என்னைப் பின்பற்றி வாருங்கள்
செப்டம்பர் 7–13: 3 நேபி 1–7 : “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக”


“செப்டம்பர் 7–13. 3 நேபி 1-7: ‘உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“செப்டம்பர் 7–13. 3 நேபி 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
இரவு இல்லாத நாளை நேபியர் கண்டனர்

ஒரு நாள், ஒரு இரவு, ஒரு நாள்–ஜோர்ஜ் கோக்கோ

செப்டம்பர் 7–13

3 நேபி 1–7

“உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக”

நேபியர்கள் அற்புதமான அடையாளங்களைக் கண்டனர், ஆனால் காலப்போக்கில் அவர்கள் அனுபவித்ததை மறந்தனர் (3 நேபி 2:1 பார்க்கவும்). படிக்கும்போது உங்களுடைய ஆவிக்குரிய அனுபவங்களை நினைவுகூற உங்களுடைய எண்ணங்களை பதிவுசெய்தல் உங்களுக்குதவும் 3 நேபி 1–7.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சிலவழிகளில், இயேசு கிறிஸ்துவில் ஒரு விசுவாசியாயிருக்க அது ஒரு அற்புதமான நேரமாயிருந்தது. தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, ஜனங்களுக்கு மத்தியில் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும், சீக்கிரத்திலேயே இரட்சகர் பிறப்பார் என்று குறிப்பிட்டன. மறுபுறம், அனைத்து அற்புதங்கள் இருந்தபோதிலும், இரட்சகர் பிறப்பதற்கு “காலம் கடந்துபோயிற்று” (3 நேபி 1:5) என அவிசுவாசிகள் வலியுறுத்தினதால் இது ஒரு ஆர்வமான நேரமாகவுமிருந்தது. இந்த ஜனங்கள் “தேசமெங்கும் கலகம் உண்டாக்கினார்கள்” (3 நேபி 1:7) மற்றும் லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசனமுரைத்த அடையாளமான, இருளில்லாத ஒரு இரவு தோன்றவில்லை என்றால் விசுவாசிகள் அனைவரையும் கொன்றுபோடவும் நாள் குறித்தார்கள்.

இந்த சோதனையான சூழ்நிலையில் தீர்க்கதரிசி நேபி, தன் ஜனத்துக்காக தன் தேவனிடத்தில் ஊக்கமாய்க் கூக்குரலிட்டான்” (3 நேபி 1:11). துன்புறுத்தலை அல்லது சந்தேகத்தை சந்திக்கிற யாருக்கும், வெளிச்சம் இருளை மேற்கொள்ளும் என்றறிய தேவையானவர்களுக்கு கர்த்தருடைய பதில் உணர்த்துலாயிருக்கிறது: “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக; … என்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் நாவால் பேசப்படும்படி நான் செய்த சகலத்தையும் நான் நிறைவேறப்பண்ணுவேன்” (3 நேபி 1:13).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

3 நேபி 1:4–21; 5:1–3

அவருடைய சகல வார்த்தைகளையும் கர்த்தர் நிறைவேற்றுவார்.

3 நேபி 1–7ல் விவரிக்கப்பட்டிருக்கிற காலத்தின்போது நீங்கள் விசுவாசிகளில் ஒருவராகியிருந்தால் நீங்கள் உணர்ந்திருக்கிறவற்றை எவ்வாறு கற்பனை செய்வீர்கள்? உதாரணமாக, இரட்சகரின் பிறப்பை அறிவிக்கக்கூடிய இருளில்லாத இரவுக்காக காத்திருக்க, இது நடக்கவில்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என அறிந்திருந்த அது எவ்வாறு உணரப்பட்டிருக்கும்? 3 நேபி 1:4–21 மற்றும் 5:1–3ஐ நீங்கள் வாசிக்கும்போது, இந்த கடினமான நேரங்களில் தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள நேபியும் பிற விசுவாசிகளும் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவும். கர்த்தர் அவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தார்? கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் காத்திருப்பதை நீங்கள் காணும்போது உதவக்கூடிய எதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?

