கையேடுகளும் அழைப்புகளும்
14. ஒற்றை உறுப்பினர்கள்


“14. ஒற்றை உறுப்பினர்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“14. ஒற்றை உறுப்பினர்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

மக்கள் பேசிக்கொண்டிருத்தல்

14.

ஒற்றை உறுப்பினர்கள்

14.0

முன்னுரை

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது விதவையான ஆண்களும் பெண்களும் சபை உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் அனைவரும் நம்பிக்கையைக் கண்டறிவது முக்கியம் (ஏத்தேர் 12:4 பார்க்கவும்). பின்வரும் நித்திய சத்தியங்கள் அத்தகைய நம்பிக்கையை வளர்க்க உதவும்:

  • சுவிசேஷ உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதில் விசுவாசமுள்ள ஒவ்வொருவரும் மேன்மையடைதலுக்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதை வேதங்களும் பிற்கால தீர்க்கதரிசிகளும் உறுதிப்படுத்துகின்றனர்.

  • மேன்மையடைதலின் ஆசீர்வாதங்கள் அருளப்படும் துல்லியமான நேரம் மற்றும் முறை அனைத்தும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளது (மோசியா 2:41 பார்க்கவும்).

  • கர்த்தருக்குக் காத்திருப்பது தொடர்ந்து கீழ்ப்படிதல் மற்றும் அவரிடத்தில் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது (ஏசாயா 64:4 பார்க்கவும்).

  • தேவன் தம் பிள்ளைகள் அனைவருக்கும் நித்திய ஜீவனை வழங்குகிறார். இரட்சகரின் கிருபையான மன்னிப்புக்கு தகுதியுடையவர்கள் மற்றும் அவருடைய கட்டளைகளின்படி வாழ்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். (மோசியா 26:30; மரோனி 6:8 பார்க்கவும்.)

  • இந்த உறுதிமொழிகளின் மீதான நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் வேரூன்றியுள்ளது. அவரது கிருபையால், அநித்தியம் தொடர்பான அனைத்தும் சரியாக அமைக்கப்பட்டன (ஆல்மா 7:11–13 பார்க்கவும்).

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் எல்லா உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளிலும் பிணையங்களிலும் உதவ கர்த்தர் விரும்புகிறார் (1 கொரிந்தியர் 12:12–27 பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின்படி, ஒற்றை உறுப்பினர்கள் தலைமை மற்றும் கற்பித்தல் பதவிகளுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

இந்த அத்தியாயத்தில்:

  • “ஒற்றை உறுப்பினர்கள்” என்பது தற்போது திருமணம் செய்து கொள்ளாத சபையின் அனைத்து வயது வந்த உறுப்பினர்களையும் குறிக்கிறது.

  • “இளம் ஒற்றை வயது வந்தவர்கள்” என்பது 18–30 வயதுடையவர்களைக் குறிக்கிறது.

  • “ஒற்றை வயது வந்தவர்கள்” என்பது 31 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களைக் குறிக்கிறது.

14.1

புவியியல் அங்கங்களில் ஒற்றை உறுப்பினர்கள்

14.1.1

பிணையத் தலைமை

14.1.1.2

ஒற்றை இளம் வயது வந்தோர் மற்றும் ஒற்றை வயது வந்தோர் குழுக்கள்

ஒரு ஒற்றை இளம் வயது வந்தோருக்கான குழுவை பிணையத் தலைமை உருவாக்குகிறது.

பிணையத் தலைமை ஒரு வயது வந்தோர் குழுவையும் உருவாக்கலாம்.

நட்பு மற்றும் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மூலம் உறுப்பினர்களை ஆதரிக்க குழுக்கள் நாடுகின்றன (14.2 பார்க்கவும்).

