கையேடுகளும் அழைப்புகளும்
34. நிதியும் தணிக்கைகளும்


“34. நிதியும் தணிக்கைகளும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“34. நிதியும் தணிக்கைகளும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை

குழந்தை உறையை வைத்திருத்தல்

34.

நிதியும் தணிக்கைகளும்

34.0

முன்னுரை

தசமபாகம் மற்றும் காணிக்கைகள் சபையை கர்த்தரின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கு தொடர்ந்து அனுமதிக்கின்றன (1.2 பார்க்கவும்). இந்த நிதிகள் பரிசுத்தமானவை. அவை சபையின் உறுப்பினர்களின் தியாகத்தையும் விசுவாசத்தையும் குறிக்கின்றன (மாற்கு 12:41–44 பார்க்கவும்).

34.2

தொகுதி நிதி தலைமை

34.2.1.

ஆயம்

ஆயர் தொகுதி நிதிகளுக்கான பின்வரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளார். இந்த வேலைகளில் சிலவற்றை அவர் தனது ஆலோசகர்களுக்கும் எழுத்தர்களுக்கும் ஒப்படைக்கிறார்.

ஆயர்:

  • முழு தசமபாகத்தை செலுத்தவும் தாராளமான காணிக்கைகளை வழங்கவும் உறுப்பினர்களுக்கு கற்பிக்கிறார் மற்றும் ஊக்கப்படுத்துகிறார் (34.3 பார்க்கிறார்).

  • தொகுதி நிதிகள் சரியாக கையாளப்பட்டு கணக்கிடப்படுவதை உறுதி செய்கிறார் (34.5 பார்க்கவும்).

  • ஒவ்வொரு மாதமும் நிதிநிலை அறிக்கையை மதிப்பாய்வு செய்கிறார் மற்றும் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறார்.

  • பரிசுத்தமான சபை நிதிகளுக்கான அமைப்புத் தலைவர்களும் எழுத்தர்களும் தங்கள் பொறுப்பைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்கிறார்.

  • வருடாந்திர தொகுதி வரவு செலவு தயாரித்து நிர்வகிக்கிறார் (34.6 பார்க்கவும்).

  • அவர்களின் தசமபாக அறிவிப்பைப் பெற ஆண்டுதோறும் தொகுதி உறுப்பினர்களுடன் சந்திக்கிறார்.

34.2.2.

தொகுதி எழுத்தர்கள்

தொகுதி நிதி பதிவேடு வைத்திருப்பதற்கு உதவ ஆயர் தொகுதி எழுத்தர் அல்லது உதவி தொகுதி எழுத்தரை நியமிக்கிறார். சபை நிதிகளைப் பாதுகாப்பதற்கான தற்போதைய கொள்கைகளை எழுத்தர்கள் கவனமாகப் பின்பற்றுகிறார்கள் மற்றும் சபை பதிவேடுகள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.

எழுத்தருக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • ஆயத்தின் உறுப்பினருடன் பெறப்பட்ட எந்த நிதிகளையும் பதிவுசெய்து டெபாசிட் செய்கிறார்.

  • ஒவ்வொரு மாதமும் நிதிநிலை அறிக்கையை மதிப்பாய்வு செய்து, ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படுவதை உறுதிசெய்கிறார்.

  • ஆயத்துக்கு வருடாந்திர தொகுதி வரவு செலவைத் தயாரிக்க உதவுகிறார்(34.6.1 மற்றும் 34.6.2 பார்க்கவும்).

  • உறுப்பினர்கள் தங்கள் நன்கொடைகளின் அறிக்கைகளை பெறுவதையும் தேவைக்கேற்ப உதவுவதையும் உறுதிசெய்கிறார்கள்.

எழுத்தர்கள் மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்க வேண்டும் மற்றும் தற்போதைய ஆலய பரிந்துரை வைத்திருக்க வேண்டும்.

34.3

நன்கொடைகள்

34.3.1.

தசமபாகம்

தசமபாகம் என்பது ஒருவரின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தேவனின் சபைக்கு நன்கொடையாக கொடுப்பதாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119:3–4; இன்டரெஸ்ட் என்பது வருமானம் என புரிந்து கொள்ளப்படுகிறது). வருமானம் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தசமபாகம் செலுத்த வேண்டும்.

34.3.1.2

தசமபாக அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் கடைசி சில மாதங்களில் ஆயர் ஒவ்வொரு உறுப்பினரையும் சந்தித்து அவருடைய தசமபாகம் அறிக்கையைப் பெறுகிறார்.

