என்னைப் பின்பற்றி வாருங்கள்
அக்டோபர் 12–18. 3 நேபி 20–26: “நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்”


“அக்டோபர் 12–18. 3 நேபி 20–26: ‘நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“அக்டோபர் 12–18. 3 நேபி 20–26,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
கிறிஸ்து நேபியருக்கு தரிசனமாகுதல்

கிறிஸ்து நேபியருக்கு தரிசனமாகுதலின் சித்தரிப்பு–ஆண்ட்ரூ போஸ்லி

அக்டோபர் 12–18

3 நேபி 20–26

“நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்”

வேதங்களைப்பற்றி பேசும்போது, இயேசு அடிக்கடி தேடுங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் (3 நேபி 20:11; 23:1, 5). நீங்கள் 3 நேபி 20–26 வாசிக்கும்போது, நீங்கள் எதைத் தேடுவீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இஸ்ரவேலின் வீட்டார் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போதெல்லாம், அவர்கள் உங்களைப்பற்றி பேசுகிறார்கள் என்பதுபோல உணர்கிறீர்களா? நேபியரும் லாமானியரும் இஸ்ரவேலின் உண்மையான சந்ததியர், அவர்களது கதைகள் கூட எருசலேமில் தொடங்குகின்றன, ஆனால் அவர்களில் சிலருக்கு “தூரமாயிருக்கிறதும் நாம் அறியாததுமான தேசம்” போல எருசலேமே தோன்றியிருக்கலாம் (ஏலமன் 16:20). ஆம், அவர்கள் இஸ்ரவேல் விருட்சத்தின் கிளைகள், ஆனால் அவர்கள் அதன் சரீரத்திலிருந்து பிரிந்துபோனவர்கள் (ஆல்மா 26:36; மற்றும் 1 நேபி 15:12 பார்க்கவும்). ஆனால் இரட்சகர் அவர்களுக்குத் தரிசனமானபோது, அவருக்கு அவர்கள் காணாமற்போனவர்களல்ல என அவர்கள் அறிய விரும்பினார். “நீங்கள் இஸ்ரவேல் வீட்டைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள்,” அவர் சொன்னார், “நீங்கள் உடன்படிக்கையைச் சேர்ந்தவர்கள்” (3 நேபி 20:25). அதுபோன்ற ஒன்றை அவர் இன்றைக்கும் உங்களிடம் சொல்லலாம், ஏனெனில் ஞானஸ்நானம் பெற்று அவரோடு உடன்படிக்கைகள் செய்கிற யாரும் “உடன்படிக்கையின்” இஸ்ரவேல் வீட்டாராவர், நீங்கள் யாருடைய சந்ததி அல்லது எங்கு வசிக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. பிற வார்த்தைகளில், இஸ்ரவேல் வீட்டாரைப்பற்றி இயேசு பேசும்போது, அவர் உங்களைப்பற்றி பேசுகிறார். “உலகத்தின் சகல கோத்திரங்களையும்” ஆசீர்வதிக்கும் அறிவுரை உங்களுக்கே (3 நேபி 20:27). “மறுபடியும் விழித்திருந்து உன் பெலத்தைத் தரித்துக்கொள்” என்ற அழைப்பு உங்களுக்கே (3 நேபி 20:36). “என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்,” என்ற அவரது அருமையான வாக்குத்தத்தம், உங்களுக்கே (3 நேபி 22:10).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்

3 நேபி 20–22

பிற்காலத்தில் தேவன் மகத்தான அற்புதமான பணியை நிறைவேற்றுவார்.

இரட்சகர் திரளானோருக்கு சில குறிப்பிடத்தக்க வாக்குறுதிகளைக் கொடுத்தார் மற்றும் தன் உடன்படிக்கையின் ஜனத்தின் எதிர்காலத்தைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார், அது உங்களையும் சேர்த்தது. தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னபடி, “நாம் கர்த்தரின் உடன்படிக்கையின் ஜனத்தோடிருக்கிறோம். இந்த வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலில் நாம் தனிப்பட்ட விதமாக பங்கேற்பது நமது சிலாக்கியமாகும். வாழ்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியான நேரம்!” (“The Gathering of Scattered Israel,” Ensign or Liahona, Nov. 2006, 79).