14.1.2

தொகுதி தலைமை

14.1.2.1

ஆயம்

இரட்சிப்பின் மேன்மையடைதலின் பணியில் ஒற்றை உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கு ஆயம் முக்கியமானது. ஒற்றை உறுப்பினர்களுக்கான அர்த்தமுள்ள அழைப்புகள் மற்றும் பணிகளை அடையாளம் காண தொகுதி ஆலோசனைக் குழுவுடன் அவர்கள் பணியாற்றுகிறார்கள். ஒற்றைப் பெற்றோரின் தேவைகளை அவர்கள் அடையாளம்கண்டு, உதவ முயலுகிறார்கள்.

  • ஆயத்தின் ஒரு உறுப்பினர் ஒவ்வொரு ஒற்றை இளம் வயது வந்தோரையும் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது சந்திக்கிறார்.

  • ஆயம் ஒரு தொகுதி ஒற்றை இளம் வயது வந்தோர் குழுவை அமைக்கலாம்.

14.1.2.2

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைமை உறுப்பினர்களுக்கு பணிக்கப்பட்ட, ஒற்றை இளம் வயது வந்தோர்

மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைமைப் பதவிகளில் ஒரு உறுப்பினரை ஒற்றை இளம் வயது வந்தோருக்கு ஆதரவளிக்க பணிக்கலாம். இந்த தலைமை உறுப்பினர்கள் ஒற்றை இளம் வயது வந்தோரின் பலத்தை அறிந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறார்கள்.

மூப்பர் குழுமத் தலைவரும், ஒத்தாசைச் சங்கத் தலைவரும் இந்த முயற்சிகள் குறித்து தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் அறிக்கையளிக்கலாம்.

14.1.2.3

ஒற்றை இளம் வயது வந்தோர் தலைவர்கள்

பல ஒற்றை இளம் வயது வந்தோர் உள்ள ஒரு தொகுதியில், ஆயம் ஒரு இளம் ஒற்றை வயது வந்த ஆண் மற்றும் பெண்ணை ஒற்றை இளம் வயது வந்த தலைவர்கள் என்று அழைக்கலாம். அவர்களின் பொறுப்புகளில் பின்வருவன அடங்கும்:

  • இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் ஒற்றை இளம் வயது வந்தவர்கள் பங்கேற்க உதவுதல் (14.2 பார்க்கவும்).

  • பிணைய ஒற்றை இளம் வயது வந்தவர் குழுவில் பணியாற்றுதல்.

  • தொகுதி ஒற்றை இளம் வயது வந்தோருக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டால் அதை வழிநடத்துதல்.

  • மூப்பர் குழுமத் தலைமையுடனும்ம், ஒத்தாசைச் சங்கத் தலைமையுடனும் அடிக்கடி சந்தித்தல். இந்தக் கூட்டங்களில், ஒற்றை இளம் வயது வந்தோரின் பலம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வாறு உதவுவது என்பதைப்பற்றி அவர்கள் கலந்துரையாடுகின்றனர். அவர்கள் ஒற்றை இளம் வயது வந்தவர்களுக்கு ஊழியம் செய்வதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

14.2

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்றல்

14.2.1

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்

14.2.1.1

இல்ல மாலையும் சுவிசேஷப் படிப்பும்

பங்கேற்க விரும்பும் தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள் ஒற்றை வயது வந்தவர்களுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இல்ல மாலைக் குழுக்களையும் ஒற்றை இளம் வயது வந்தோருக்கான பிற குழுக்களையும் அமைக்கலாம்.

14.2.1.3

நிகழ்ச்சிகள்

தொகுதி அல்லது பிணையத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒற்றை இளம் வயது வந்தவர்கள், குறிப்பாக அவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாம், பங்கேற்கலாம். எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:

  • ஆலய வருகைகள்.

  • குடும்ப வரலாறு பணி.

  • சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்

  • சமூக சேவை.

  • இசையும் கலாச்சார நிகழ்வுகளும்.

  • விளையாட்டு.

பிணையத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒற்றை வயது வந்தவர்கள் பிணைய மட்டத்தில் இதே போன்ற நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாம்.