“24. ஊழிய பரிந்துரைகளும் சேவையும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“24. ஊழிய பரிந்துரைகளும் சேவையும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
24.
ஊழிய பரிந்துரைகளும் சேவையும்
24.0
முன்னுரை
பண்டைய காலங்களில், “சகல தேசங்களுக்கிடையில் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு” கர்த்தர் கட்டளையிட்டார் (மத்தேயு 28:19; வசனம் 20 ஐயும் பார்க்கவும்). இந்த பிற்காலங்களில் கர்த்தர் அந்த ஆணையைப் புதுப்பித்துள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39:11; 68:6–8; 112:28–30 பார்க்கவும்).
ஒரு ஊழியக்காரராக கர்த்தருக்கு சேவை செய்வது ஒரு பரிசுத்தமான சிலாக்கியம். இது அந்த நபருக்கும் அவர் அல்லது அவள் சேவை செய்பவர்களுக்கும் நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:14 -16 பார்க்கவும்).
தகுதியுள்ள, திறமையான ஒவ்வொரு இளைஞனையும் ஆயத்தம் செய்து சேவை செய்யவும் கர்த்தர் கேட்கிறார்.
தகுதியான, திறமையான இளம் பெண்களை அவர்கள் விரும்பினால், ஊழியங்களில் சேவை செய்ய கர்த்தர் வரவேற்கிறார்.
மூத்த ஊழியக்காரர்களும் தேவைப்படுகிறார்கள், மேலும் சேவை செய்ய ஆயத்தமாகும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
24.1
சேவை செய்ய அழைப்பு
ஊழியக்காரர்கள் கர்த்தரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் மற்றும் சரியான அதிகாரம் பெற்றவர்களால் அழைக்கப்பட வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:11; விசுவாசப் பிரமாணங்கள் 1:5 பார்க்கவும்). ஒரு ஊழியத்துக்கு சேவை செய்வதற்கான அழைப்பு பொதுவாக சபையின் தலைவரால் கொடுக்கப்படுகிறது. மூத்த சேவை ஊழியக்காரர்களுக்கு, அழைப்பு பிணையத் தலைவரால் கொடுக்கப்படுகிறது.
24.2
ஊழிய பணித்தல்கள்
ஊழியக்காரராக சேவை செய்வதற்கான அழைப்பில் ஒரு குறிப்பிட்ட பணித்தல் அடங்கியுள்ளது. இந்த பணித்தல்கள் பரவலாக வேறுபடுகின்றன.
24.2.1
இளம் கற்பிக்கும் ஊழியக்காரர்கள்
பெரும்பாலான இளம் ஊழியக்காரர்கள் வீட்டிலிருந்து தொலைவில் சுவிசேஷத்தைப் போதிக்க பணிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகள் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த ஊழியக்காரர்கள் ஒரு ஊழியத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் சேவை செய்கிறார்கள்.
24.2.2
இளம் சேவை ஊழியக்காரர்கள்
சில இளம் ஊழியக்காரர்கள் வீட்டில் வசிக்கும் போது சபையிலும் சமூகத்திலும் சேவை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். இந்த பணித்தல்கள் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் வழங்கப்படுகின்றன, மற்றும் ஒரு சேவை ஊழியத்துக்கு மிகவும் பொருத்தமான சூழ்நிலைகள் உள்ள நபர்களுக்கு வழங்கப்படுகின்றன (24.3.3 பார்க்கவும்).
24.2.3
மூத்த ஊழியக்காரர்கள்
அனைத்து மூத்த ஊழியக்காரர்களும் கற்பிக்க மக்களைக் கண்டுபிடித்து ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாக அவர்களுக்கு உதவுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மூத்த ஊழியக்காரர்களும் ஆதரவளிக்க நியமிக்கப்படலாம்:
-
உறுப்பினர்கள், பிரதேச மற்றும் உள்ளூர் தலைவர்கள்.
-
சபைத் துறைகள் மற்றும் வசதிகள்.
-
தொண்டு நிறுவனங்கள்.
மூத்த ஊழியக்காரர்கள் அவ்வளவு நேரம் வேலை செய்யவோ, அதே மாதிரியான செயல்களைச் செய்யவோ அல்லது இளம் ஊழியக்காரர்களின் அதே எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவோ கேட்கப்படுவதில்லை.
மூத்த ஊழியக்காரர்களுக்கான பணிகள் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஒரு பணிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தலாம் ஆனால் எந்த பணியையும் ஏற்க தயாராக இருக்க வேண்டும்.