3 நேபி 01:22–13; 2:1–3

ஆவிக்குரிய அனுபவங்களை மறந்துவிடுதல் என்னை சாத்தானின் சோதனைகளுக்கு ஆட்படுத்துகிறது.

இருளில்லாத ஒரு இரவைப்போல மிக அற்புதமான ஒன்றைக் காணுதல் உங்களுடன் ஒரு நீண்ட காலத்திற்கு தங்கியிருக்கும் மற்றும் உங்கள் சாட்சிக்கு ஒரு நங்கூரமாயிருக்கும் என நீங்கள் சிந்திக்கலாம். ஆனால், நேபியர்கள் கண்ட அடையாளங்களின் அற்புதங்களின் நினைவுகள், காலப்போக்கில் மங்கிப்போனதாகத் தோன்றுகிறது மறந்துவிட அவர்களுக்கு எது காரணமாக இருந்தது, மறந்துவிடுதலின் விளைவுகள் என்னவாயிருந்தது? (3 நேபி 1:22; 2:1–3 பார்க்கவும்).

நீங்கள் கண்ட ஆவிக்குரிய சத்தியங்களை நினைவுகூரவும் புதுப்பிக்கவும் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உதாரணமாக, உங்களுடைய ஆவிக்குரிய அனுபவங்களை பதிவுசெய்தல் எவ்வாறு உங்களுக்குதவுமென்பதைக் கருத்தில்கொள்ளவும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் நம்புவதற்குதவ அவர்களுடன் உங்களுடைய சாட்சியை எவ்வாறு நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள்?

ஆல்மா 5:6; Henry B. Eyring, “O Remember, Remember,” Ensign or Liahona, Nov. 2007, 66–69; Neil L. Andersen, “Faith Is Not by Chance, but by Choice,” Ensign or Liahona, Nov. 2015, 65–68 ஐயும் பார்க்கவும்.

3 நேபி 2:11–12; 3:1–26; 5:24–26

ஆவிக்குரிய அபாயத்திற்கு எதிராக அவருடைய பரிசுத்தவான்களை கர்த்தர் பெலப்படுத்துகிறார்.

நமது நாளில், நமது வீடுகளை விட்டுவிட்டு ஒரு இடத்தில் கூடிச்சேர நம்மைக் கட்டாயப்படுத்துகிற, திருடர் கூட்டத்தை, வழக்கமாக நாம் எதிர்கொள்ளுவதில்லை. ஆனால் நாம் ஆவிக்குரிய அபாயங்களை எதிர்கொள்ளுகிறோம், நேபியர்களின் அனுபவத்தில் நமக்குதவக்கூடிய பாடங்கள் அடங்கியிருக்கலாம். 3 நேபி2:11–12 மற்றும்3:1–26ஐ நீங்கள் வாசிக்கும்போது இந்த பாடங்களை கண்டுபிடியுங்கள்.

3 நேபி 5:24–26ல் பிற்காலங்களில் கர்த்தருடைய ஜனங்கள் கூடிச்சேர்தலைப்பற்றி நாம் வாசிக்கிறோம். இன்று அவருடைய ஜனங்களை கர்த்தர் எவ்வாறு கூட்டிச்சேர்க்கிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன?

