கையேடுகளும் அழைப்புகளும்
28. மரித்தோருக்கான ஆலய நியமங்கள்


“28. மரித்தோருக்கான ஆலய நியமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“28. மரித்தோருக்கான ஆலய நியமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

ஞானஸ்நான தொட்டி

28.

மரித்தோருக்கான ஆலய நியமங்கள்

28.0

முன்னுரை

ஆலயங்களில் செய்யப்படும் நியமங்கள், குடும்பங்கள் நித்தியத்திற்கும் ஒன்றாக இருக்கவும், தேவனின் பிரசன்னத்தில் முழு மகிழ்ச்சியை அனுபவிக்கவும் உதவுகிறது.

பரலோக பிதாவின் பிள்ளைகள் அவரிடம் திரும்புவதற்கு, அவர்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும், இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக ஆக வேண்டும், மேலும் ஒவ்வொரு நியமங்களுடனும் தொடர்புடைய உடன்படிக்கைகளை மதிக்க வேண்டும்.

பரலோக பிதா தம்முடைய பிள்ளைகளில் பலர் தங்கள் பூலோக வாழ்வின் போது இந்த நியமங்களைப் பெறமாட்டார்கள் என்பதை அறிந்திருந்தார். அவர்கள் நியமங்களைப் பெறுவதற்கும், அவருடன் உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் அவர் மற்றொரு வழியை வழங்கினார். ஆலயங்களில், பதிலி மூலம் நியமங்கள் செய்யலாம். உயிரோடிருக்கும் ஒருவர் இறந்து போன ஒருவரின் சார்பாக நியமங்களைப் பெறுகிறார் என்பதே இதன் பொருள். ஆவி உலகில், மரித்தவர்கள் தங்களுக்காக நிறைவேற்றப்பட்ட நியமங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தேர்வு செய்யலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:19, 32–34, 58–59 பார்க்கவும்).

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்களைப் பெறாத மரித்த உறவினர்களை அடையாளம் காண சபை உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் அந்த உறவினர்களின் சார்பாக நியமங்களை நிறைவேற்றுகிறார்கள்.

உறுப்பினர்கள் ஆலய பணிக்காக குடும்பப் பெயர்களைத் தயாரிக்கவில்லை என்றால் (28.1.1 பார்க்கவும்), நியமங்கள் தேவைப்படும் மரித்த நபர்களின் பெயர்கள் ஆலயத்தில் கொடுக்கப்படும்.

28.1

பதிலி நியமங்களை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள்

அவர்கள் மரிக்கும் போது 8 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மரித்த நபர்கள் அவர்கள் சார்பாக பதிலி நியமங்களை நிறைவேற்றலாம். 28.3 இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, பின்வருவனவற்றில் ஏதேனும் பொருந்தினால், அவர்கள் மரித்த தேதியிலிருந்து 30 நாட்கள் கடந்தவுடன், அனைத்து மரித்த நபர்களுக்கும் பதிலி நியமங்கள் நிறைவேற்றப்படலாம்:

  • மரித்தவரின் நெருங்கிய உறவினர் (விவாகரத்து செய்யப்படாத துணைவர், வயது வந்த குழந்தை, பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்) ஆலய நியமங்களுக்கு பெயரைச் சமர்ப்பிக்கிறார்.

  • நியமங்களை நிறைவேற்றுவதற்கான அனுமதி மரித்தவரின் நெருங்கிய உறவினரிடமிருந்து பெறப்படுகிறது (விவாகரத்து செய்யப்படாத துணைவர், வயது வந்த குழந்தை, பெற்றோர் அல்லது உடன்பிறப்பு).

மேற்கூறிய நிபந்தனைகள் எதுவும் பொருந்தவில்லை என்றால், மரித்தவர் பிறந்து 110 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிலி ஆலய நியமங்கள் நிறைவேற்றப்படலாம்.

28.1.1

ஆலய நியமங்களுக்கு மரித்த நபர்களின் பெயர்களை ஆயத்தம் செய்தல்

ஆலய நியமங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன் FamilySearch.orgல் முடிந்தால், மரித்த குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காணும் தகவலை உள்ளிட வேண்டும்(25.4.2 பார்க்கவும்).

28.1.1.1

குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சமர்ப்பித்தல்

பதிலி ஆலய நியமங்களுக்கு பெயர்களை சமர்ப்பிக்கும் போது, உறுப்பினர்கள் பொதுவாக அவர்களுடைய உறவினர்களின் பெயர்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

28.1.2

மரித்தவர்களுக்கான நியமங்களில் யார் பங்கேற்கலாம்

தற்போதைய ஆலயப் பரிந்துரை வைத்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலில் பங்கேற்கலாம். தற்போதைய ஆலய பரிந்துரை வைத்திருக்கும் தரிப்பித்தல் பெற்ற உறுப்பினர்கள் மரித்தவர்களுக்கான அனைத்து நியமங்களிலும் பங்கேற்கலாம். 26.3 பார்க்கவும்.