அனைத்து உறுப்பினர்களும் ஆயரை சந்திக்க அழைக்கப்படுகிறார்கள்:

  • தசமபாகம் செலுத்துபவர்களின் நிலையை ஆயரிடம் அறிவிக்கிறார்.

  • அவர்களின் நன்கொடைப் பதிவுகள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்துகிறார்.

முடிந்தவரை, குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

34.3.2.

உபவாச காணிக்கைகள்

சபைத் தலைவர்கள் உபவாச நியாயப்பிமாணத்தை கடைபிடிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்கிறார்கள். தாராளமான உபவாசக் காணிக்கை வழங்குவதும் இதில் அடங்கும் (22.2.2 பார்க்கவும்).

22.5.2ல் உபவாச காணிக்கை நிதிகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

34.3.3.

ஊழிய நிதிகள்

தொகுதி ஊழிய நிதிக்கான நன்கொடைகள் முதன்மையாக தொகுதியில் இருந்து முழுநேர ஊழியக்காரர்களின் நன்கொடை ஒப்புக்கொடுத்தல்களை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

பொது ஊழிய நிதிக்கான நன்கொடைகள் அதன் ஒட்டுமொத்த ஊழிய முயற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

34.3.7.

நன்கொடைகளைத் திரும்பக் கொடுக்க முடியாது

சபைக்கு தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகள் கொடுக்கப்படும்போது, அவை கர்த்தருக்கு உரியவை ஆகின்றன. அவை அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.

பிணையத் தலைவர்களும் ஆயர்களும் தசமபாகம் மற்றும் காணிக்கைகளை வழங்குபவர்களுக்கு இந்த நன்கொடைகளைத் திரும்பப் பெற முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

34.4

தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளின் இரகசியத்தன்மை

நன்கொடையாளர் செலுத்தும் தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளின் அளவு ரகசியமானது. ஆயர் மற்றும் இந்த நன்கொடைகளை கையாள அல்லது பார்க்க அதிகாரம் பெற்றவர்கள் மட்டுமே இந்த தகவலை பெற வேண்டும்.

34.5

சபை நிதிகளைக் கையாளுதல்

பிணையத் தலைவர் மற்றும் ஆயர் அனைத்து சபை நிதிகளும் சரியாக கையாளப்படுவதை உறுதி செய்கின்றனர். “பரிசுத்த நிதிகள், பரிசுத்தப் பொறுப்புகள்” என்ற காணொலியை வருடத்திற்கு ஒரு முறையாவது மதிப்பாய்வு செய்ய ஆயங்கள் மற்றும் எழுத்தர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

22:58

34.5.1.

தோழமைக் கொள்கை

தோழமைக் கொள்கையின்படி, ஆயத்தின் உறுப்பினர் மற்றும் ஒரு எழுத்தர், அல்லது ஆயத்தின் இரண்டு உறுப்பினர்கள், சபை நிதிகளைப் பதிவுசெய்து அனுப்ப சிரத்தையோடு ஈடுபட வேண்டும்.

தலைவர்கள் தங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் ஒருபோதும் பகிரக்கூடாது (33.9.1.1 பார்க்கவும்).

34.5.2.

தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளைப் பெறுதல்

பரிசுத்தவான்களின் தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளைப் பெறுவதற்கும் கணக்கு வைப்பதற்குமான பரிசுத்தமான பொறுப்பை கர்த்தர் ஆயர்களுக்கு வழங்கியுள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42: 30–33 119 பார்க்கவும்). ஆயரும் அவரது ஆலோசகர்களும் மட்டுமே தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளைப் பெறலாம். எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களின் மனைவிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், எழுத்தர்கள் அல்லது பிற தொகுதி உறுப்பினர்கள் இந்த நன்கொடைகளைப் பெறக்கூடாது.

34.5.3.

தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளை சரிபார்த்தல் மற்றும் பதிவு செய்தல்

நன்கொடைகள் பெறப்பட்ட ஞாயிறு அன்று சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். ஆயத்தின் உறுப்பினர் மற்றும் ஒரு எழுத்தர் அல்லது ஆயத்தின் இரண்டு உறுப்பினர்கள், ஒவ்வொரு உறையையும் ஒன்றாகத் திறக்கிறார்கள். தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகள் படிவத்தில் எழுதப்பட்டிருக்கும் தொகையும் உறையில் வைக்கப்பட்ட நிதியும் ஒன்றே என்பதை அவர்கள் சரிபார்க்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நன்கொடையையும் சரியாக பதிவு செய்கிறார்கள். நிதியும் எழுதப்பட்ட தொகையும் வேறுபட்டால், முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக முடிந்தமட்டும் உடனே நன்கொடையாளரைத் தொடர்புகொள்கிறார்கள்.

