கேட்கவும் பின்னர் செயல்படவும் விசுவாசம்
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் சத்தியத்தின் வெளிப்பாட்டைப் பெறுவதற்கு திறவுகோல்.
என் அன்பான சகோதர சகோதரிகளே, பொது மாநாட்டின் இந்த சனிக்கிழமை மாலைக் கூட்டத்தில் உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். “உங்கள் இருதயத்தில் உள்ள கேள்விகளுக்கான பரிசுத்த வெளிப்பாடு, இந்த மாநாட்டை மிகவும் பலனளிக்கும் மற்றும் மறக்க முடியாததாகச் செய்யும். இந்த இரண்டு நாட்களில் நீங்கள் கர்த்தர் என்ன கேட்பார் என்பதைக் கேட்க உங்களுக்கு உதவ பரிசுத்த ஆவியின் ஊழியத்தை நீங்கள் இன்னும் நாடவில்லை என்றால், இப்போது அதைச் செய்ய நான் உங்களை அழைக்கிறேன்”1 என இன்று காலை மாநாட்டிற்கான அவருடைய அறிமுகத்தில், தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார். உங்களுடனான இந்த சந்திப்புக்காக வெளிப்பாட்டைப் பெறுவதற்காக நான் ஆயத்தம் செய்தபோது அந்த ஆசீர்வாதத்திற்காக நான் நாடினேன். தேவனிடமிருந்து வெளிப்பாட்டை நீங்கள் பெற வேண்டும் என்பதே எனது நேர்மையான ஜெபம்.
ஆதாம், ஏவாள் நாட்களிலிருந்து தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெறும் வழி மாறவில்லை. ஆரம்பத்திலிருந்து இந்நாள்வரை கர்த்தரால் அழைக்கப்படுகிற ஊழியக்காரர்கள் அனைவருக்கும் இது ஒரே மாதிரியாகவே உள்ளது. இது உங்களுக்கும் எனக்கும் அப்படியே இருக்கிறது. விசுவாசத்தைப் பயன்படுத்துவதால் எப்போதும் இது செய்யப்படுகிறது.2
தேவன் தனது இதயப்பூர்வமான தேவைக்கு பதிலளிப்பார் என்று நம்பி, தேவனிடம் ஒரு கேள்வியைக் கேட்க பதின்ம வயது ஜோசப் ஸ்மித்துக்கு போதுமான விசுவாசமிருந்தது. வந்த பதில் உலகத்தை மாற்றியது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கட்டிருக்க எந்த சபையில் சேருவது என அறிய அவர் விரும்பினார். என்றென்றைக்குமான சிறந்த கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கவும், இப்போதுதான் தொடங்கிய வெளிப்பாட்டின் தொடர்ச்சியான ஓட்டத்தில் செயல்படவும் அவர் பெற்ற பதில் அவரை ஊக்குவித்தது.3
இந்த மாநாட்டில் உங்கள் அனுபவமும் இதே போலிருக்க சாத்தியமாயிருக்கலாம். பதில்களைத் தேடுகிற கேள்விகள் உங்களுக்கிருக்கின்றன. அவருடைய ஊழியர்களின் மூலம் நீங்கள் கர்த்தரிடமிருந்து பதில்களைப் பெறுவீர்கள் என்று நம்புவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் போதுமான விசுவாசம் இருக்கிறது.4 உரையாற்றுபவர்களிடமிருந்து சத்தமாக பதில்களைக் கேட்க உங்களுக்கு வாய்ப்பு இருக்காது, ஆனால் நீங்கள் உங்கள் அன்பான பிதாவிடம் ஜெபத்தில் கேட்கலாம்.
