கையேடுகளும் அழைப்புகளும்
26. ஆலயப் பரிந்துரைகள்


“26. ஆலயப் பரிந்துரைகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“26. ஆலயப் பரிந்துரைகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

ஒரு மனிதனை ஆயர் நேர்காணல் செய்கிறார்

26.

ஆலயப் பரிந்துரைகள்

26.0

முன்னுரை

ஆலயத்திற்குள் பிரவேசிப்பது ஒரு பரிசுத்தமான சிலாக்கியம். அனைத்து உறுப்பினர்களும் தகுதியானவர்களாக இருக்கவும், அவர்கள் ஆலயத்துக்கு அருகில் வசிக்காவிட்டாலும், தற்போதைய ஆலயப் பரிந்துரையை வைத்திருக்கவும் தொகுதி மற்றும் பிணையத் தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரும் தகுதியானவர்கள் என உறுதிசெய்ய சபைத் தலைவர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள் (சங்கீதம் 24:3-5 பார்க்கவும்).

ஒரு ஆலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு உறுப்பினர்கள் தற்போதைய ஆலயப் பரிந்துரையை வைத்திருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தில் பதிலளிக்கப்படாத ஆலயப் பரிந்துரைகளைப்பற்றிய கேள்விகள் இருந்தால், ஒரு ஆயர் தனது பிணையத் தலைவருடன் ஆலோசனை செய்கிறார். பிணையத் தலைவர் கேள்விகளுடன் பிரதான தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

26.1

ஆலயப் பரிந்துரைகளின் வகைகள்

மூன்று வகையான பரிந்துரைகள் உள்ளன:

  1. தரிப்பிக்கப்படாத உறுப்பினர்களுக்கு ஆலய பரிந்துரை. இந்த பரிந்துரைகள், தங்கள் பெற்றோருக்கு முத்திரிக்கப்பட்ட அல்லது பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களை நடத்துகிற தரிப்பிக்கப்படாத உறுப்பினர்களுக்கானது. அவை தலைவர் மற்றும் எழுத்தர் ஆதாரங்கள் (LCR) மூலம் வழங்கப்படுகின்றன. கூடுதல் தகவலுக்கு 26.4 பார்க்கவும்.

  2. உயிரோடிருக்கும் நியமங்களுக்கான ஆலய பரிந்துரை இந்த பரிந்துரைகள் தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெறுகிற அல்லது துணையுடன் முத்திரிக்கப்படுகிற உறுப்பினர்களுக்காகும். உயிரோடிருக்கிறவர் நியமங்களுக்கான பரிந்துரை, தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான ஒரு வழக்கமான ஆலய பரிந்துரையுடன் இணைக்கப்பட்டுள்ளது (கீழே விவரிக்கப்பட்டுள்ளது).

  3. தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆலய பரிந்துரை. இந்த பரிந்துரைகள் முன்பே தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கானது. அவை LCR மூலம் வழங்கப்படுகின்றன. மரித்தவர்களுக்கான அனைத்து ஆலய நியமங்களிலும் பங்கேற்க ஒரு உறுப்பினரை அவைகள் அதிகாரமளிக்கின்றன. உயிரோடிருக்கிற அல்லது மரித்த பெற்றோர் அல்லது பிள்ளைகளுடன் ஒரு தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர் முத்திரிக்கப்படும்போதும் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் தகவலுக்கு 26.3 பார்க்கவும்.

26.2

ஆலயப் பரிந்துரைகளைப் பாதுகாத்தல்

26.2.1

ஆசாரியத்துவத் தலைவர்கள் ஆலயப் பரிந்துரைகளைப் பாதுகாத்தல்

ஆலயப் பரிந்துரை புத்தகங்களை வைத்திருக்க அதிகாரம் பெற்ற ஆசாரியத்துவத் தலைவர்கள் அவற்றை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

LCRல் உள்ள ஆலய பரிந்துரைக்கான தகவலை அதிகாரமளிக்கப்படாத நபர்கள் அணுக முடியாது என்பதையும் ஆசாரியத்துவத் தலைவர்கள் உறுதி செய்கிறார்கள்.

26.2.3

காணாமற்போன அல்லது களவாடப்பட்ட பரிந்துரைகள்

உறுப்பினர்களின் பரிந்துரை தொலைந்துவிட்டாலோ அல்லது களவாடப்பட்டாலோ, முடிந்தவரை கூடிய விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஆயர் கேட்டுக் கொள்கிறார். அவர் அல்லது ஒரு நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது எழுத்தர் பரிந்துரையை முடிந்தவரை கூடிய விரைவில் ரத்து செய்ய LCR பயன்படுத்துவார். இந்த முறை இல்லை என்றால், பரிந்துரையை ரத்து செய்ய ஆலய அலுவலகத்தை ஆயர் தொடர்பு கொள்கிறார்.

