள் மற்றும் தொகுதி தலைவர்கள் இந்த சவால்களுடனிருக்கும் உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு கருவியாக இருக்க முடியும்.
22.4
சபை உதவியை வழங்குவதற்கான கொள்கைகள்
கர்த்தருடைய உதவியால், உறுப்பினர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வழங்க முற்படுகிறார்கள்.
சபை உதவி என்பது உறுப்பினர்கள் சாராதிருப்பதை வளர்க்க உதவுவதாகும், சார்ந்திருப்பதை அல்ல. கொடுக்கப்படுகிற எந்த உதவியும் உறுப்பினர்களை சுயசார்புடையவர்களாக மாறுவதற்கான தங்கள் முயற்சிகளில் பெலப்படுத்தவேண்டும்.
22.4.1
தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்பை ஊக்குவிக்கவும்
தங்கள் சொந்த உலகப்பிரகார, உணர்ச்சிபூர்வ மற்றும் ஆவிக்குரிய நல்வாழ்வுக்கு முதன்மையான பொறுப்பு தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உள்ளது என்று தலைவர்கள் கற்பிக்கிறார்கள்.
சபை உதவியை வழங்குவதற்கு முன், ஆயர் (அல்லது அவர் நியமிக்கும் மற்றொரு தலைவர் அல்லது உறுப்பினர்) தங்கள் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன வளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுப்பினர்களுடன் மதிப்பாய்வு செய்கிறார்.
22.4.2
அத்தியாவசிய தேவைகளுக்காக தற்காலிக உதவியை வழங்கவும்
உறுப்பினர்கள் சுயசார்புடையவர்களாக மாற முயற்சி செய்யும்போது தற்காலிகமாக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சபை உதவியின் குறிக்கோள்.
வழங்கப்பட்ட உதவியின் அளவு மற்றும் கால அளவைக் கருத்தில் கொள்ளும்போது ஆயர்கள் நல்ல தீர்ப்பைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆவிக்குரிய வழிகாட்டுதலை நாட வேண்டும். சார்புநிலையை உருவாக்காமல் அவர்கள் கருணையோடும் தாராளமாகவும் இருக்க வேண்டும்.
22.4.3
பணத்திற்கு பதிலாக ஆதாரங்கள் அல்லது சேவைகளை வழங்கவும்
முடிந்தால், ஆயர் பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, உறுப்பினர்களுக்கு மளிகைப் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க அவர் உபவாசக் காணிக்கைகளை அல்லது ஆயர்களின் ஆணைகளைப் பயன்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி பிற தேவைகளுக்குச் செலுத்தலாம்.
இது போதுமானதாக இல்லாதபோது, அத்தியாவசிய கட்டணங்களை தற்காலிகமாக செலுத்த உபவாசக் காணிக்கைகளைப் பயன்படுத்தி ஆயர் உதவலாம் (22.5.2 பார்க்கவும்).
22.4.4
வேலை அல்லது சேவை வாய்ப்புகளை வழங்கவும்
உதவி பெறுபவர்களை தங்கள் திறமைக்கு ஏற்ப பணி செய்ய அல்லது சேவை செய்ய ஆயர்கள் அழைக்கிறார்கள். இது உறுப்பினர்கள் கண்ணியத்தின் உணர்வை பராமரிக்க உதவுகிறது. இது அவர்களின் சுயசார்பின் திறனையும் அதிகரிக்கிறது.
22.4.5
சபை உதவியைப்பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருங்கள்
சபை உதவி தேவைப்படும் உறுப்பினர்களைப்பற்றிய எந்த தகவலையும் ஆயர் மற்றும் பிற தொகுதி தலைவர்கள் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது உறுப்பினர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது.
22.5
சபை உதவியை வழங்குவதற்கான செயற்திட்டங்கள்
சபைத் தலைவர்கள், உணவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களுக்காக உபவாசக் காணிக்கைகள் அல்லது ஆயர்களின் ஆணைகள் மூலம் உதவி வழங்கும்போது இந்தப் பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
22.5.1
சபை உதவி பெறுபவர்கள் தொடர்பான கொள்கைகள்
22.5.1.1
தொகுதி உறுப்பினர்களுக்கு உதவி
பொதுவாக, சபை உதவியைப் பெறும் உறுப்பினர்கள் தொகுதி எல்லையில் வசிக்க வேண்டும் மற்றும் தொகுதியில் தங்கள் உறுப்பினர் பதிவை வைத்திருக்க வேண்டும். உறுப்பினர் சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறாரா அல்லது சபை தரங்களைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல் உதவி வழங்கப்படலாம்.
