“33. பதிவேடுகளும் அறிக்கைகளும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“33. பதிவேடுகளும் அறிக்கைகளும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை
33.
பதிவேடுகளும் அறிக்கைகளும்
33.0
முன்னுரை
கர்த்தரின் சபையில் பதிவேடு பராமரிப்பது எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. உதாரணமாக:
ஆதாம் “ஞாபகப் புஸ்தகம்” பராமரித்தான் (மோசே 6:5).
அதனால் “அவர்கள் நினைவுகூரப்பட்டு தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்படவும்,” கிறிஸ்துவின் சபையில் ஞானஸ்நானம் பெற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டதாக மரோனி போதித்தான். (மரோனி 6:4).
“கர்த்தருக்கு முன்பாக சத்தியமான பதிவை அவன் செய்யத்தக்கதாக” ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பதிவு செய்பவர் அழைக்கப்பட வேண்டும் என்று ஜோசப் ஸ்மித் அறிவுறுத்தினார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:2).
33.1
சபை பதிவேடுகளின் கண்ணோட்டம்
சபை பதிவேடுகள் பரிசுத்தமானவை. அவற்றில் உள்ள தகவல்கள் உணர்வுபூர்வமானவை மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும். சபை பதிவேடு முறைமைகள் அழைப்புகளின் அடிப்படையில் உறுப்பினர் தகவல்களை பெற அதிகாரமளிக்கின்றன.
பதிவேடுகள் தலைவர்களுக்கு உதவலாம்:
-
சிறப்பு கவனிப்பு தேவைப்படுபவர்களை அடையாளம் காண.
-
ஒரு நபர் எந்த இரட்சிப்பின் நியமங்களைப் பெற்றார் அல்லது தேவைப்படலாம் என்பதைக் கண்டறிய.
-
உறுப்பினர்களின் முகவரி கண்டறிய.
பின்வரும் வகையான பதிவேடுகள் சபை அங்கங்களில் வைக்கப்பட்டுள்ளன:
-
உறுப்பினர் பங்கேற்பு அறிக்கைகள் (33.5 பார்க்கவும்)
-
உறுப்பினர் பதிவேடுகள் (33.6 பார்க்கவும்)
-
வரலாற்றுப் பதிவேடுகள் (33.7 பார்க்கவும்)
-
நிதி பதிவேடுகள் (அத்தியாயம் 34 பார்க்கவும்)
33.2
எழுத்தர்களுக்கான பொதுவான அறிவுரைகள்
அவர்கள் தற்போதைய ஆலய பரிந்துரை வைத்திருக்க வேண்டும்.
சபை நிதிகளைப் பாதுகாக்கவும், சபைப் பதிவேடுகள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தவும் தற்போதைய கொள்கைகளை எழுத்தர்கள் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். எழுத்தர்கள் உடனடியாக ஆசாரியத்துவத் தலைவர்களுக்கு ஏதேனும் முறைகேடுகள் குறித்து தெரிவிக்கின்றனர். முறைகேடுகளைத் தீர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், எழுத்தர்கள் சபைத் தலைமையகத்தில் உள்ள ரகசிய பதிவேடு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தொலைபேசி: 1-801-240-2053 or 1-800-453-3860, நீட்சி 2-2053
இலவச தொடர்பு எண் (GSD phone): 855-537-4357
மின்னஞ்சல் ConfidentialRecords@ChurchofJesusChrist.org
எழுத்தர்களின் பணிக்காலம் அவர்கள் தங்கள் கடமைகளைக் கற்றுக்கொள்வதற்கும் அவர்களின் பணியில் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் போதுமானதாக இருக்க வேண்டும். அவர்கள் பிணையத் தலைமை அல்லது ஆயத்தின் உறுப்பினர்களாக இல்லாததால், ஒரு பிணையத் தலைவர் அல்லது ஆயம் மாற்றியமைக்கப்படும்போது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியதில்லை.
33.4
தொகுதி பதிவேடுகளும் அறிக்கைகளும்
33.4.1.
ஆயம்
ஆயர் தொகுதி பதிவேடு பராமரித்தலை மேற்பார்வையிடுகிறார்.
