என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 21–27. 3நேபி 12–16: “நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்”


“செப்டம்பர் 21–27. 3 நேபி 12–16: ‘நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“செப்டம்பர் 21–27. 3 நேபி 12–16,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
பன்னிரு அப்போஸ்தலர்களை இயேசு குறிப்பிடுகிறார்

மூன்றாம் நேபி: நான் தேர்ந்தெடுத்த இந்த பன்னிருவர்–காரி எல். காப்

செப்டம்பர் 21–27

3 நேபி 12–16

“நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன்”

3நேபி 12–16ல் கண்டுபிடிக்க அநேக கொள்கைகளிருக்கின்றன. இந்த குறிப்பில் சில சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கின்றன, ஆனால் மற்றவைகளை நீங்கள் கண்டு பிடிக்கலாம். இப்போதே உங்களுக்கு என்ன தேவை என்பதை பரலோக பிதாவின் ஆவியின் மூலமாக அவர் உங்களுக்கு போதிப்பாராக.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கலிலேயாவில் மலையில் கூடிச்சேர்ந்த இயேசுவின் சீஷர்களைப்போல, உதாரத்துவ ஸ்தல ஆலயத்தில் கூடிச்சேர்ந்த மக்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்திருக்கிறார்கள். இது அவர்கள் ஆத்துமாக்களை கிறிஸ்துவை நோக்கி சுட்டிக்காட்டியதால் அவர்கள் இதைப் பின்பற்றினார்கள்(யாக்கோபு 4:5 பார்க்கவும்), இப்போது ஒரு உயர் பிரமாணத்தை அறிவித்து அவர்களுக்கு முன்பாக கிறிஸ்து நின்றார். ஆனால், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி ஒருபோதும் வாழாதவர்களும்கூட, இயேசு அவருடைய சீஷர்களுக்கு அமைத்த தரம் ஒரு மிக உயர் நியாயப்பிரமாணமென அடையாளம் காணமுடியும். “நீங்களும் பூரணசற்குணராயிருக்க வேண்டுமென, வாஞ்சிக்கிறேன்” (3 நேபி 12:48) என அவர் அறிவித்தார். இது உங்களை போதுமானதாக இல்லாததாக உணரவைத்தால் “என்னிடத்தில் வருகிற, ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் பரலோக இராஜ்ஜியம் அவர்களுடையது” (3 நேபி 12:3) என இயேசு மேலும் சொன்னதை நினைவுகூருங்கள். இந்த உயர் நியாயப்பிரமாணம் ஒரு அழைப்பு, “நீங்கள் என்னிடத்தில் வந்து இரட்சிப்படையுங்கள்” (3 நேபி 12:20) என சொல்லும் மற்றொரு வழி. மோசேயின் நியாயப்பிரமாணத்தைப்போல, இந்த நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிக்கிற, நம்மை பரிபூரணப்படுத்துகிற ஒரே ஒருவரான கிறிஸ்துவை நோக்கி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. “இதோ, நானே நியாயப்பிரமாணமும் ஒளியுமாயிருக்கிறேன். என்னை நோக்கிப்பார்த்து, முடிவுபரியந்தம் நிலைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் ஜீவிப்பீர்கள்” (3 நேபி 15:9) என அவர் சொன்னார்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

3 நேபி 12–14

எவ்வாறு ஒரு உண்மையான சீஷனாயிருப்பதென்பதை இரட்சகரின் போதனைகள் எனக்குக் காட்டுகிறது.

3 நேபி 12–14ல் அநேக சத்தியங்களும், ஆலோசனை வார்த்தைகளும், எச்சரிக்கைகளுமிருக்கின்றன. இந்த அதிகாரங்களில் இரட்சகர் போதித்தவற்றைப் படிக்கவும் கடைப்பிடிக்கவும் இங்கே ஒரு வழி உள்ளது: ஒரு வசன தொகுப்பைத் தேர்ந்தெடுத்து, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என ஆரம்பிக்கிற ஒரு வாக்கியத்தில் வசனங்கள் போதிக்கிறதை உங்களால் சுருக்கமாகக் கூறமுடியுமா என பாருங்கள். “உதாரணமாக, 3 நேபி 14:1–5ன் சுருக்கம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என்பது நியாயந்தீர்ப்பவர்களல்ல” என்றிருக்கலாம். இந்த அதிகாரங்களிலிருந்து, குறிப்பாக உங்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிற ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து, அதை மனப்பாடம் செய்ய அல்லது அதை பிரதி எடுத்து நீங்கள் அடிக்கடி பார்க்கிற இடத்தில் அதை வைக்க விரும்பலாம். இயேசு கிறிஸ்துவின் சிறந்த சீஷராயிருக்க உங்களுடைய தனிப்பட்ட முயற்சிகளுக்கு நீங்கள் கற்றுக்கொண்டதை எவ்வாறு உங்களால் பிரயோகிக்க முடியுமென சிந்தியுங்கள்.