34.5.4.

தசமபாகம் மற்றும் பிற காணிக்கைகளை டெபாசிட் செய்தல்

பதிவுசெய்யப்பட்ட தொகைகள் பெறப்பட்ட நிதியுடன் பொருந்துவதை உறுதிசெய்த பிறகு ஒரு டெப்பாசிட் தயாரிக்கப்பட வேண்டும்.

24 மணிநேர வங்கி வைப்புவசதி இருக்கும் இடத்தில், ஆயத்தின் உறுப்பினரும் மற்றொரு மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவரும், நிதி திறக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட அதே நாளில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வார்கள்.

24 மணிநேர வங்கி வைப்புவசதி கிடைக்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை வங்கி மூடப்பட்டிருக்கும்போது, அடுத்த வணிக நாளில் டெபாசிட் செய்ய, ஆயர் ஒரு மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவரை நியமிக்கிறார். அவர்:

  • பணம் டெபாசிட் செய்யப்படும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

  • டெபாசிட் தேதி மற்றும் தொகையைக் காட்டும் டெபாசிட் ரசீதைப் பெற வேண்டும்.

34.5.5.

சபை நிதிகளைப் பாதுகாத்தல்

சபை நிதிகளுக்கு பொறுப்புள்ள உறுப்பினர்கள் ஒருபோதும் அவைகளை கூடுமிடத்தில் ஒரு இரவுக்கு இருக்குமாறு விடக்கூடாது அல்லது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்ற எந்த நேரத்திலும் அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

34.5.7.

பிணைய மற்றும் தொகுதி பட்டுவாடாக்களை நிர்வகித்தல்

தலைமை அதிகாரியின் அங்கீகாரம் இல்லாமல் பிணையம் அல்லது தொகுதி செலவுகள் செய்யவோ அல்லது செலுத்தவோ கூடாது.

இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் ஒவ்வொரு பட்டுவாடாவையும் அங்கீகரிக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பிணைய அல்லது ஆயத்தின் தலைமையில் உறுப்பினராக இருக்க வேண்டும். பட்டுவாடாவுக்கு ஆலோசகர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், பிணையத் தலைவர் அல்லது ஆயர் ஒவ்வொரு பட்டுவாடாவையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். தலைவர்கள் தங்களுக்கே பட்டுவாடா செய்வதை அங்கீகரிக்கக் கூடாது.

ஒரு ஆயர் உபவாச காணிக்கையை தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ பயன்படுத்துவதற்காக ஆயரின் உத்தரவை அங்கீகரிக்கும் முன் பிணையத் தலைவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. ஒரு ஆயர் உபவாச காணிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு முன் அல்லது பிணையத் தலைவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கான ஆயரின் உத்தரவை அங்கீகரிக்கும் முன், பிரதேச தலைமை உறுப்பினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. வழிகாட்டுதலுக்காக 22.5.1.2 பார்க்கவும்.

திரும்பப்பெறக் கோரும் உறுப்பினர், எந்தவொரு ரசீதுகள் அல்லது விலைப்பட்டியல்களின் காகித அல்லது மின்னணு நகலை வழங்குகிறார். அவர் அல்லது அவள் வாங்கிய நோக்கம், தொகை மற்றும் தேதி ஆகியவற்றை சேர்க்கிறார்.

நிதி முன்பே கொடுக்கப்பட்டால், நோக்கம், தொகை மற்றும் தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உறுப்பினர் பணம் பெறுவதற்கான கோரிக்கைப் படிவத்தை சமர்ப்பிக்கிறார். செலவினத்தைச் செலுத்திய பிறகு, உறுப்பினர் (1) செலவிடப்பட்ட நிதிக்கான ரசீதுகள் அல்லது விலைப்பட்டியல்களை வழங்குவார் மேலும் (2) செலவிடப்படாத நிதியைத் திருப்பித் தருவார். திரும்பப் பெற்ற நிதியை மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டும்.

34.5.9

நிதி பதிவேடுகள் பராமரித்தல்

ஒவ்வொரு பிணையம் மற்றும் தொகுதி தற்போதைய, துல்லியமான நிதி பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.