28.1.4

நேரம் குறித்தல்

மரித்தவர்களுக்கான நியமங்களை நிறைவேற்றுவதற்கு முன் உறுப்பினர்கள் சந்திக்க நேரம் கேட்க வேண்டியிருக்கலாம். ஒவ்வொரு ஆலயத் தொடர்புத் தகவல் மற்றும் நேரம் குறித்தல் தேவைகளுக்கு temples.ChurchofJesusChrist.org பார்க்கவும்

28.2

மரித்தவர்களுக்கான ஆலய நியமங்களை நிறைவேற்றுதல்

பதிலி நியமங்களைச் செய்யும்போது, ஒரு உறுப்பினரின் அதே பிறப்பு பாலினத்தவர் மட்டுமே மரித்த நபருக்கு பதிலியாக செயல்பட முடியும்.

28.2.1

மரித்தோருக்கான ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்

தற்போதைய ஆலய பரிந்துரையை வைத்திருக்கும் எந்த உறுப்பினரும் ஞானஸ்நான பணிகளில் பணியாற்ற அழைக்கப்படலாம். சில பணிகளில் பின்வருவன அடங்கும்:

  • ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கான பதிலியாக செயல்படுதல்.

  • பதிலி ஞானஸ்நானங்களுக்கு சாட்சியாக செயல்படுதல்.

  • பங்கேற்பவர்களுக்கு உதவுதல்.

மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களும் ஆரோனிய ஆசாரியத்துவத்தில் உள்ள ஆசாரியர்களும் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் நிறைவேற்ற அழைக்கப்படலாம். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களும் மரித்தவர்களுக்கான திடப்படுத்தல்களில் பணியாற்றவும் அழைக்கப்படலாம்.

தரிப்பிக்கப்பட்ட ஆண்கள் மட்டுமே அழைக்கப்படலாம்:

  • ஞானஸ்நான தொட்டி பதிவாளராக சேவை செய்யவும்.

  • திடப்படுத்தல் பதிவாளராக சேவை செய்யவும்.

28.2.2

தரிப்பித்தல் (ஆயத்தம் உட்பட)

மரித்தவர்களுக்கான பதிலி தரிப்பித்தல்களைச் செய்யும்போது, தரிப்பித்தலின் ஆயத்தப் பகுதி தனித்தனியாக நிகழ்த்தப்பட்டு பதிவு செய்யப்படுகிறது (27.2 பார்க்கவும்). தற்போதைய ஆலய பரிந்துரையை வைத்திருக்கும் எந்த ஒரு தரிப்பிக்கப்பட்ட உறுப்பினரும் இந்த நியமங்களைப் பெறுவதற்கு பதிலியாகச் செயல்படலாம்.

28.2.3

துணைவருடன் முத்திரித்தல் மற்றும் குழந்தைகளை பெற்றோருடன் முத்திரித்தல்

ஆலயத்தில், மரித்த நபர்கள் அவர்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொண்ட துணைவர்களுடன் முத்திரிக்கப்படலாம். மரித்தவர்கள் தங்களுடைய உயிரோடிருக்கும் அல்லது மரித்த குழந்தைகளையும் தங்களுடன் முத்திரிக்கலாம். தற்போதைய ஆலய பரிந்துரையை வைத்திருக்கும் ஒரு தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர், முத்திரித்தல் நியமங்களுக்குப் பதிலியாகச் செயல்படலாம்.

28.3

விசேஷித்த சூழ்நிலைகள்

28.1 இல் உள்ள சில வழிகாட்டுதல்கள் பொருந்தாத சூழ்நிலைகளை இந்தப் பாகம் விளக்குகிறது.

28.3.1

பிறப்பதற்கு முன்பே மரித்த குழந்தைகள் (இறந்து பிறந்த மற்றும் கருச்சிதைவு பெற்ற குழந்தைகள்)

பிறப்பதற்கு முன்பே மரித்து போகும் குழந்தைகளுக்கு ஆலய நியமங்கள் தேவையில்லை அல்லது நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் தகவலுக்கு, 38.7. 3 ஐப் பார்க்கவும்.

28.3.2

எட்டு வயதுக்கு முன் மரித்த குழந்தைகள்

சிறு குழந்தைகள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் மீட்கப்பட்டு “பரலோக ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:10). இந்த காரணத்திற்காக, 8 வயதுக்கு முன் மரித்த குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது தரிப்பித்தல் நிறைவேற்றப்படுவதில்லை. இருப்பினும், உடன்படிக்கையில் பிறக்காத அல்லது வாழ்க்கையில் அந்த நியமத்தைப் பெறாத குழந்தைகளுக்கு பெற்றோருடன் முத்திரிக்கப்படுதல் நிறைவேற்றப்படலாம் (18.1 பார்க்கவும்).