“இயேசு ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார்,” நண்பன், அக்டோபர் 2024, 26–27.
நண்பன் மாதாந்திர செய்தி, அக்டோபர் 2024
இயேசு ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார்
விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி
தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றி நேபியர்களுக்குக் கற்பித்தனர். அவர் மரித்தபோது தேசத்தில் மூன்று நாள்கள் இருள் உண்டாயிருந்தது. பின்னர், பரலோகத்திலிருந்து பேசிய பரலோக பிதாவின் குரலை மக்கள் கேட்டனர்.
பரலோக பிதா சொன்னார், “இதோ என் நேசகுமாரன்” (3 நேபி 11:7). நேபியர்களுக்கு இயேசு தரிசனமானார். அவர் உயிர்த்தெழுந்தார்! அவர் நேபியர்களுக்கு பல காரியங்களைக் கற்பித்தார். அவர் அவர்களை மனந்திரும்பி அவரைப் பின்பற்றும்படி கூறினார்.
பிணியாளிகளை குணமாக்க தன்னிடம் அழைத்து வரும்படி அவர் மக்களை கேட்டுக்கொண்டார். அவர்களை அவர் ஆசீர்வதித்தார்.
எல்லாபிள்ளைகளையும் ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார். தூதர்கள் குழந்தைகளைச் சூழ்ந்து கொண்டனர்.
வண்ணமிடும் பக்கம்
இரட்சகர் பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளையையும் நேசிக்கிறார்.
பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்
இரட்சகரின் அன்பை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, அக்டோபர் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19291 418