கையேடுகளும் அழைப்புகளும்
12. ஆரம்ப வகுப்பு


“12. ஆரம்ப வகுப்பு,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“12. ஆரம்ப வகுப்பு,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

குடும்பத்தினர் வேதங்களை பிடித்திருத்தல்

12.

ஆரம்ப வகுப்பு

12.1

நோக்கமும் அமைப்பும்

ஆரம்ப வகுப்பு என்பது பிள்ளைகளுக்கான வீட்டை மையமாகக் கொண்ட, சபை ஆதரவு அமைப்பு. இது 18 மாதங்கள் முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கானது.

12.1.1

நோக்கங்கள்

ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுக்கு உதவுகிறது.

  • அவர்களுடைய பரலோக பிதாவின் அன்பை உணர்ந்து, அவருடைய மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றி அறிந்து கொள்ள.

  • இயேசு கிறிஸ்துவையும் பரலோக பிதாவின் திட்டத்தில் அவருடைய பங்கையும்பற்றி அறிந்து கொள்ள.

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிந்துகொண்டு அதன்படி வாழ.

  • பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் மூலம் உணரவும், அடையாளம் காணவும் செயல்பட.

  • பரிசுத்த உடன்படிக்கைகளுக்குத் தயாராகி, செய்து, கைக்கொள்ள.

  • இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்க.

12.1.3

வகுப்புகள்

போதுமான பிள்ளைகள் இருக்கும்போது, அவர்கள் வயதின் அடிப்படையில் வகுப்புகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

பிள்ளைகள் பொதுவாக 12 வயதை அடையும் ஆண்டின் ஜனுவரியில் ஆரம்ப வகுப்பிலிருந்து இளம் பெண்கள் அல்லது உதவிக்காரர்கள் குழுமத்திற்கு முன்னேறுவார்கள்.

12.1.4

பாடும் நேரம்

பரலோக பிதாவின் அன்பை உணரவும், அவருடைய மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றி அறிந்து கொள்ளவும் பாடும் நேரம் பிள்ளைகளுக்கு உதவுகிறது. சுவிசேஷக் கொள்கைகளைப்பற்றி பிள்ளைகள் பாடும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களின் உண்மைத்தன்மைக்கு சாட்சியமளிக்கிறார்.

பிள்ளைகள் தங்கள் வகுப்புகளிலும் வீட்டிலும் கற்றுக்கொண்டிருக்கும் சுவிசேஷக் கொள்கைகளை வலுப்படுத்த, ஆரம்ப வகுப்புத் தலைமையும் இசைத் தலைவரும் ஒவ்வொரு மாதத்திற்கும் பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

12.1.5

சிறுவர் பள்ளி

18 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான பிள்ளைகள் பரலோக பிதாவின் அன்பை உணரவும் அவருடைய மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றி அறியவும் சிறுவர் பள்ளி உதவுகிறது.

12.2

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்றல்

12.2.1

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்

12.2.1.2

சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதல்

ஞாயிறு ஆரம்ப வகுப்பு கூட்டங்கள். ஆரம்ப வகுப்புத் தலைமையின் ஒரு உறுப்பினர் தொடங்குகிறார்.

அட்டவணை பின்வருமாறு:

கூட்டத்தின் பகுதி

நேரம்

கூட்டத்தின் பகுதி

தொடக்கம் (ஜெபம், வசனம் அல்லது விசுவாசப் பிரமாணங்கள், மற்றும் செய்தி—அனைத்தும் பிள்ளைகளால் கொடுக்கப்படுகிறது)

நேரம்

5 நிமிடங்கள்

கூட்டத்தின் பகுதி

பாடும் நேரம்

நேரம்

20 நிமிடங்கள்

கூட்டத்தின் பகுதி

வகுப்புகளுக்கு மாறுதல்

நேரம்

5 நிமிடங்கள்

கூட்டத்தின் பகுதி

வகுப்புகளும் நிறைவு ஜெபமும்

நேரம்

20 நிமிடங்கள்

18 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான பிள்ளைகளுக்கான சிறுவர் பள்ளி 50 நிமிடங்கள் நீடிக்கும். உங்கள் சிறுபிள்ளைகளைப் பாருங்கள் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையை வழங்குகிறது.