உங்கள் தேவைகளுக்கும் உங்கள் ஆவிக்குரிய ஆயத்தத்திற்கும் பொருந்த பதில்கள் வரும் என்பதை அனுபவத்திலிருந்து நான் அறிவேன். உங்களுடைய அல்லது மற்றவர்களுடைய நித்திய நல்வாழ்வுக்கு முக்கியமான ஒரு பதில் உங்களுக்குத் தேவையானால், மிக அநேகமாக பதில் வரும். இருப்பினும், அப்போதும், ஜோசப் ஸ்மித் செய்ததைப்போல பொறுமையாக இருக்க பதிலை நீங்கள் பெறக்கூடும்.5
இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் விசுவாசம் அவருடைய பாவநிவர்த்தியின் விளைவுகளின் மூலம் ஒரு இருதயத்தை மென்மையாக்கியிருந்தால், உங்கள் ஜெபங்களுக்கு பதிலில் பரிசுத்த ஆவியின் கிசுகிசுப்புகளை நீங்கள் அதிகமாக உணர முடியும். என் மனதில் உள் அமைதியையும் கர்த்தருடைய சித்தத்திற்கு அடிபணிவதையும் நான் உணரும்போது, உண்மையான, அமைதியான, சிறிய குரல் தெளிவாகவும் பகுத்தறிவதாகவும் இருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது”6 என அடக்கத்தின் அந்த உணர்வு சிறப்பாக விளக்கப்படலாம்.
கிறிஸ்துவின் கோட்பாடு என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பேச்சாளர்கள் கற்பிப்பதை நீங்கள் ஏன் கேட்பீர்கள்7 என்பது வெளிப்பாட்டின் இந்த நடைமுறை. கிறிஸ்துவின் கோட்பாட்டை நம் இருதயங்களில் எடுப்பதை நாடி, அதை நம் வாழ்வில் செயல்படுத்த வெளிப்பாடு நாம் முயன்ற விகிதத்தில் நமக்கு வருகிறது.
இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமே உண்மையை வெளிப்படுத்துவதற்கான திறவுகோலாகவும், நாம் இரட்சகரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறோம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான திறவுகோலாகவும் இருக்கிறது என்று நேபி நமக்கு கற்றுக்கொடுத்ததை மார்மன் புஸ்தகத்திலிருந்து நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே நேபி பின்வரும் வார்த்தைகளை எழுதினான்.
“தூதர்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் பேசுகிறார்கள்; ஆகையால் அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். ஆகிலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள்; ஏனெனில் இதோ, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.
“ஆகையால் இப்பொழுதும், நான் இந்த வார்த்தைகளைப் பேசிய பின்பும், அவைகளை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியவில்லையெனில், அது நீங்கள் கேட்காமலும், நீங்கள் தட்டாமலுமிருப்பதினிமித்தமே; ஆகையால் நீங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படவில்லையானால், இருளிலேயே அழிய வேண்டும்.
“ஏனெனில் இதோ, நீங்கள் இந்த வழியாய் உட்பிரவேசித்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டால், அது நீங்கள் செய்யவேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிக்குமென்று, மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“இதோ, இதுவே கிறிஸ்துவின் உபதேசமாயிருக்கிறது, அவர் தம்மை மாம்சத்தில் உங்களுக்கு வெளிப்படுத்துமளவும், வேறெந்த உபதேசமும் கொடுக்கப்படமாட்டாது. அவர் தம்மை மாம்சத்தில் உங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டும்பொழுது, அவர் உங்களுக்குச் சொல்லும் காரியங்களை நீங்கள் ஆசரிப்பீர்களாக.”8
இன்றும் மற்றும் வரப்போகிற நாட்களிலும் கர்த்தர் தனது ஊழியக்காரர்கள் மூலம் உங்களுக்கும் எனக்கும் காரியங்களைச் சொல்வார். நாம் செய்யவேண்டிய காரியங்களை நமக்கு அவர் சொல்வார்.9 உங்களுக்கும் எனக்கும் இரட்சகர் கட்டளைகளைக் கத்தமாட்டார். அவர் எலியாவுக்குக் கற்றுத் தந்தார்:
“அப்பொழுது அவர், நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார். அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார், கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களை பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று, ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை, காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று, பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை:
“பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று, அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை, அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.”10
அந்த சத்தத்தைக் கேட்பது அவரில் நமது விசுவாசத்திடமிருந்து வருகிறது. போதிய விசுவாசத்துடன், அவர் எதைக் கேட்டாலும் அதைப் போய் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் வழிநடத்துதலைக் கேட்போம்.11 அவர் எதை கேட்டாலும் அது மற்றவர்களை ஆசீர்வதிக்கும் என்பதை அறியும் விசுவாசத்தை நாம் வளர்த்துக் கொண்டிருப்போம், மேலும் அவர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நாம் சுத்திகரிக்கப்பட முடியும்.