26.2.4

தகுதியின் தரத்தின்படி வாழாமல் பரிந்துரையை வைத்திருப்பவர்கள்

தற்போதைய பரிந்துரையைக் கொண்ட ஒரு உறுப்பினர் தகுதியின் தரத்தின்படி வாழவில்லை என்று ஆயர் தீர்மானித்தால் (26.3 பார்க்கவும்), அவர் உறுப்பினரிடமிருந்து பரிந்துரையைக் கோருகிறார். அவர் பரிந்துரையை ரத்து செய்ய LCR பயன்படுத்துகிறார். இந்த முறை இல்லை என்றால், பரிந்துரையை ரத்து செய்ய ஆலய அலுவலகத்தை ஆயர் தொடர்பு கொள்கிறார்.

26.3

ஆலய பரிந்துரைகளை வழங்குதலுக்கான பொது வழிகாட்டுதல்கள்

ஆலயப் பரிந்துரை கேள்விகளுக்கு பொருத்தமாக உறுப்பினர் பதில் அளித்தால் மட்டுமே ஆசாரியத்துவத் தலைவர்கள் பரிந்துரையை வழங்க வேண்டும்.

ஆலயப் பரிந்துரை நேர்காணல்கள் அவசரத்தில் நடத்தப்படக்கூடாது. அவை தனிப்பட்டதாக இருக்க வேண்டும். இருப்பினும், நேர்காணல் செய்யப்படும் நபர் மற்றொரு வயது வந்தவரை உடனிருக்க அழைக்கலாம்.

ஆலயப் பரிந்துரைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஆசாரியத்துவத் தலைவர்கள் மற்ற எந்த தேவைகளையும் சேர்க்கக்கூடாது. மேலும் அவர்கள் எந்த தேவைகளையும் நீக்கக்கூடாது.

பிணையங்களில், பிணையத் தலைமையின் ஒரு உறுப்பினர் அல்லது பிணைய எழுத்தர் ஆலயப் பரிந்துரையை வழங்கிய பிறகு LCR செயல்படுத்துகிறார். சேகரங்களில், ஊழியத் தலைமையின் ஒரு உறுப்பினர் அல்லது ஊழிய எழுத்தர் பரிந்துரையை செயல்படுத்துகிறார். பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களுக்கான பரிந்துரைகள் ஆய உறுப்பினர் அல்லது கிளைத் தலைவரால் எழுதப்படும்போது செயல்படுத்தப்படும்.

26.3.1

தொகுதிகள் மற்றும் கிளைகளில் உள்ள உறுப்பினர்களுக்கான ஆலய பரிந்துரைக்கான நேர்காணல்கள்

ஒரு தொகுதியில், ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஆலயப் பரிந்துரை நேர்காணல்களை நடத்துகிறார் மற்றும் தகுதியானவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குகிறார். ஒரு கிளையில், கிளைத் தலைவர் மட்டுமே ஆலயப் பரிந்துரை நேர்காணல்களை நடத்தி, பரிந்துரைகளை வழங்குகிறார்.

ஒரு தொகுதியில், ஆயர் தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களை நேர்காணல் செய்கிறார்:

  • தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெறுகிறார்கள் (27.1 மற்றும் 27.2 பார்க்கவும்).

  • ஒரு துணைவருடன் முத்திரிக்கப்படுகிறார்கள் (27.3 பார்க்கவும்).

அவசர சந்தர்ப்பங்களில் ஆயர் இல்லாதபோது, இந்த நேர்காணல்களை நடத்துவதற்கு அவர் தனது ஆலோசகர்களில் ஒருவருக்கு அதிகாரமளிக்கலாம்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஏதேனும் ஒரு பரிந்துரையை வழங்குவதற்கு முன், அதில் சபை உறுப்பினர் கட்டுப்பாடுகளைப்பற்றிய குறிப்பு இல்லை என்பதை சரிபார்க்க ஆயர் உறுப்பினரின் பதிவேட்டை மதிப்பாய்வு செய்கிறார். உறுப்பினர்கள் தங்கள் சொந்த நியமங்களைப் பெறுவதற்கு அல்லது துணைவருடன் முத்திரிக்கப்படுவதற்கு, அவர் பின்வருவனவற்றையும் உறுதி செய்கிறார்:

  • அந்நபரின் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் உறுப்பினர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • சகோதரர்கள் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆய உறுப்பினர் அல்லது கிளைத் தலைவரின் நேர்காணலுக்குப் பிறகு, பிணையத் தலைமையின் ஒரு உறுப்பினர் பிணையத்தில் வசிக்கும் உறுப்பினர்களை நேர்காணல் செய்கிறார். ஊழியத் தலைமையின் உறுப்பினர் ஒரு சேகரத்தில் வசிக்கும் உறுப்பினர்களுக்கு இரண்டாவது நேர்காணலை நடத்துகிறார். ஒரு சேகரத் தலைவர் ஆலயப் பரிந்துரை நேர்காணல்களை பிரதான தலைமை அங்கீகரிக்காவிட்டால் நடத்துவதில்லை.

26.3.2

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள உறுப்பினர்களுக்கான ஆலய பரிந்துரைக்கான நேர்காணல்கள்

சில உறுப்பினர்கள் விலையுயர்ந்த பயணம் அல்லது பிணையம் அல்லது ஊழியத் தலைமையின் உறுப்பினரைச் சந்திக்க பெரும் சிரமம் தேவைப்படும் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு ஆலயத் தலைவர் அந்த நபரை நேர்காணல் செய்து பரிந்துரையில் கையெழுத்திடலாம். நேர்காணலை நடத்துவதற்கு முன், அவர் பிணைய அல்லது ஊழியத் தலைவரிடம் பேசுகிறார். ஆயர், அதிகாரமளிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது கிளைத் தலைவர் ஏற்கனவே உறுப்பினரை நேர்காணல் செய்து பரிந்துரையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

26.4

தரிப்பிக்கப்படாத உறுப்பினர்களுக்கு ஆலய பரிந்துரைகளை வழங்குதல்

26.4.1

பொது வழிகாட்டுதல்கள்

தரிப்பிக்கப்படாத உறுப்பினர்களுக்கு ஆலயப் பரிந்துரைகள் பின்வருமாறு வழங்கப்படுகின்றன:

  • 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட . (இளம் பெண்கள் மற்றும் நியமிக்கப்பட்ட இளைஞர்கள் அவர்கள் 12 வயதாகும் அந்த ஆண்டின் ஜனுவரியில் தொடங்கி ஆலயப் பரிந்துரைக்கு தகுதியுடையவர்கள்.)

  • 8 முதல் 20 வயது வரை உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் பெற்றோருடன் முத்திரிக்கப்படுவார்கள். 8 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், அவர்களின் பெற்றோருடன் முத்திரிக்கப்பட பரிந்துரை அவசியமில்லை (26.4.4 பார்க்கவும்).

  • 8 முதல் 20 வயது வரை உள்ள உறுப்பினர்கள், உயிரோடுள்ள தங்களுடைய உடன்பிறப்புகள், வளர்ப்பு சகோதர சகோதரிகள் அல்லது ஒன்றுவிட்ட உடன்பிறந்தவர்கள் தங்கள் பெற்றோருடன் முத்திரையிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ள எந்தப் பரிந்துரைகளும் முன்னரே தரிப்பிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் அளவுக்கு வயதான ஒரு ஆண் சபை உறுப்பினர், அவர் ஆலயப் பரிந்துரையைப் பெறுவதற்கு முன், அவர் ஒரு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

26.4.2

புதிதாக ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினர்களுக்கான ஆலய பரிந்துரைகள்

பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலுக்கு மட்டுமான ஆலயப் பரிந்துரையைப் பெறுவதற்குப் பொருத்தமான வயதுடைய புதிய உறுப்பினர்களை ஆயர் நேர்காணல் செய்கிறார். உறுப்பினரின் திடப்படுத்தலுக்குப் பிறகு சீக்கிரத்தில் அவர் இந்த நேர்காணலை வழக்கமாக ஒரு வாரத்திற்குள் நடத்துகிறார் (26.4.1 பார்க்கவும்). சகோதரர்களுக்கு, இந்த நேர்காணல் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறுவதற்கான நேர்காணலின் ஒரு பகுதியாக நடத்தப்படலாம்.

26.4.3

பதிலி ஞானஸ்நானங்களுக்கும் திடப்படுத்தல்களுக்கும் மட்டுமான ஆலய பரிந்துரைகள்

பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிற ஆலய பரிந்துரைகள் அந்த நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.