33.4.2.
தொகுதி எழுத்தர்
ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான, செயல்படும் தொகுதி எழுத்தர் இருக்க வேண்டும். அவர் ஆயத்தால் பரிந்துரைக்கப்படுகிறார் மற்றும் பிணையத் தலைமை உறுப்பினர் அல்லது நியமிக்கப்பட்ட உயர் ஆலோசகரால் அழைக்கப்பட்டு பணிக்கப்படுகிறார். அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்க வேண்டும் மற்றும் தற்போதைய ஆலய பரிந்துரை வைத்திருக்க வேண்டும். இவர் தொகுதி ஆலோசனைக்குழு உறுப்பினர். 29.2ல் குறிப்பிட்டுள்ளபடி தொகுதி கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
தொகுதி எழுத்தர் ஆயம் மற்றும் பிணைய எழுத்தர்களால் அறிவுறுத்தப்படுகிறார். உதவி தொகுதி எழுத்தர்கள் உதவிக்கு அழைக்கப்படலாம்.
33.4.2.1
பதிவேடுகள் பராமரிக்கும் பொறுப்புகள்
தொகுதி எழுத்தர் அல்லது பணிக்கப்பட்ட உதவி எழுத்தர் பின்வரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளார்:
-
தொகுதி தலைமைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட பணிகள் மற்றும் முடிவுகள் பற்றிய பதிவேட்டை வைத்திருக்கிறார்.
-
பதிவேடுகள் மற்றும் அறிக்கைகள் துல்லியமானவை மற்றும் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறார்.
தொகுதி எழுத்தர் சபைப் பதிவேடுகளை பராமரிக்கும் கருவிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் (33.0 பார்க்கவும்). தலைவர்கள் அடையாளம் காண உதவும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்:
-
உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் தேவைகள்.
-
நிதி உட்பட ஆதாரங்களின் கிடைக்கும் தன்மை.
தொகுதி எழுத்தர்கள் தங்கள் உறுப்பினர் தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் புகாரளிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்கின்றனர்.
மற்ற பதிவேடு பராமரிக்கும் கடமைகளில் பின்வருவன அடங்கும்:
-
நியமங்கள் முறையாகவும் உடனடியாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்தல்.
-
தொகுதி மாநாட்டுக்கு அலுவலர்களை ஆதரிக்கும் படிவம் ஆயத்தம் செய்தல்.
-
தொகுதி உறுப்பினர் ஆலோசனைக் குழுக்களுக்கான தகவல்களை பதிவு செய்தல்.
-
நிதி பதிவேடுகளை பராமரித்தல் (34.2.2 பார்க்கவும்).
33.5
உறுப்பினர் பங்கேற்றலைப்பற்றிய அறிக்கைகள்
உறுப்பினர் பங்கேற்பு அறிக்கைகள் தலைவர்கள் உறுப்பினர்களின் முன்னேற்றம் மற்றும் தேவைகளில் கவனம் செலுத்த உதவுகின்றன.
33.5.1.
அறிக்கைகளின் விதங்கள்
33.5.1.1
வருகை அறிக்கைகள்
திருவிருந்து கூட்டங்கள் மற்றும் ஞாயிறு ஆசாரியத்துவம் மற்றும் அமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்வது LCR அல்லது உறுப்பினர் கருவிகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது.
திருவிருந்து கூட்டம். ஒவ்வொரு வாரமும் தொகுதி எழுத்தர் அல்லது உதவி தொகுதி எழுத்தர் மூலம் திருவிருந்து கூட்டத்திற்கு வருகை பதிவு செய்யப்படுகிறது. எண்ணிக்கை என்பது பார்வையாளர்கள் உட்பட நேரில் அல்லது நேரலை மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கையாகும்.