3 நேபி 20–22ல், இரட்சகரின் வார்த்தைகளில் கடைசி நாட்களைப்பற்றிய தீர்க்கதரிசனங்களைத் தேடவும். இந்த தீர்க்கதரிசனங்களில் எவை விசேஷமாக உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது? இந்த அதிகாரங்களிலுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேற உதவ நீங்கள் என்ன செய்யலாம்?

மார்மன் புஸ்தகம் வெளிவருவதை 3 நேபி 21:1–7 குறிப்பிடுவது, (“அனைத்தையும்” வசனங்கள் 2 மற்றும் 3ல்) தேவனின் வாக்குத்தத்தங்கள் ஏற்கனவே நிறைவேறத் தொடங்கியிருக்கின்றன என்பதன் அடையாளம் என்பதைக் கவனிக்கவும். அந்த வாக்குத்தத்தங்கள் யாவை, அவை நிறைவேற மார்மன் புஸ்தகம் எப்படி உதவுகிறது?

Russell M. Nelson, “Hope of Israel” (worldwide devotional for youth, June 3, 2018), HopeofIsrael.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்..

3 நேபி 20:10–12; 23; 26:1–12

தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நான் தேட வேண்டுமென இரட்சகர் விரும்புகிறார்.

இந்த அதிகாரங்கள் முழுவதும் இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் இந்த வசனங்களைக் குறித்து அவர் என்ன உணர்கிறார் என வெளிக்காட்டுகின்றன. 3 நேபி 20:10–12; 23; மற்றும் 26:1–12லுள்ள வசனங்களைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? “இவற்றைக் கருத்தாய் தேட” உங்களுக்கு உணர்த்துகிற இந்த வசனங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?(3 2 நேபி 23:1.

3 நேபி 22; 24

அவரிடத்தில் திரும்புபவர்களிடம் தேவன் இரக்கமாயிருக்கிறார்.

3 நேபி 22 மற்றும் 24ல், வண்ண மயமான அஸ்திபாரக் கற்கள், நெருப்பில் நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளி, பரலோகத்தின் பலகணிகள், போன்ற அழகிய உருவங்களையும் ஒப்பீடுகளையும் கொண்ட ஏசாயா மற்றும் மல்கியாவிலிருந்து வார்த்தைகளை இரட்சகர் மேற்கோள் காட்டுகிறார். அவற்றைப் பட்டியலிடுவது ரசிக்கத்தக்கதாயிருக்கும். தம் ஜனத்தோடு தேவனின் உறவுகளைப்பற்றி ஒவ்வொன்றும் என்ன போதிக்கின்றன? உதாரணமாக, 3 நேபி 22:4–8, தேவனை கணவனாகவும் அவரது ஜனத்தை மனைவியாகவும் ஒப்பிடுகிறது. இந்த உருவங்களைப்பற்றி வாசிப்பது, கர்த்தருடன் உங்கள் சொந்த உறவைப்பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டலாம். இந்த அதிகாரங்களில் உள்ள வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேறியிருக்கின்றன? (விசேஷமாக 3 நேபி 22:7–8, 10–17; 24:10–12, 17–18 பார்க்கவும்).

3 நேபி 25:5–6.

என் இருதயம் எனது முன்னோர்களிடம் திரும்ப வேண்டும்.