இயேசு கிறிஸ்து மீதான நமது விசுவாசம், பிதாவிடம் பதில்களைக் கேட்க வழிவகுத்ததால், அவருடைய வழிநடத்துதல்களைக் கேட்கவும், கீழ்ப்படிவதற்கு தீர்மானிக்கவும் உற்சாகமாக இருக்கவும் அந்த விசுவாசம் இரட்சகரின் மென்மையாக்கும் தொடுதலை நமக்குப் போதுமான அளவுக்குக் கொண்டுவந்திருக்கும். பின்னர், வேலை கடினமாக இருக்கும்போதும், “என்னுடைய தேவனே, என்னுடைய ராஜாவே, வேலை இனிமை”12 என்ற பாடலின் வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் நாம் பாடுவோம்.
நம்முடைய வாழ்க்கையிலும் இருதயங்களிலும் கிறிஸ்துவின் கோட்பாட்டை அதிகமாக கொண்டிருக்கும்போது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் ஆசீர்வாதம் இல்லாத அல்லது அதைப் பராமரிக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் மீது அதிக அன்பையும் அனுதாபத்தையும் நாம் உணருகிறோம். அவரில் விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாமல் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள கடினமாயிருக்கும். இரட்சகரிடத்தில் தங்களுடைய விசுவாசத்தை சிலர் இழக்கும்போது, அவருடைய ஆலோசனையை அவர்கள் தாக்கி, நன்மையை தீமை என்றும் தீமையை நன்மை என்றும் அழைக்கக்கூடும்.13 இந்த பரிதாபமான தவறைத் தவிர்க்க, நாம் பெறுகிற எந்த தனிப்பட்ட வெளிப்பாடும், கர்த்தர் மற்றும் அவருடைய தீர்க்கதரிசிகளின் போதனைகளுடன் ஒத்துப்போகிறது என்பது முக்கியம்.
சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிதலாயிருக்க விசுவாசம் தேவை. அவருக்காக மற்றவர்களுக்கு சேவை செய்ய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் தேவை. அவருடைய சுவிசேஷத்தை போதிக்க வெளியே செல்லவும், பரிசுத்த ஆவியின் குரலை உணராதவர்களுக்கும், செய்தியின் உண்மையை மறுக்கிற மக்களுக்கும் அதை வழங்கவும் விசுவாசம் தேவை. ஆனால் நாம் கிறிஸ்துவில் நம் விசுவாசத்தைப் பயன்படுத்தும்போது, அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போது, உலகம் முழுவதும் விசுவாசம் அதிகரிக்கிறது. தொழில் நுட்பத்தால், ஒருவேளை, வரலாற்றின் எந்த இரண்டு நாட்களையும்விட இந்த வாரக் கடைசியில் தேவனின் வார்த்தையை அதிகமான தேவனின் பிள்ளைகள் கேட்டு அடையாளம் காண்பார்கள்.
இது தேவனின் சபை என்றும் பூமியில் உள்ள ராஜ்யம் என்றும் அதிகரிக்கும் விசுவாசத்துடன், அந்த உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த சோதனைகளை எதிர்கொண்டாலும், அதிக உறுப்பினர்கள் தசமபாகம் செலுத்துகிறார்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ நன்கொடை அளிக்கிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள் என்ற விசுவாசத்துடன், உலகம் முழுவதிலுமுள்ள ஊழியக்காரர்கள் ஒரு தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட சவால்களைத் தாண்டி தைரியத்துடனும் நல்ல உற்சாகத்துடனும் உயர வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்களுடைய கூடுதல் முயற்சியில், அவர்களுடைய விசுவாசம் வலுவாக வளர்ந்துள்ளது.