ஞாயிற்றுக் கிழமை குழுமம் மற்றும் அமைப்புக் கூட்டங்கள். ஒவ்வொரு வாரமும் குழுமம் மற்றும் அமைப்பு செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களால் வருகை பதிவு செய்யப்படுகிறது. வருகையை பதிவு செய்வதில் இளைஞர் தலைவர்களும் உதவலாம். எண்ணிக்கை என்பது பார்வையாளர்கள் உட்பட நேரில் அல்லது நேரலை மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வோர் எண்ணிக்கையாகும். ஆரம்ப வகுப்பில் பணியாற்றும் உறுப்பினர்கள் அல்லது தொகுதிக்குள் இளைஞர் தலைவர்களாகப் பணியாற்றும் உறுப்பினர்களும் வருகையில் உள்ளடங்குவார்கள்.
தொகுதி எழுத்தர் எந்த அமைப்பின் சார்பாகவும் வருகையைப் பதிவு செய்யலாம்.
33.5.1.2
ஊழியம் செய்ய நேர்காணல் அறிக்கைகள்
21.3 பார்க்கவும்.
33.5.1.3
காலாண்டு அறிக்கைகள்
அறிக்கையில் உள்ள ஒவ்வொரு எண்ணும் தனிப்பட்ட தேவைகளைக் கொண்ட ஒரு உண்மையான நபரைக் குறிக்கிறது (ஏலமன் 15:13 பார்க்கவும்).
காலாண்டு அறிக்கையானது, தலைவர்களுக்கு அவர்களின் ஊழிய முயற்சிகள் பற்றிய உணர்த்துதல் தேடும் போது உள்ளுணர்வுகளை வழங்கக்கூடிய பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.
தனிநபர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய பிணைய மற்றும் தொகுதி தலைவர்கள் காலாண்டு அறிக்கையை தவறாமல் பார்க்கின்றனர்.
ஒவ்வொரு தொகுதியும் சபைத் தலைமையகத்திற்கு காலாண்டு அறிக்கையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கிறது. எழுத்தர் ஆயருடன் அறிக்கையை மதிப்பாய்வு செய்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிற்கும் அடுத்த மாதத்தின் 15 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கிறார்.
33.5.2.
உறுப்பினர் பட்டியல்கள்
சபைப் பதிவேடு பராமரிக்கும் கருவிகள் தலைவர்களுக்கு உறுப்பினர் பட்டியல்களை கையாள அனுமதிக்கின்றன. இந்த பட்டியல்கள் தலைவர்கள் பின்வருவனவற்றை அடையாளம் காண உதவ முடியும்:
-
எந்த உறுப்பினர்கள் அவர்கள் தகுதிபெற்றுள்ள நியமங்களை இன்னும் பெறவில்லை.
-
எந்த வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் ஒரு ஊழிய சேவை செய்ய தகுதியுடையவர்கள்.
-
எந்த இளைஞர்கள் தற்போதைய ஆலய பரிந்துரை பெற்றிருக்கவில்லை.
-
ஆயத்தின் உறுப்பினருடனான சந்திப்புகளுக்கு எந்த இளைஞர்கள் திட்டமிடப்பட வேண்டும்.
குழுமம் மற்றும் அமைப்புத் தலைவர்கள் தங்கள் குழுமம் அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களின் பட்டியலை கையாள அனுமதிபெற வேண்டும்.
33.6
உறுப்பினர் பதிவேடுகள்
உறுப்பினர் பதிவேடுகளில் உறுப்பினர்களின் பெயர்கள், தொடர்புத் தகவல், நியம விவரங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் ஆகியவை அடங்கும்.
உறுப்பினர் வசிக்கும் தொகுதியில் உறுப்பினர் பதிவேடுகள் வைக்கப்பட வேண்டும். விதிவிலக்குகள், அரிதாக இருக்க வேண்டும், அதற்கு சம்பந்தப்பட்ட ஆயர்கள் மற்றும் பிணைய தலைவர்களின் ஒப்புதல் தேவை. விதிவிலக்கைக் கோர, பிணையத் தலைவர் LCR ஐப் பயன்படுத்தி பிரதான தலைமையின் அலுவலகத்தில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.
பின்வருவனவற்றை உடனடியாகச் செய்வது அவசியம்:
-
நியமத் தகவலை பதிவு செய்யவும்.
-
தொகுதிகள் அல்லது வெளியே செல்லும் உறுப்பினர்களின் பதிவுகளை நகர்த்தவும்.