மத்தேயு 5–7;லூக்கா 6:20–49 ஐயும் பார்க்கவும்.

3 நேபி 12:1–2; 15:23–24; 16:1–6

காணாமல் நம்புகிறவர்கள் பாக்கியவான்கள்.

தேவனின் பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது, உதாரத்துவ ஸ்தல மக்கள் செய்ததைப்போல, மிகச் சிலரே இரட்சகரைக் கண்டும் அவருடைய குரலைக் கேட்டுமிருக்கிறார்கள். 3 நேபி 12:2; 15:23; மற்றும் 16:4–6ல் விவரிக்கப்பட்டுள்ள மக்களைப்போலவே நம்மில் அநேகரிருக்கிறார்கள். இந்த வசனங்களிலுள்ள அத்தகைய மக்களுக்கு என்ன வாக்குத்தத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா?

யோவான் 20:26–29; 2 நேபி 26:12–13; ஆல்மா 32:16–18ஐயும் பார்க்கவும்.

3 நேபி 12:21–30; 13:1–8, 16–18; 14:21–23

நீதியான செயல்கள் போதாது, என்னுடைய இருதயமும் கூட தூய்மையாயிருக்கவேண்டும்.

நமது வெளிப்புறமான செயல்களால் மட்டுமல்ல நமது இருதயங்களிலும் நீதியாயிருக்க, ஒரு உயர் நியாயப்பிரமாணத்தின்படி வாழ இரட்சகரின் அழைப்பே இந்த அதிகாரங்களில் நீங்கள் கவனிக்கவேண்டிய கருப்பொருள். பிணக்கு, (3 நேபி 12:21–26) அழியாமை (3 நேபி 12:27–30) ஜெபம் (3 நேபி 13:5–8) மற்றும் உபவாசத்தைபற்றி (3 நேபி 13:16–18) இரட்சகர் பேசும்போது இந்த கருப்பொருளைப் பார்க்கவும். என்ன பிற எடுத்துக்காட்டுகளை நீங்கள் காணமுடியும்? வெளிப்புற செயல்களில் கவனம் செலுத்துவதைவிட உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளைத் தூய்மைப்படுத்த நீங்கள் என்ன செய்யமுடியும்?

3 நேபி 14:7–11.

பரலோக பிதாவிடமிருந்து, “நன்மையான காரியங்களை” நான் நாடினால், நான் பெறுவேன்.

“உண்மையிலேயே தேவன் உங்களிடம் பேச விரும்புகிறாரா? என தலைவர் ரசல் எம்.நெல்சன் கேட்டார். ஆம்! … மிக அதிகமானவற்றை நீங்கள் அறிந்துகொள்ள பரலோகத்திலுள்ள பிதா விரும்புகிறார் (“Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, May 2018, 95). கேட்கவும், தேடவும், தட்டவும் 3 நேபி 14:7–11ல் கர்த்தரின் அழைப்பை நீங்கள் வாசிக்கும்போது என்ன “நன்மையான காரியங்களை” நீங்கள் கேட்க அவர் விரும்புவாரென சிந்தியுங்கள். எவ்வாறு கேட்பது, தேடுவது மற்றும் தட்டுவது என புரிந்துகொள்ள, பின்வரும் கூடுதலான வேத வசனங்கள் உங்களுக்குதவலாம். நீங்கள் எதிர்பார்க்கிற வழியில் ஏன் சில ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை என விளக்குவதற்கும் அவைகள் உதவக்கூடும்: ஏசாயா 55:8–9; ஏலமன் 10:5; மரோனி 7:26–27, 33, 37; மற்றும் கேட்பாடும் உடன்படிக்கைகளும் 9:7–9