விசுவாசத்தின் வளர்ச்சிக்கு, எதிர்ப்பும் சோதனைகளும் நீண்டகாலமாக விதைத்தளமாக இருக்கின்றன. அது, குறிப்பாக, மறுஸ்தாபிதத்தின், கர்த்தருடைய சபையை நிறுவுவதன் ஆரம்பத்திலிருந்து எப்போதுமே உண்மையாயிருக்கிறது.14
தலைவர் ஜார்ஜ் கே. கேனன் நீண்ட காலத்திற்கு முன்பு சொன்னது இன்று உண்மை மற்றும் தனிப்பட்ட முறையில் அவரது சபையையும் அவரது மக்களையும் வழிநடத்துவதற்கு மீட்பர் வரும் வரை உண்மையாய் இருக்கும்: “சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிதலாயிருத்தல், [மக்களை] கர்த்தருடன் நெருக்கமாகவும், நெருக்கமான உறவுக்குள்ளும் கொண்டு வருகிறது. பூமியிலுள்ள மனிதர்களுக்கும் பரலோகங்களிலுள்ள நமது மகா சிருஷ்டிகருக்கும் இடையில் ஒரு நெருக்கமான தொடர்பை இது நிறுவுகிறது. சர்வவல்லவர் மீது பூரணமான நம்பிக்கையையும், அவரை நம்புபவர்களின் வேண்டுதல்களுக்கு செவிசாய்த்து பதில் சொல்லும் விருப்பத்தையும் இது மனித மனதில் கொண்டுவருகிறது. சோதனை மற்றும் கடினமான காலங்களில் இந்த நம்பிக்கை விலைக்கு அப்பாற்பட்டது. தனிநபர் அல்லது மக்கள் மீது பிரச்சனைகள் வரலாம், பேரழிவு அச்சுறுத்தலாம் மற்றும் ஒவ்வொரு மனித நம்பிக்கையும் தூக்கி எறியப்பட்டதாக தோன்றுகிறது, ஆயினும், [மக்கள்] சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதால் கிடைக்கும் சிலாக்கியங்களை அவர்களே பயன்படுத்திக் கொள்ளும்போது, அவர்களுக்கு உறுதியான நிற்கும் இடமிருக்கிறது; அவர்களின் கால்கள் நகர்த்த முடியாத ஒரு கனமலையின் மீது உள்ளன.”15
இயேசுவே கிறிஸ்து என்பதற்கு நாம் நிற்கும் கன்மலைதான் சாட்சி என்றும், இது அவர் தனிப்பட்ட முறையில் வழிநடத்தும் அவருடைய சபை என்றும், தலைவர் ரசல் எம். நெல்சன் இன்று அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி என்பதற்கும் இது எனது சாட்சி.
கர்த்தரிடமிருந்து, வழிநடத்துதலை தலைவர் நெல்சன் நாடுகிறார், பெறுகிறார். இதைப் பின்பற்றும் உறுதியுடன் அந்த வழிநடத்துதலை நாடுகிற அவர் எனக்கு ஒரு எடுத்துக்காட்டு. கர்த்தருடைய வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிதலாயிருக்க அந்த அதே தீர்மானம், அவருடைய சபையின் இந்த பொது மாநாட்டில் பேசிய அல்லது பேசும், ஜெபிக்கிற அல்லது பாடுகிற அனைவரின் இருதயங்களிலும் உள்ளது.
இந்த மாநாட்டை பார்க்கும் அல்லது கேட்கும் பூமி முழுவதிலுமுள்ளவர்கள் தங்கள் மீது கர்த்தருடைய அன்பின் உணர்வை பெற நான் ஜெபிக்கிறேன். உங்கள்மீதுள்ள இரட்சகரின் அன்பின் மற்றும் நமது பரலோக பிதாவான அவருடைய பரலோக பிதாவின் மீதான அவரது அன்பின் ஒரு சிறிய பகுதியையாவது நான் உணர வேண்டும் என்ற எனது ஜெபத்திற்கு பரலோக பிதா பதிலளித்தார்.
இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். அவரே நமது இரட்சகர், நமது மீட்பர். இது அவரது சபை. அவர் இதன் தலையாயிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள ஒரு தோப்பில் ஜோசப் ஸ்மித்துக்கு அவர், தனது பரலோக பிதாவுடன், நேரில் தோன்றினார். பரலோக தூதுவர்கள் மூலம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமும் அவருடைய ஆசாரியத்துவமும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.16 பரிசுத்த ஆவியின் வல்லமையால், இது உண்மையென நான் அறிவேன்.
அதே சாட்சி உங்களுக்குமிருக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். நீங்கள் செய்யவேண்டிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்காகவும், பரிசுத்த ஆவியானவர் உங்கள் நிரந்தர துணையாக இருக்க அனுமதிக்கும் உடன்படிக்கைகளை கைக்கொள்ளவும் நீங்கள் பரலோக பிதாவிடம் கேட்கும்படி நான் ஜெபிக்கிறேன். என்னுடைய அன்பையும் என்னுடைய உறுதியான சாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினால் உங்களிடம் சொல்கிறேன், ஆமென்.