22.5.1.2
ஆயர்களுக்கும் பிணையத் தலைவர்களுக்கும் உதவி
ஒரு ஆயர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோஉபவாசக் காணிக்கைகளை பயன்படுத்துவதற்கு முன் மற்றும் ஆயரின் ஆணையை அங்கீகரிக்கும் முன் பிணையத் தலைவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை.
22.5.1.4
சபையின் உறுப்பினரல்லாதவர்களுக்கு உதவி
சபையில் உறுப்பினர்களாக இல்லாத நபர்கள் பொதுவாக உள்ளூர் சமூக ஆதாரங்களுக்கு உதவிக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். அரிதான சந்தர்ப்பங்களில், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின்படி, ஆயர் அவர்களுக்கு உபவாசக் காணிக்கைகள் அல்லது ஆயர்களின் ஆணைகளுக்கு உதவலாம்.
22.5.2
உபவாசக் காணிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான கொள்கைகள்
22.5.2.1
மருத்துவ மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு
ஒவ்வொரு சபைப் பகுதியும் மருத்துவ, பல் அல்லது மனநலச் செலவுகளைச் செலுத்த உபவாசக் காணிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் வரம்புகளை நிறுவியுள்ளது.
ஒப்புதல் தொகைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, “மருத்துவச் செலவுகளுக்கான உபவாசக் காணிக்கைகளைப் பயன்படுத்துதல்” என்பதைப் பார்க்கவும்.
22.5.2.3
உபவாசக் காணிக்கைகளை திரும்ப செலுத்துதல்
உறுப்பினர்கள் சபையிலிருந்து பெறும் உபவாசக் காணிக்கைகளை திரும்ப செலுத்துவதில்லை.
22.5.2.4
தொகுதி உபவாசக் காணிக்கை செலவு தொகைகள்
தொகுதி உறுப்பினர்களுக்கான உபவாசக் காணிக்கை உதவித்தொகையை தொகுதிக்குள் சேகரிக்கப்படும் நன்கொடைகளின் அளவிற்குள் ஆயர்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை.
22.5.3
பணம் செலுத்துவதற்கான செயற்திட்டங்கள்
முடிந்தால், பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் வணிகங்களுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட வேண்டும்.
22.5.4
ஒரு ஆயர் அல்லது பிணையத் தலைவருக்கு பயனளிக்கும் பணம் செலுத்துவதற்கான செயற்திட்டங்கள்
உறுப்பினர்களுக்கு உபவாசக் காணிக்கை உதவிகளை வழங்கும் போது, ஒரு ஆயர் தனிப்பட்ட முறையில் தனக்குப் பயனளிக்கும் வகையில் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பணம் செலுத்த நிதியைப் பயன்படுத்தக்கூடாது.
ஒரு உறுப்பினருக்கான உபவாசக் காணிக்கை பணம் பிணையத் தலைவருக்கு அல்லது அவருக்குச் சொந்தமான வணிகத்திற்கு பயனளிக்கும் என்றால், பிரதேச தலைமையின் ஒப்புதல் தேவை.
22.6
தொகுதி தலைவர்களின் பங்கு
22.6.1
ஆயரும் அவரது ஆலோசகர்களும்
உலகப்பிரகாரத் தேவைகள் உள்ளவர்களைத் தேடிக் கவனித்துக் கொள்ள ஆயருக்கு ஒரு தெய்வீக ஆணை உள்ளது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:112 பார்க்கவும்). அவர் இந்தப் பணியின் பெரும்பகுதியை ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழுமத் தலைமைகளுக்கு பொறுப்பளிக்கிறார். இருப்பினும், சில கடமைகள் ஆயரால் மட்டுமே செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஆயர்:
-
வழங்கப்பட்டதற்காலிக உதவியின் வகை, தொகை மற்றும் கால அளவை தீர்மானிக்கிறார்.