பிள்ளைகளின் திருவிருந்துக் கூட்ட நிகழ்ச்சி. வருடத்தின் கடைசி சில மாதங்களில் வருடாந்தர குழந்தைகளின் திருவிருந்து கூட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆரம்ப வகுப்புத் தலைவரும் இசைத் தலைவரும் ஜெபத்துடன் நிகழ்ச்சியைத் திட்டமிடுகின்றனர். ஆயம் வழிநடத்துகிறது. பி்ள்ளைகள் பாடலாம், உரையாற்றலாம், கதைகள், வேத வசனங்கள் அல்லது சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆலயம் மற்றும் ஆசாரியத்துவ ஆயத்தக் கூட்டம். ஒவ்வொரு ஆண்டும் ஆலயம் மற்றும் ஆசாரியத்துவ ஆயத்தக் கூட்டத்தை ஆரம்ப வகுப்புத் தலைமை திட்டமிடுகிறது. ஆயம் வழிநடத்துகிறது. கூட்டம் 10 வயது பிள்ளைகளுக்கானது. பெற்றோர் அழைக்கப்படுகிறார்கள்.

12.2.1.3

சேவையும் நிகழ்ச்சிகளும்

அவர்கள் 8 வயதை அடையும் ஆண்டின் ஜனுவரி ஆரம்பத்தில், பிள்ளைகள் ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கலாம்.

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சிகள் ஞாயிறு அல்லது திங்கள் மாலைகள் தவிர மற்ற நேரங்களில் நடைபெறும்.

  • ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சிகள் சாத்தியமாகும்போது, ஒரு மாதத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றன.

  • சிறுவர்களும் சிறுமிகளும் பொதுவாக தனித்தனியாக சந்திக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் சில நிகழ்ச்சிகளுக்காகவோ அல்லது சில பிள்ளைகளே உள்ள இடங்களில் ஒன்றாகவோ இருக்கலாம்.

ஆரம்ப வகுப்பில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான வரவுசெலவு கணக்கு மற்றும் நிகழ்ச்சிகள் போதுமானதாகவும் சமமானதாகவும் இருப்பதை ஆயம் உறுதி செய்கிறது.

12.2.1.4

தனிப்பட்ட முன்னேற்றம்

இரட்சகரைப் போல் ஆவதற்கான அவர்களின் முயற்சிகளில், பிள்ளைகள்—அவர்கள் 8 வயதை எட்டிய ஆண்டின் ஆரம்பத்தில்—ஆவிக்குரிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சரீர ரீதியாகவும் மற்றும் அறிவு ரீதியாகவும் வளர இலக்குகளை நிர்ணயிக்க அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 2:52 பார்க்கவும்).

இலக்குகளை அமைக்கவும் பதிவு செய்யவும், அவர்கள் தனிப்பட்ட மேம்பாடு: பிள்ளைகளுக்கான வழிகாட்டி புத்தகத்தை பயன்படுத்தலாம்.

12.3

தொகுதி ஆரம்ப வகுப்புத் தலைமை

12.3.1

ஆயம்

பிள்ளைகள் உட்பட வளரும் தலைமுறைக்கு ஆயர் முதன்மையான பொறுப்பாவார். ஆரம்ப வகுப்புக்கான தனது முதன்மைப் பொறுப்பில் உதவ ஆயர் ஒரு ஆலோசகரை நியமிக்கலாம். ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஆரம்ப வகுப்புத் தலைவரை தவறாமல் சந்திக்கிறார்.

ஆயரும் அவரது ஆலோசகர்களும் ஆரம்ப வகுப்பில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள்.

12.3.2

ஆரம்ப வகுப்புத் தலைமை

தொகுதி ஆரம்ப வகுப்புத் தலைவராக பணியாற்ற ஒரு வயதுவந்த பெண்ணை ஆயர் அழைத்து, பணிக்கிறார்.

ஒரு சிறிய அங்கத்தில், ஆரம்ப வகுப்பு தலைவர் மட்டுமே, ஆரம்ப வகுப்பில் தலைவராக அழைக்கப்படலாம். இந்த வழக்கில், பாடங்கள், பாடும் நேரம் மற்றும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க பெற்றோருடன் இணைந்து அவர் பணியாற்றுகிறார். அங்கம் போதுமானதாக பெரிதாயிருந்தால், கூடுதல் அழைப்புகள் இந்த வரிசையில் நிரப்பப்படலாம்: ஆலோசகர்கள், இசைத் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் பள்ளி தலைவர்கள், செயலாளர் மற்றும் செயல்பாட்டுத் தலைவர்கள்.

உடன்படிக்கைப் பாதையில் பிரவேசிப்பதற்கும் முன்னேறுவதற்கும் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துவதற்கு ஆரம்ப வகுப்புத் தலைமை பெற்றோருக்கு உதவுகிறது.