24.2.4
மூத்த சேவை ஊழியக்காரர்கள்
தங்கள் சொந்த தொகுதி அல்லது பிணையங்களின் அழைப்புகளுக்கும் கூடுதலாக, உறுப்பினர்கள் மூத்த சேவை ஊழியக்காரர்களாக கர்த்தருக்குச் சேவை செய்யலாம். இந்த ஊழியக்காரர்கள் சபைத் துறைகள், வசதிகள் மற்றும் பணிகளில் மதிப்புமிக்க சேவையை வழங்குகிறார்கள் (24.7.1 பார்க்கவும்). அவர்கள் வீட்டில் வசிக்கிறார்கள்.
மூத்த சேவை ஊழியக்காரர்கள் பிணையத் தலைவரால் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் சேவை செய்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் அவர்கள் சேவை செய்யும் நேர அளவு அவர்களின் திறன், அவர்களின் பகுதியில் உள்ள சேவை வாய்ப்புகள் மற்றும் பிரதேச தலைமையின் வழிகாட்டுதலைப் பொறுத்தது.
24.2.5
ஊழிய நியமிப்புகளின் தொகுப்பு
பின்வரும் அட்டவணை ஊழிய நியமிப்புகளின் வகைகளை சுருக்கமாகக் கூறுகிறது.
|
இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் |
இளம் சேவை ஊழியக்காரர் |
மூத்த ஊழியக்காரர் |
மூத்த சேவை ஊழியக்காரர் | |
|---|---|---|---|---|
|
யாரால் அழைக்கப்படுகிறார் | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் சபையின் தலைவர் | இளம் சேவை ஊழியக்காரர் சபையின் தலைவர் | மூத்த ஊழியக்காரர் சபையின் தலைவர் | மூத்த சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் |
|
யாரால் பணிக்கப்படுகிறார் | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் ஒரு அப்போஸ்தலர் | இளம் சேவை ஊழியக்காரர் ஒரு அப்போஸ்தலர் | மூத்த ஊழியக்காரர் ஒரு அப்போஸ்தலர் | மூத்த சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் |
|
யாரால் பணிக்கப்படுகிறார் | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் பிணையத் தலைவர் | இளம் சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் | மூத்த ஊழியக்காரர் பிணையத் தலைவர் | மூத்த சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் அல்லது ஆலோசகர் |
|
வசிப்பது | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் வீட்டிலிருந்து வெளியே | இளம் சேவை ஊழியக்காரர் வீட்டில் | மூத்த ஊழியக்காரர் வீட்டிலிருந்து வெளியே அல்லது வீட்டில் | மூத்த சேவை ஊழியக்காரர் வீட்டில் |
|
சபைத் தலைவர் | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் ஊழியத் தலைவர் அல்லது வரலாற்று தள தலைவர் | இளம் சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் | மூத்த ஊழியக்காரர் ஊழியம், ஆலயம் அல்லது வரலாற்று தள தலைவர், அல்லது பிரதேச தலைவர் | மூத்த சேவை ஊழியக்காரர் பிணையத் தலைவர் |
|
அறிக்கை கொடுப்பது | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் ஊழியத் தலைவர் அல்லது வரலாற்று தள தலைவர் | இளம் சேவை ஊழியக்காரர் சேவை ஊழியத் தலைவர் | மூத்த ஊழியக்காரர் ஊழியம், ஆலயம் அல்லது வரலாற்று தள தலைவர்; பிரதேச தலைவர்; பார்வையாளர்கள் மைய இயக்குனர்; அல்லது சபைத் துறை அல்லது வசதிகள் மேலாளர் | மூத்த சேவை ஊழியக்காரர் சேவை நியமிப்பின் மேலாளர் |
|
வயது தேவைகள் | இளம் கற்பிக்கும் ஊழியக்காரர் 18–25 (ஆண்கள்) | இளம் சேவை ஊழியக்காரர் 18–25 (ஆண்கள்) | மூத்த ஊழியக்காரர் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக திருமணமானவராக இருந்தால் அல்லது திருமணமாகாத சகோதரி | மூத்த சேவை ஊழியக்காரர் 26 அல்லது மேற்பட்ட வயதுடைய |
24.3
ஊழியச் சேவை செய்ய ஆயத்தப்படுதலும் தகுதி பெறுதலும்
வருங்கால ஊழியக்காரர்கள் கர்த்தர் மற்றும் அவருடைய பிள்ளைகள் மீதுள்ள அன்பின் காரணமாக ஒரு ஊழியத்தைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஊழியப் பரிந்துரை நேர்காணல் கேள்விகள் அவர்களுக்கு நன்கு பரிச்சயமாயிருக்க வேண்டும்.
24.3.1
இயேசு கிறிஸ்துவில் மனமாற்றம்
வருங்கால ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திற்கும் தங்கள் மனமாற்றத்தை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
24.3.2
தகுதியின் தரநிலைகளை பூர்த்தி செய்தல்
வருங்கால ஊழியக்காரர்கள் பரிசுத்த ஆவியின் துணைக்கு தகுதியானவர்களாக இருக்க முயற்சி செய்கிறார்கள். ஆற்றலுள்ள ஊழியச் சேவைக்கு இது தேவைப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:13–14 பார்க்கவும்).