26.4.4

உயிரோடிருக்கும் பிள்ளைகளை பெற்றோருடன் முத்திரிப்பதற்கான ஆலய பரிந்துரைகள்

21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய உறுப்பினர்கள் தங்கள் பெற்றோருடன் முத்திரிக்கப்படலாம் அல்லது அவர்கள் (1) தரிப்பிக்கப்பட்டவர்களாகவும் (2) தற்போதைய ஆலயப் பரிந்துரையை வைத்திருந்தால் மட்டுமே ஒரு முத்திரித்தலைப் பார்வையிடலாம்.

26.5

சிறப்புச் சூழ்நிலைகளில் ஆலய பரிந்துரைகளை வழங்குதல்

26.5.1

தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெறும் உறுப்பினர்கள்

தங்களின் சொந்த தரிப்பித்தலைப் பெற விரும்பும் தகுதியுள்ள உறுப்பினர்கள் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும்போது அவ்வாறு செய்யலாம்:

  • அவர்கள் குறைந்தபட்சம் 18 வயதுடையவர்கள்.

  • அவர்கள் உயர்நிலைப் பள்ளி, இடைநிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்கிறார்கள் அல்லது இனியும் தொடரவில்லை.

  • அவர்கள் திடப்படுத்தப்பட்டு ஒரு முழு வருடம் கடந்துவிட்டது.

  • அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலய உடன்படிக்கைகளைப் பெறவும் மதிக்கவும் விருப்பத்தை அவர்கள் உணருகிறார்கள்.

கூடுதலாக, ஒரு மனிதன் தனது தரிப்பித்தலைப் பெறுவதற்கு முன்பு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெற ஆயத்தமாகிறார்கள் என்பதைப்பற்றிய தகவலுக்கு, 25.2.8 பார்க்கவும். தரிப்பித்தலை யார் பெறலாம் என்பதைப்பற்றிய தகவலுக்கு, 27.2.1 பார்க்கவும்.

26.5.3

வீட்டிற்கு வெளியே சேவையிலிருந்து திரும்பும் இளம் ஊழியக்காரர்கள்

ஊழியக்காரர்கள் வீடு திரும்பிய தேதியிலிருந்து மூன்று மாதங்களில் காலாவதியாகிவிடும்படியாக ஊழியத் தலைவர் பரிந்துரையை தேதியிட்டு செயல்படுத்துகிறார்.

மூன்று மாத காலாவதி காலத்தின் முடிவிற்குள் ஒரு புதிய ஆலயப் பரிந்துரையை வழங்க திரும்ப வந்த ஊழியக்காரர்களை ஆயர் நேர்காணல் செய்கிறார்.

26.5.4

குறைந்தது ஒரு வருடமாகவாவது ஒரே தொகுதியில் வசிக்காத உறுப்பினர்கள்

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஆலயப் பரிந்துரை நேர்காணலை நடத்துவதற்கு முன் முந்தைய ஆயரை தொடர்பு கொள்கிறார்.

26.5.7

திருநங்கைகளாக அடையாளம் காணும் உறுப்பினர்கள்

தனிப்பட்ட சூழ்நிலைகளை உணர்திறன் மற்றும் கிறிஸ்துவைப் போன்ற அன்புடன் எதிர்கொள்ள பிணையத் தலைவர் பிரதேச தலைமையுடன் ஆலோசனை செய்ய வேண்டும் (38.6.23 பார்க்கவும்).

26.5.8

கடுமையான பாவம் செய்த உறுப்பினர்கள்

கடுமையான பாவத்தைச் செய்த ஒரு உறுப்பினர், அவன் அல்லது அவள் மனந்திரும்பும் வரை, ஒரு ஆலயப் பரிந்துரையைப் பெறமுடியாது (32.6 பார்க்கவும்).

26.5.9

சபை உறுப்பினரத்துவத்தை திரும்பப் பெறுதல் அல்லது ராஜினாமா செய்த பிறகு மீண்டும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள்

26.5.9.1

முன்பே தரிப்பிக்கப்படாத உறுப்பினர்கள்

ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தலினால் சபையில் அவர்களின் திரும்பவரும் அனுமதி தேதிக்குப் பின் ஒரு முழு ஆண்டுவரை தங்களின் சொந்த தரிப்பித்தலைப் பெற இந்த உறுப்பினர்களுக்கு பரிந்துரைகள் வழங்கப்படாதிருக்கலாம்.

26.5.9.2

முன்பே தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள்

ஆசீர்வாதங்களின் மறுஸ்தாபித நியமம் மூலம் அவர்களின் ஆலய ஆசீர்வாதங்கள் மீட்டெடுக்கப்படும் வரை, முன்னரே தரிப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள் எந்த வகையான ஆலயப் பரிந்துரைகளையும் பெறக்கூடாது.