Worldwide Devotional for Youth: Messages from President Russell M. Nelson and Sister Wendy W. Nelson,” June 3, 2018, ChurchofJesusChrist.org; “Israel—The gathering of Israel,” Guide to the Scriptures, scriptures.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்

3 நேபி 5:12–26; 7:15–26

நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்

இயேசு கிறிஸ்துவின் சீஷனாயிருப்பதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5பார்க்கவும்). 3 நேபி 5:12–26ல் நேபியரின் பதிவுகளின் சுருக்கஉரையை மார்மன் விளக்கி அவன் இயேசு கிறிஸ்துவின் சீஷன் என பிரகடனப்படுத்தினான். பின்னர் 3 நேபி 7:15–26ல், நேபி என்ற மற்றொரு தீர்க்கதரிசியின் ஊழியத்தைப்பற்றி அவன் விவரித்தான். கிறிஸ்துவின் சீஷனாயிருப்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவக்கூடிய இந்த இரண்டு பத்திகளில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 3:13–14, 25–26

அவர்கள் எதிர்கொண்ட எதிரியிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நேபியர்கள் என்ன செய்தார்கள்? உலகத்தில் தீமையிடமிருந்து ஒரு பாதுகாப்பான இடமாகவும், பாதுகாப்பாகவும் நமது வீட்டை உருவாக்க நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

3 நேபி 2:1–3; 6:15–17

சாத்தான் நம்மை எப்படி ஏமாற்றமுடியும் என்பதைக் கற்றுக்கொள்ள உங்கள் குடும்பத்திற்குதவ ஒரு உடலை வரைந்து, உங்கள் குடும்பம் 3 நேபி 2:1–3 மற்றும் 6:15–17ஐ வாசிக்கிறபோது, குறிக்கப்பட்ட உடலின் வெவ்வேறு பகுதிகளை குறியிடவும். இந்த வசனங்களின்படி, தேவனை மறக்கவும் பாவத்திற்கு திரும்பவும் சாத்தானின் சோதனைகளின் சில வழிகள் எவை?

3 நேபி 4:7–12, 30–33

காதியந்தன் திருடர்கள் வந்துகொண்டிருந்ததை நேபியர்கள் பார்த்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்? கடினமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நேபியர்களிடமிருந்து நம்முடைய குடும்பம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? அவர்களுடைய கடினமான நேரத்தில் அவர்களுக்கு கர்த்தர் உதவிய பின்பு நேபியர்களின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்?

3 நேபி 5:13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5

3 நேபி் 5:13 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41:5 வாசித்து கிறிஸ்துவின் ஒரு சீஷனாயிருப்பது என்றால் என்ன அர்த்தமென கலந்துரையாடவும். மற்றவர்கள் ஒவ்வொருவரும் சீஷர்களாயிருப்பதை அவர்கள் கவனித்த நேரங்களைப்பற்றி, குடும்ப அங்கத்தினர்கள் பேசலாம். உங்களுக்கு சிறு பிள்ளைகளிருந்தால், “நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்” எனச் சொல்லுகிற ஒரு அடையாள அட்டையை நீங்கள் உருவாக்கி, அவர்கள் இரட்சகரைப் பின்பற்றுவதை நீங்கள் கவனிக்கும்போதெல்லாம் அந்த அட்டையை அவர்கள் அணிந்திருக்கட்டும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

அவர்களுடன் வேதங்களை ஒப்பிட உங்கள் குடும்பத்தினருக்கு உதவவும். “எங்களுடைய ஆதாயத்திற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் அவைகள் இருக்கவேண்டுமென நான் எல்லா வேத வாக்கியங்களையும் எங்களுக்கு ஒப்பிட்டேன்” (1 நேபி 19:23) என நேபி சொன்னான். உங்கள் குடும்பத்திற்குதவ, அவர்களோடு வேதங்களை ஒப்பிடவும், 3 நேபி 1:4–9ல் விளக்கப்பட்டிருக்கிற விசுவாசிகளுக்கு மத்தியில் அவர்களிருந்தால், அவர்கள் என்ன செய்திருப்பார்களென்று சிந்திக்க அவர்களை நீங்கள் அழைக்கலாம். (இரட்சகரின் வழியில் போதித்தல்,21 பார்க்கவும்.)

படம்
இரவில்லாத நாளை நேபியர்கள் கண்டார்கள்

ஒரு நாள், ஒரு இரவு, ஒரு நாள்–வால்டர் ரானே