24.3.2.1
மனந்திரும்புதல்
மனந்திரும்புவதற்கு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதும், உண்மையான நோக்கத்தைக் கொண்டிருப்பதும், கட்டளைகளைக் கைக்கொள்ளுவதும் தேவை. பாவத்தை ஒப்புக்கொள்வதும் கைவிடுவதும் இதில் அடங்கும். கடுமையான பாவங்களுக்கு, மனந்திரும்புவதற்கு ஆயர் அல்லது பிணையத் தலைவரிடம் பாவத்தை ஒப்புக் கொள்ளுதல் தேவைப்படுகிறது.
மனந்திரும்புபவர் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் கிருபையின் மூலம் மன்னிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறார். கர்த்தர் பாவங்களை ஒருபோதும் நினையாமல் இருப்பார். (ஏசாயா 43:25; யாக்கோபு 6:5; ஆல்மா 34:15–17; ஏலமன் 5:10–11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42–43 பார்க்கவும். இந்தக் கையேட்டில்32.1 ஐயும் பார்க்கவும்).
பிணையத் தலைவர் தனது பரிந்துரையை சமர்ப்பிக்கும் முன், ஒரு ஊழியக்கார நபர் கடுமையான பாவத்திற்காக மனந்திரும்பியிருக்க வேண்டும் (32.6 பார்க்கவும்; 24.4.4 ஐயும் பார்க்கவும்). அவன் அல்லது அவள் பாவ நிவர்த்திக்காக கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றுள்ளார் என ஒரு நபர் நீதியான வாழ்க்கையின் மூலம் காட்ட போதுமான நேரத்தை மனந்திரும்புதல் செயல்முறையானது உள்ளடக்கியது.
24.3.3
உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம்
ஊழியப் பணி சவாலானது. இளம் போதனை ஊழியக்காரர்கள் முழு ஊழிய அட்டவணையில் வேலை செய்ய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும்.
24.3.4
நிதி
24.3.4.1
வீட்டை விட்டு வெளியே சேவை செய்யும் இளம் ஊழியக்காரர்களுக்கு நிதியளித்தல்
தங்களின் திறமைக்கு ஏற்ப தயார் செய்துள்ள இளம் விண்ணப்பதாரர்கள் நிதி காரணங்களுக்காக சேவை செய்வதில் தாமதம் செய்யக்கூடாது. எதிர்பார்க்கப்படும் பங்களிப்புக் கடமைகளைப் பூர்த்தி செய்ய நிதி உதவி தேவைப்படுபவர்கள், உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் அதைப் பெறலாம்.
தேவை இருந்தால், ஆயர் அல்லது பிணையத் தலைவர் தொகுதி அல்லது பிணையங்களில் உள்ள உறுப்பினர்களை தொகுதி ஊழியக்காரர்கள் நிதிக்கு பங்களிக்குமாறு கேட்கலாம்.
உள்ளூர் அங்க வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் உபவாசக் காணிக்கைகளின் நிதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம்.
மாதாந்திர பங்களிப்பு அர்ப்பணிப்பு. இளம் போதனை ஊழியக்காரர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியக்காரர் திட்ட செலவுகளை ஈடுகட்ட உதவுகிறார்கள்.
தொகுதி ஊழியக்காரர் நிதிக்கு பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நிதி அளிக்கப்படுகிறதா என்பதை ஆயர்கள் சரிபார்க்கிறார்கள். மாதாந்திரத் தொகையைத் தாண்டிய நிதியை முன் கூட்டியே செலுத்தக் கூடாது. ஒரு ஊழியக்காரர் சீக்கிரம் வீடு திரும்பினால், முன்கூட்டியே அளிக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெற முடியாது.
களத்தில் செலவுகள் ஒவ்வொரு மாதமும், இளம் ஊழியக்காரர்கள் உணவு, போக்குவரத்து மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகளை வழங்குவதற்காக ஊழியத்திலிருந்து நிதியைப் பெறுகிறார்கள். இந்த நிதிகள் பரிசுத்தமானவை. ஊழியப் பணி தொடர்பான நோக்கங்களுக்காக மட்டுமே ஊழியக்காரர்கள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தப்படவோ, சேமிக்கவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ அனுப்பவோ கூடாது. ஊழியக்காரர்கள் தங்களுக்குத் தேவையில்லாத நிதியை ஊழியத்துக்குத் திரும்பச் செலுத்துவார்கள்.
ஊழியக்காரர்கள் மற்ற செலவுகளை ஈடுகட்ட தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த தனிப்பட்ட செலவுகள் குறைவாக இருக்க வேண்டும். (இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கான ஊழியக்காரர் தரங்கள், 4.8 பார்க்கவும்.)