-
உபவாசக் காணிக்கை உதவியையும் (22.4 மற்றும் 22.5 பார்க்கவும்) மற்றும் உணவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களுக்கான ஆயர்களின் உத்தரவுகளை அங்கீகரிக்கிறார் (22.13 பார்க்கவும்).
-
உறுப்பினர்களின் சுயசார்பு திட்டங்களை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்கிறார். தேவைக்கேற்ப அந்தத் திட்டங்களை தொடர்ந்து கவனிக்க மற்ற தொகுதி தலைவர்களை அவர் நியமிக்கிறார்.
ஆயருக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் பின்வரும் பொறுப்புகள் உள்ளன:
-
(1) உலகப்பிரகார மற்றும் உணர்வுபூர்வ தேவைகளிலிருப்போரைக் கவனித்துக்கொள்வது மற்றும் (2) சுயசார்பைக் வளர்ப்பது தொடர்பான கொள்கைகளையும் ஆசீர்வாதங்களையும் கற்றுக்கொடுங்கள் (22.1 பார்க்கவும்).
-
உபவாசத்தின் நியாயப்பிரமாணத்தை கற்றுக்கொடுங்கள் மற்றும் தாராளமான உபவாசக் காணிக்கைகளை வழங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கவும் (22.2.2 பார்க்கவும்).
-
உபவாசக் காணிக்கைகளின் சேகரிப்பு மற்றும் கணக்கீட்டை மேற்பார்வையிடவும் (34.3.2 பார்க்கவும்).
22.6.2
ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழும தலைமைகள்
ஆயரின் வழிகாட்டுதலின் கீழ், தொகுதியில் தேவையிலிருப்போரைக் கவனிப்பதில் ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழும தலைமைகள் முக்கியப் பங்காற்றுகின்றனர் (8.2.2 மற்றும் 9.2.2 பார்க்கவும்). இந்த தலைவர்கள் தொகுதி உறுப்பினர்களுக்கு கற்பிக்கிறார்கள்:
-
தேவையிலிருப்போருக்கு ஊழியம் செய்யவும்.
-
உபவாச நியாயப்பிரமாணத்தின்படி வாழவும்.
-
சுயசார்பை வளர்க்கவும்
-
தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆயத்த நிலையை அதிகரிக்கவும்.
22.6.3
சகோதர சகோதரிகளுக்கு ஊழியம் செய்தல்
ஆவிக்குரிய, உலகப்பிரகார தேவைகளுக்கான உதவி பெரும்பாலும் சகோதர சகோதரிகளுக்கு ஊழியம் செய்வதில் ஆரம்பமாகிறது (21.1 பார்க்கவும்). அவர்கள் சேவை செய்பவர்களின் தேவைகளை அவர்களது மூப்பர் குழும அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் தலைமைகளுக்கு ஊழியம் செய்தலின் நேர்காணல்களிலும் மற்ற நேரங்களிலும் தெரிவிக்கின்றனர். இரகசியமான தேவைகளை அவர்கள் நேரடியாக ஆயருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
22.7
தொகுதி ஆலோசனைக்குழுவின் பங்கு
தேவையிலிருப்போரை எவ்வாறு கவனித்துக்கொள்வது மற்றும் அவர்கள் சுயசார்படைய உதவுவது தொகுதி ஆலோசனைக்குழுவின் முக்கியப் பங்கு (4.4 பார்க்கவும்). ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டங்களை ஊழியம் செய்யும் நேர்காணல்கள் மற்றும் தேவையிலிருப்பவர்களுடன் தங்கள் சொந்தத் தொடர்புகளிலிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் உருவாக்குகிறார்கள். உறுப்பினர்களின் தேவைகளைப்பற்றி விவாதிப்பதில், இரகசியத்தன்மையைக் கோருபவர்களின் விருப்பங்களை ஆலோசனைக் குழு மதிக்கிறது.
22.8
தொகுதி இளைஞர் ஆலோசனைக்குழுவின் பங்கு
தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவின் ஒரு நோக்கம் இளைஞர்கள் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தப்படுத்தப்பட்ட பின்பற்றுபவர்களாக மாற உதவுவதாகும் (29.2.6 பார்க்கவும்).
ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ், தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழு அவர்களின் தொகுதி மற்றும் சமூகத்தில் தேவையிலிருப்பவர்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளைத் திட்டமிடுகிறது.