-
புதிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினராகிய பெற்றோரின் புதிய குழந்தைகளுக்கான பதிவுகளை உருவாக்கவும்.
-
ஒரு உறுப்பினரின் மரணத்தை பதிவு செய்யவும்.
-
திருமணம் மற்றும் குடும்பத் தகவல்களை பதிவு செய்யவும்.
ஆயர் அல்லது பிணையத் தலைவர், நேர்காணல் செய்யப்படுவதற்கு முன், உறுப்பினர் பதிவேடு பொருத்தமான தொகுதியில் இருப்பதை உறுதி செய்கிறார்:
-
சபை அழைப்பு.
-
ஆலய சிபாரிசு.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் அல்லது அந்த ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவலுக்கு நியமிக்கப்படவிருக்க வேண்டும்.
பதிவேட்டில் பின்வருவனவற்றில் எதுவும் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்கிறார்:
-
சிறு குறிப்பு
-
முத்திரித்தல் அல்லது நியம கட்டுப்பாடு பற்றிய கருத்து
-
முறையான உறுப்பினர் கட்டுப்பாடுகள்
எந்தச் சூழ்நிலையிலும் ஆயர் அல்லது எழுத்தரைத் தவிர வேறு யாருக்கும் உறுப்பினர் பதிவேடுகளை வழங்கவோ காட்டவோ கூடாது.
உறுப்பினர் கருவிகள் செயலியில் உறுப்பினர்கள் தங்களுக்கான மற்றும் வீட்டில் வசிக்கும் எந்த சார்ந்திருக்கும் குழந்தைகளின் உறுப்பினர் தகவலை தாங்களே பார்க்கலாம். அவர்கள் தங்கள் தனிப்பட்ட நியம சுருக்கங்களின் அச்சிடப்பட்ட நகல்களை எழுத்தரிடமிருந்து கோரலாம். பிழைகள் கண்டறியப்பட்டால், அவை உறுப்பினர் பதிவேடுகளில் சரி செய்யப்படுவதை ஒரு எழுத்தர் உறுதி செய்கிறார்.
33.6.1.
சபை பதிவுகளில் பயன்படுத்தப்படும் பெயர்கள்
உள்ளூர் சட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு நபரின் முழு சட்டபூர்வ பெயர், உறுப்பினர் பதிவுகள் மற்றும் நியம சான்றிதழ்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.
33.6.2.
உறுப்பினர் பதிவேடு
பின்வரும் நபர்கள், பதிவேட்டில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் பதிவேட்டைக் கொண்டிருக்க வேண்டும்:
-
ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டவர்கள்
-
9 வயதிற்குட்பட்ட ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆனால் ஞானஸ்நானம் பெறாதவர்கள்
-
வயது பொருட்டின்றி, அறிவுசார் குறைபாடுகள் காரணமாக பொறுப்பேற்க முடியாதவர்கள்
-
பின்வரும் இரண்டும் பொருந்துகிற 9 வயதுக்குட்பட்ட ஆசீர்வதிக்கப்படாத குழந்தைகள்:
-
குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் அல்லது ஒரு தாத்தா பாட்டி சபையில் உறுப்பினராக உள்ளவர்கள்.
-
ஒரு பதிவேடு உருவாக்க பெற்றோர்கள் இருவரும் அனுமதி வழங்குகிறார்கள். (ஒரு பெற்றோர் மட்டுமே குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலாராக இருந்தால், அந்த பெற்றோரின் அனுமதி போதுமானது.)
-
9 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர், உறுப்பினர் பதிவு பெற்றிருந்தாலும், ஞானஸ்நானம் பெறாமல், திடப்படுத்தப்படாமல் உறுப்பினர் இல்லை. இருப்பினும், அந்நபர் வசிக்கும் தொகுதி, அந்த நபருக்கு 18 வயது வரை உறுப்பினர் பதிவேடு வைத்திருக்கிறது. அந்த நேரத்தில், அந்த நபர் ஞானஸ்நானம் பெற வேண்டாம் என்று முடிவு செய்தால், ஆயர் உறுப்பினர் பதிவேட்டை ரத்து செய்கிறார். பிணையத் தலைவரின் அனுமதி தேவை.