நூற்றாண்டுகளாக உலகமெங்கிலுமுள்ள வாக்குத்தத்தம் செய்யப்பட்ட எலியாவின் வருகை யூதர்களால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. 1836ல் கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமாகி, எலியா திரும்பிவிட்டான் என பிற்காலப் பரிசுத்தவான்கள் நம்புகிறார்கள்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16 பார்க்கவும்). பிதாக்களிடத்தில் இருதயங்களைத் திருப்புதல் பணி, ஆலய மற்றும் குடும்ப வரலாற்றுப் பணி, நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் முன்னோரிடத்தில் உங்கள் இருதயத்தைத் திருப்ப உதவிய என்ன அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்தன?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 22:2

இந்த வசனத்தை வாசித்த பிறகு, நீங்கள் வீட்டில் ஒரு கூடாரத்தை செய்து சபை எவ்வாறு வனாந்தரத்தில் ஒரு கூடாரம் போல இருக்கிறது என்பதைப்பற்றி பேசவும். “[அதன்] கயிறுகளை நீட்டுதல்’, “[அதன்] முளைகளை பலப்படுத்துதல்” என்றால் என்னவாக இருக்கும்? சபையில் “அடைக்கலம்” கண்டுபிடிக்க நாம் எவ்வாறு பிறரை அழைக்கிறோம் ?(காணொலி “Welcome” on ComeuntoChrist.org பார்க்கவும்).

3 நேபி 23:6-13.

நமது குடும்பங்கள் வைத்திருக்கிற பதிவுகளை இரட்சகர் பரிசோதிப்பதாயிருந்தால், அவர் நம்மை என்ன கேள்விகள் கேட்கக்கூடும்? நாம் பதிவு செய்ய வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது ஆவிக்குரிய அனுபவங்கள் எதாவது இருக்கின்றனவா? குடும்ப பதிவேட்டை உருவாக்க அல்லது எதை சேர்ப்பது என்பதைப்பற்றி ஒன்றாக ஆலோசிக்கவும் இப்போதுதான் நல்ல தருணமாக இருக்கலாம். இளம் குடும்ப அங்கத்தினர்கள் புகைப்படங்களுடனும் அல்லது படங்களாலும் உங்கள் பதிவேட்டை அலங்கரித்து மகிழலாம். நமது குடும்ப ஆவிக்குரிய அனுபவங்களை பதிவுசெய்தல் ஏன் முக்கியமாக இருக்கிறது?

3 நேபி 24:7–18.

இந்த வசனங்களில் வாக்களிக்கப்பட்டுள்ள தசமபாகங்களை செலுத்துவதின் ஆசீர்வாதங்களை எப்படி அனுபவித்திருக்கிறீர்கள்? “The Windows of Heaven” (Ensign or Liahona, Nov. 2013, 17–20)ல் மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் செய்தி, இந்த ஆசீர்வாதங்களை அடையாளம் காண குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவலாம்.

3 நேபி 25:5–6.

தங்கள் பிதாக்களிடம் இருதயங்களைத் திருப்ப உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்? உங்கள் முன்னோர் ஒருவரைப்பற்றி அறிய உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு அவர்கள் கற்றதை பிற குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள பணிக்கலாம் (FamilySearch.org பார்க்கவும்). அல்லது ஆலய நியமங்கள் தேவைப்படுகிற ஒரு முன்னோரைக் கண்டுபிடிக்கவும், இந்த நியமங்களை நிறைவேற்ற ஒரு ஆலய பயணத்துக்கும் திட்டமிடலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் சாட்சியின்படி வாழவும். “நீங்கள் யாராயிருக்கிறீர்களோ அதை நீங்கள் போதிக்கிறீர்கள்” என மூப்பர் நீல் எ.மேக்ஸ்வெல் போதித்தார். “ஒரு குறிப்பிட்ட பாடத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சத்தியத்தை விட … உங்கள் குணநலன்கள் நினைக்கப்படும்” (“But a Few Days” [address to Church Educational System religious educators, Sept. 10, 1982], 2). ஒரு சுவிசேஷக் கொள்கையை நீங்கள் போதிக்க விரும்பினால், அக்கொள்கையின்படி வாழ உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்.

படம்
நேபியுடன் நேபிய பதிவேடுகளை இயேசு வாசித்தல்

பதிவேட்டைக் கொண்டு வா–காரி எல். காப்