இதை நிறைவேற்ற, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு ஆயத்தப்படுத்துவதற்கு உதவுவதற்கு, ஆரம்ப வகுப்புத் தலைவர், தலைமையின் ஒரு உறுப்பினரை நியமிக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு ஆலயம் மற்றும் ஆசாரியத்துவ ஆயத்தத்தில் பெற்றோர்களுக்கு உதவ, ஆரம்ப வகுப்புத் தலைவர் மற்றொரு தலைமை உறுப்பினரை நியமிக்கலாம்.

ஆரம்ப வகுப்புத் தலைவருக்கு பின்வரும் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. அவருடைய ஆலோசகர்கள் அவருக்கு உதவுகிறார்கள்.

  • தொகுதி ஆலோசனைக்குழுவில் பணியாற்றுவார்கள்.

  • ஆரம்ப வகுப்புத் தலைமைக் கூட்டங்களை தவறாமல் நடத்துகிறார்கள் மற்றும் ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட அவருடைய ஆலோசகரை சந்திக்கிறார்கள்.

  • கேட்கப்படும்போது, பதிவேட்டிலுள்ள பிள்ளைகளுக்கான ஞானஸ்நான ஆராதனையைத் திட்டமிட உதவுகிறார்கள் (18.7.2 பார்க்கவும்).

  • ஞாயிறு ஆரம்ப வகுப்புக் கூட்டங்கள் ஆரம்பிப்பதைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

  • தனிப்பட்ட பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் ஆரம்ப வகுப்பில் தலைவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்.

  • ஆரம்ப வகுப்புத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பொறுப்புகளை கற்றுக்கொடுக்கிறார்கள் மற்றும் அவர்களின் அழைப்புகளுக்கு அவர்களை வழிநடத்துவதன் மூலம் அந்த பொறுப்புகளில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் (இரட்சகரின் வழியில் கற்பித்தல் [2016], 38 பார்க்கவும்).

  • பதிவேடுகள், அறிக்கைகள், வரவு செலவு கணக்கு மற்றும் ஆரம்ப வகுப்பு நிதிகளைக் கண்காணிக்கவும்.

12.3.4

இசை தலைவரும் பியானோ கலைஞரும்

இசைத் தலைவரும் பியானோ கலைஞரும் பாடும் நேரத்தில் பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இசை மூலம் கற்பிக்கின்றனர்.

பியானோ கலைஞர் அல்லது பியானோ இல்லை என்றால், தலைவர்கள் இசைப் பதிவுகளைப் பயன்படுத்தலாம்.

12.3.5

ஆசிரியர்களும் சிறுவர் பள்ளித் தலைவர்களும்

ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களாகவும், சிறுவர் பள்ளித் தலைவர்களாகவும் பணியாற்ற ஆரம்ப வகுப்புத் தலைமை, ஆண்களையும் பெண்களையும் ஆயத்துக்கு பரிந்துரைக்கிறது. இந்த உறுப்பினர்கள் பிள்ளைகளின் குறிப்பிட்ட வயது பிரிவினருக்கு கற்பிக்கவும் ஊழியம் செய்யவும் அழைக்கப்படுகிறார்கள்.

ஆரம்ப வகுப்பு மற்றும் சிறுவர் பள்ளி தலைவர்கள், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு (வயது 3–11) மற்றும் உங்கள் சிறு பிள்ளைகளைப் பாருங்கள் (சிறுவர் பள்ளி) ஆகியவற்றிலிருந்து கற்பிக்கிறார்கள்.

12.3.6

நிகழ்ச்சி தலைவர்கள்

பிள்ளைகள் 8 வயதை எட்டும் ஆண்டு ஜனுவரி மாதம் ஆரம்பத்தில் சேவை மற்றும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் போது ஆரம்ப வகுப்பு செயல் தலைவர்கள் பிள்ளைகளுக்குச் சேவை செய்கிறார்கள் (12.2.1.3 பார்க்கவும்). ஆராதனையும் நிகழ்ச்சிகளும், இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். அவை வேடிக்கையாகவும் ஈடுபாடுள்ளதாகவும் இருக்கிறது.

12.5

கூடுதல் வழிகாட்டுதல்களும் கொள்கைகளும்

12.5.1

பிள்ளைகளைப் பாதுகாத்தல்

வயது வந்தோர் சபை அமைப்புகளில் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ளும்போது, குறைந்தது இரண்டு பொறுப்புள்ள வயது வந்தோர் இருக்க வேண்டும்.

பிள்ளைகளுடன் பணிபுரியும் அனைத்து வயதுவந்தோரும் பிள்ளைகள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு பயிற்சியை ஆதரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் (ProtectingChildren.ChurchofJesusChrist.org).