அறிவுசார் குறைபாடு காரணமாக ஞானஸ்நானம் பெறாத நபர் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் உட்பட, அவர்கள் கோரும் வரை பதிவேடுகள் ரத்து செய்யப்படாது.
33.6.3.
புதிய தொகுதி உறுப்பினர்களின் பதிவேடுகள்
தொகுதி எழுத்தர் அல்லது தொகுதி உதவி எழுத்தர் புதிய தொகுதி உறுப்பினர்களை அவர்களின் உறுப்பினர் பதிவேடுகள் வந்தவுடன் தனிநபர் நியமச் சுருக்கத்தை துல்லியமாக மதிப்பாய்வு செய்ய தொடர்பு கொள்கிறார்.
33.6.6.
உறுப்பினர்களின் புவியியல் தொகுதிக்கு வெளியே பணியாற்றும் உறுப்பினர்களின் பதிவேடுகள்
33.6.6.2
முழுநேர ஊழியக்காரர்களின் பதிவேடுகள்
24.6.2.8 பார்க்கவும்.
33.6.13.
விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகளின் பதிவேடுகள்
அனைத்து உறுப்பினர் பதிவேடுகளும் உள்ளூர் சட்டம் அல்லது வழக்கத்தால் வரையறுக்கப்பட்டபடி ஒரு நபரின் சட்டப்பூர்வ பெயரைப் பயன்படுத்துகின்றன. விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகளும் இதில் அடங்கும்.
விவாகரத்து பெற்ற பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகள் பெரும்பாலும் இரு பெற்றோரின் தொகுதிகளிலும் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். ஒரு அங்கம் மட்டுமே குழந்தையின் அதிகாரபூர்வ உறுப்பினர் பதிவேட்டை வைத்திருக்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம், அவர் அல்லது அவள் கலந்துகொள்ளும் மற்ற தொகுதியின் அங்கத்திலும் உறுப்பினர் பதிவேடு உருவாக்கப்படலாம். இது குழந்தையின் பெயர் மற்றும் தொடர்புத் தகவலை தொகுதி பட்டியல்கள் மற்றும் வகுப்புப் பட்டியல்களில் சேர்க்க அனுமதிக்கிறது.
அங்கத்திற்கு வெளியே உறுப்பினர் பதிவேடு உள்ள குழந்தைகள் அந்த அங்கத்தில் அழைப்பைப் பெறலாம்.
33.6.15.
உறுப்பினர் பதிவேடுகள் மீதான கட்டுப்பாடுகளை நகர்த்தவும்
முறையான உறுப்பினர் கட்டுப்பாடுகள் அல்லது மற்றொரு தீவிரமான அக்கறை நிலுவையில் இருக்கும் போது ஒரு உறுப்பினர் இடம்பெயர்ந்தால், ஆயர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர் உறுப்பினர் பதிவேட்டில் நகர்வுக் கட்டுப்பாட்டை வைக்கலாம். இதைச் செய்ய அவர் LCR பயன்படுத்துகிறார்.
நகர்த்தக் கட்டுப்பாடு உள்ள பதிவேடு, தடையை விதித்த ஆசாரியத்துவத் தலைவர் அதை அகற்றுவதற்கு அதிகாரமளிக்கும் வரை புதிய அங்கத்துக்கு மாற்றப்படுவதில்லை.
33.6.16.
“முகவரி தெரியாத” கோப்பிலிருந்து பதிவுகள்
சபை தலைமையகத்தில் உள்ள “முகவரி தெரியாத கோப்பில்” அவரது பதிவு சென்ற பிறகு, ஒரு உறுப்பினர் சில சமயங்களில் கண்டுபிடிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில், தொகுதி எழுத்தர் LCR ஐப் பயன்படுத்தி பதிவேட்டைக் கோருகிறார்.
33.6.17.
நியமத் தகவலைப் பதிவுசெய்தல் மற்றும் சரிசெய்தல்
அத்தியாயம் 18 பார்க்கவும்.
33.6.19.