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 12:48

இந்த வசனத்திலுள்ள இரட்சகரின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள, மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் செய்தி “Be Ye Therefore Perfect—Eventually” (Ensign or Liahona, Nov. 2017, 40–42) எவ்வாறு நமக்குதவுகிறது? மரோனி 10:32–33லிலும் உதவியை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

3 நேபி 12:9, 38–42; 14:3–5, 12

குடும்ப அங்கத்தினர்களிடையே கலந்துரையாட இந்த வசனங்கள் எவ்வாறு பயன்படுகின்றன? மிகவிசுவாசமுள்ளவர்களாக இந்த கொள்கைகளின்படி வாழ சில இலக்குகளை ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் அமைக்கலாம்.

3 நேபி 13:19–21

உங்கள் குடும்பத்தினர் பொக்கிஷப்படுத்துகிறதைப்பற்றி ஒரு கலந்துரையாடலுக்கு இந்த வசனங்கள் தூண்டலாம். பரலோகத்தில் பொக்கிஷங்களை வைத்திருப்பதிலிருந்து உங்களைத் தடுக்கிற சில பொக்கிஷங்கள் பூமியில் இருக்கின்றனவா? நித்திய மதிப்புடைய பொக்கிஷங்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நினைவுகூரும்படியான காரியங்களை உங்கள் வீட்டில் கண்டுபிடிக்க ஒரு புதையல் வேட்டையை குடும்பத்தினர் நடத்தி இந்த கருத்தை நீங்கள் வலுப்படுத்தலாம்.

3 நேபி 14:7–11.

3 நேபி 14:8–9ல் ஈர்க்கப்பட்டதால் இளம் பிள்ளைகள் ஒரு விளையாட்டை விரும்பலாம், அதில் சிலவற்றை அவர்கள் கேட்கிறார்கள், முற்றிலும் வேறுபட்ட சிலவற்றை அவர்கள் பெறுகிறார்கள். இந்த எடுத்துக்காட்டை இரட்சகர் பகிர்ந்துகொள்ளும்போது பரலோகத்திலுள்ள பிதாவைப்பற்றி எதை அறிந்துகொள்ள அவர் விரும்புகிறார்?

3 நேபி 14:15–20

ஜோசப் ஸ்மித், அல்லது சபையின் தற்போதைய தலைவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என அறிந்துகொள்ள எந்த “நல்ல கனி” நமக்குதவுகிறது?

3 நேபி 14:24–27

இந்த வசனங்களிலுள்ள உவமையை மனதில் நினைத்துப் பார்க்க உங்கள் குடும்பத்தினருக்குதவ வழிகளைப்பற்றி நினைத்துப் பாருங்கள். ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் படங்களை வரையலாம், செயல்களைச் செய்யலாம், அல்லது திடமான மற்றும் மணல் அஸ்திபாரங்களின் மேல் பொருட்களைக் கட்டலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் கோடிட்டவற்றை பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தவும். பரிச்சயமான பொருட்களை குறிப்பிடுவதில் இரட்சகர் மகத்துவமான சத்தியங்களை போதித்தார். 3 நேபி 12–16ஐ உங்கள் குடும்பத்தினர் படிக்கும்போது அதைப்போன்ற ஒன்றை நீங்கள் செய்யலாம். உதாரணமாக, அதிகாரம் 12ஐ நீங்கள் வாசிக்கும்போது, உப்பு, மெழுகுவர்த்தி, மேல் அங்கியை நீங்கள் காட்டலாம். இது ஒரு நல்ல மறுபரிசீலனைக்கு நடத்தலாம். இந்த அதிகாரங்களை நீங்கள் படித்தபிறகு, மீண்டும் பொருட்களை காட்சிக்கு வைத்து ஒவ்வொன்றையும்பற்றி இரட்சகர் என்ன போதித்தாரென குடும்ப அங்கத்தினர்களைக் கேட்கவும்.

படம்
நேபியர்களுக்கு இயேசு போதித்தல்

அமெரிக்காவிலுள்ள மக்களை இரட்சகர் சந்தித்தல்–க்ளென் எஸ். ஹாப்கின்சன்