பதிவுகள் மற்றும் அறிக்கைகளின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவலுக்கு, எழுத்தர்கள் சபை தலைமையகம் அல்லது பகுதி அலுவலகத்தின் அறிவுரைகளைப் பார்க்க வேண்டும். நிதிப் பதிவேடுகள் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் மற்றும் நடப்பு ஆண்டிற்குப் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

34.6

வரவு செலவுத் திட்டமும் செலவுகளும்

வரவு செலவு கொடைத்திட்டம் பிணையங்கள் மற்றும் தொகுதிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களுக்கு செலுத்த பொது சபை நிதியை வழங்குகிறது.

பெரும்பாலான நிகழ்ச்சிகள் எளிமையாக இருக்க வேண்டும் மற்றும் சிறிய அல்லது செலவு இல்லாமல் இருக்க வேண்டும்.

34.6.1.

பிணையம் மற்றும் தொகுதி வரவு செலவு

ஒவ்வொரு பிணைய மற்றும் தொகுதி ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துகிறது. பிணையத் தலைவர் பிணைய வரவு செலவை நிர்வகிக்கிறார், ஆயர் தொகுதி வரவு செலவை நிர்வகிக்கிறார்.

வழிகாட்டுதல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • தொடர் செலவுகள் பரிசீலிக்கப்படுவதை உறுதிசெய்ய, முந்தைய ஆண்டில் செலவழித்த தொகைகளை மதிப்பாய்வு செய்யவும்.

  • அமைப்புகளின் வரவு செலவு தேவைகளை விரிவாக மதிப்பிடுமாறு கேளுங்கள்.

  • அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு நடைமுறைகளைப் பயன்படுத்தி பட்ஜெட்டைத் தொகுக்கவும்.

34.6.2.

வரவு செலவு கொடை

34.6.2.1

வரவு செலவு ஒதுக்கீடு

பின்வரும் வகைகளில் வருகையின் அடிப்படையில் வரவு செலவு நிதிகள் காலாண்டுக்கு ஒதுக்கப்படுகின்றன:

  • திருவிருந்து கூட்டம்.

  • வாலிபர்

  • இளம் பெண்கள்

  • ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் 7–10 வயதுடையோர்

  • ஒற்றை இளம் வயது வந்தோர்

வருகையை துல்லியமாகவும் சரியான நேரத்திலும் தெரிவிப்பது முக்கியம் (33.5.1.1 பார்க்கவும்).

34.6.2.2

வரவு செலவு நிதியை பொருத்தமானபடி பயன்படுத்தல்

பிணைய தலைவர்களும் ஆயர்களும் வரவு செலவு ஒதுக்கீடு நிதிகள் ஞானமாக செலவிடப்படுவதை உறுதி செய்கின்றனர்.

அனைத்து நிகழ்ச்சிகள், திட்டங்கள், கையேடுகள் மற்றும் பொருட்களுக்கு பணம் செலுத்த பிணையம் மற்றும் தொகுதி வரவு செலவு நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

34.6.2.3

அதிகப்படியான வரவு செலவு

அதிகப்படியான வரவு செலவு ஒதுக்கீடு நிதியை செலவிடக்கூடாது. அதிகப்படியான தொகுதி நிதியை பிணையத்துக்கு திரும்ப வழங்க வேண்டும்.

34.7

தணிக்கைகள்

34.7.1.

பிணைய தணிக்கை குழு

பிணையத் தலைவர் ஒரு பிணைய தணிக்கைக் குழுவை நியமிக்கிறார். பிணைய மற்றும் தொகுதி நிதிகள் சபைக் கொள்கையின்படி கையாளப்படுவதை இந்தக் குழு உறுதி செய்கிறது.

34.7.3.

நிதி தணிக்கை

பிணையத் தணிக்கையாளர்கள் பிணையங்கள், தொகுதிகள் மற்றும் குடும்ப வரலாற்று மையங்களின் நிதிப் பதிவேடுகளை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தணிக்கை செய்கின்றனர்.

தணிக்கையின் போது கேள்விகளுக்கு பதிலளிக்க, அங்கத்தின் தலைமை அதிகாரி மற்றும் நிதிக்கு நியமிக்கப்பட்ட எழுத்தர் இருக்க வேண்டும்.

34.7.5.

சபை நிதிகளின் இழப்பு, திருட்டு, மோசடி அல்லது தவறாகப் பயன்படுத்துதல்

பிணையத் தணிக்கைக் குழுவின் பிணையத் தலைவருக்கு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டிய தருணங்கள்:

  • சபை நிதி காணாமற்போனது அல்லது திருடப்பட்டது.

  • ஒரு தலைவர் சபை நிதியை மோசடி செய்துள்ளார் அல்லது தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.