உறுப்பினர் பதிவேடுகளின் தணிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பிணைய எழுத்தர் அல்லது உதவி பிணைய எழுத்தர் LCR ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் பதிவேடுகளின் தணிக்கை நடத்தப்படுவதை உறுதிசெய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30க்குள் தணிக்கை முடிக்கப்பட வேண்டும்.
33.7
வரலாற்றுப் பதிவேடுகள்
33.7.1.
தொகுதி மற்றும் பிணைய வரலாறுகள்
கர்த்தர் அவருடைய சபையைப் பற்றிய “முக்கியமான எல்லாவற்றின் வரலாறும்” எழுதி வைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 69:3; மேலும் வசனம் 5; ஆல்மா 37:2 பார்க்கவும்).
சபையில் உள்ள ஒவ்வொரு அங்கமும் அங்கம் தொடர்பான அனைத்து முக்கியமான விஷயங்களையும் ஆவணப்படுத்த வேண்டும்.
வரலாற்றை பாதுகாப்பது, அதை எழுதுபவர்களின் மற்றும் படிப்பவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஒரு ஆவிக்குரிய பணியாகும்.
பிணைய எழுத்தர் அல்லது உதவி பிணைய எழுத்தர் பிணையங்களின் வரலாற்றைத் தயாரிக்கிறார். ஆயம் தொகுதிக்கு இதே அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. Stake, District, and Mission Annual Histories on ChurchofJesusChrist.orgல் அறிவுரைகள் காணப்படுகின்றன.
33.8
பதிவேடுகளின் இரகசியத்தன்மை
சபையின் பதிவேடுகள் காகிதத்தில் இருந்தாலும் அல்லது டிஜிட்டல் முறையில் இருந்தாலும் அவை ரகசியமானவை. இதில் அடங்கியவையாவன:
-
உறுப்பினர் பதிவேடுகள்.
-
நிதி பதிவேடுகள்
-
கூட்டங்களிலிருந்து குறிப்புகள்
-
அதிகாரபூர்வ படிவங்கள் மற்றும் ஆவணங்கள் (உறுப்பினர் ஆலோசனைக்குழுக்களின் பதிவுகள் உட்பட).
உறுப்பினர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படுவதைத் தலைவர்கள் உறுதி செய்கிறார்கள்:
-
சபைக்கு தேவையானதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
-
அங்கீகரிக்கப்பட்ட சபை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
-
அதைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
மின்னணு முறையில் சேமிக்கப்படும் தகவல் பாதுகாப்பாகவும், உரிய முறையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் (33.9.1 பார்க்கவும்).
33.9
பதிவேடுகள் மேலாண்மை
33.9.1.
பாதுகாப்பு
அனைத்து சபைப் பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் தரவுகள் அதிகாரம் பெறாதோர் பயன்படுத்தல், மாற்றம், அழிவு அல்லது வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தகவல் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சபைக்குச் சொந்தமான சாதனங்கள் அல்லது சேமிப்பு உபகரணங்கள் உடனடியாக incidents.ChurchofJesusChrist.org இல் தெரிவிக்கப்பட வேண்டும். சபை தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதையும் புகாரளிக்க வேண்டும்.
33.9.1.1
பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் (Usernames and Passwords)
பிணையத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் பிற தலைவர்கள் தங்கள் சபைப் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை ஆலோசகர்கள், எழுத்தர்கள், நிர்வாகச் செயலாளர்கள் அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
33.9.1.3
தரவு தனியுரிமை
தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்தும் தரவு பாதுகாப்பு சட்டங்களை பல நாடுகள் இயற்றியுள்ளன. தனிநபர்களை அடையாளம் காணும் உறுப்பினர் பதிவேடுகள் மற்றும் பிற சபைப் பதிவேடுகளில் உள்ள தகவல்கள் இதில் அடங்கும். சபைப் பதிவேடுகளின் உள்ளூர் நிர்வாகத்திற்கு தரவு பாதுகாப்பு சட்டங்களின் பயன்பாடு குறித்து கேள்விகள் உள்ள தலைவர்கள் DataPrivacyOfficer@ChurchofJesusChrist.orgஇல் சபைத் தரவு தனியுரிமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.