24.3.4.2
வீட்டை விட்டு வெளியே சேவை செய்யும் மூத்த ஊழியக்காரர்களுக்கு நிதியளித்தல்
மாதாந்திர பங்களிப்பு அர்ப்பணிப்பு. வீட்டை விட்டு வெளியே சேவை செய்யும் மூத்த ஊழியக்காரர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வீட்டு தொகுதி ஊழிய நிதிக்கு பங்களிக்கிறார்கள். இந்த பங்களிப்புகள் வீடு மற்றும் வாகன செலவுகளை ஈடுகட்ட உதவுகின்றன.
ஒவ்வொரு மாதமும் நிதி அளிக்கப்படுகிறதா என்பதை ஆயர்கள் சரிபார்க்கிறார்கள். மாதாந்திரத் தொகையைத் தாண்டிய நிதியை முன் கூட்டியே செலுத்தக் கூடாது.
கூடுதல் செலவுகள். வீட்டு மற்றும் வாகனச் செலவுகளை ஈடுசெய்ய உதவும் மாதாந்திர பங்களிப்பு அர்ப்பணிப்புடன் கூடுதலாக, மூத்த ஊழியக்காரர்கள் உணவு உட்பட மற்ற அனைத்து செலவுகளையும் முழுமையாக ஈடுகட்ட வேண்டும்.
24.3.4.3
வீட்டில் சேவை செய்யும் ஊழியக்காரர்களுக்கு நிதியளித்தல்
வீட்டில் பணியாற்றும் ஊழியக்காரர்கள் அவர்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் பொறுப்புள்ளவர்கள்.
24.3.4.4
மருத்துவ காப்பீடு மற்றும் செலவுகள்
இளம் போதனை ஊழியக்காரர்கள் உட்பட அனைத்து ஊழியக்காரர்களும் தங்கள் தற்போதைய மருத்துவக் காப்பீட்டை முடியுமானால் வைத்திருக்குமாறு பெலமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வீட்டில் சேவை செய்யும் ஊழியக்காரர்கள் தங்களுடைய சொந்த மருத்துவ மற்றும் பிற காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். வீட்டை விட்டு தொலைவில் சேவை செய்யும் மூத்த ஊழியக்காரர்களும் இந்த தொகையை வழங்க வேண்டும். தங்கள் சொந்த நாட்டிற்கு வெளியே சேவை செய்யும் மூத்த ஊழியக்காரர்கள் மூத்த சேவை மருத்துவத் திட்டத்தின் மூலம் காப்பீடு பெறலாம்.
24.3.5
ஊழியக்காரர்களை ஆயத்தப்படுத்துவதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் பங்கு
குடும்ப உறுப்பினர்கள், ஆயர்கள் மற்றும் பிற தலைவர்கள் இளைஞர்களுக்கு ஒரு ஊழியத்தைச் செய்ய ஆயத்தமாக உதவுகிறார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அனைத்து ஊழிய விண்ணப்பதாரர்களையும் படிக்க ஊக்குவிக்கிறார்கள்:
-
மார்மன் புஸ்தகமும் பிற வேதங்களும்.
-
என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
-
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்புகள்.
குடும்ப உறுப்பினர்களும் தலைவர்களும் அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ஊழியத் தரங்களைப் பின்பற்ற ஒப்புக்கொடுக்க உதவுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களின் சாத்தியமான பணிக்கு தொடர்புடைய ஊழியத் தரநிலைகள் கையேட்டைப் படிக்கும்படி அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்:
-
இளம் போதனை ஊழியக்காரர்களுக்கு: இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கான ஊழியத் தரநிலைகள்
24.4
ஊழியக்காரர்களை பரிந்துரைத்தல்
24.4.1
சுகாதார மதிப்பீடுகள்
அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் உடல்நலத் தயார்நிலையை மருத்துவ வல்லுநர்களால் மதிப்பீடு செய்ய வேண்டும்.
24.4.2
நேர்காணல்களும் பரிந்துரை படிவங்களும்
ஆயரும் பிணையத் தலைவரும், ஒவ்வொரு விண்ணப்பத்தாரருடனும் ஆவிக்குரிய தேடல் மற்றும் எழுப்புதலான நேர்காணல்களை நடத்துகின்றனர். அவர்கள் ஊழியப் பரிந்துரை நேர்காணல் கேள்விகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஊழிய ஆன்லைன் பரிந்துரை அமைப்பில் தகுதி மற்றும் சுகாதாரத் தயார்நிலையின் தரநிலைகளைப்பற்றிய தகவலையும் ஆயரும் பிணையத் தலைவரும் மதிப்பாய்வு செய்கிறார்கள். ஆயரும் பிணையத் தலைவரும் எந்த தகுதி தரங்களையும் சேர்ப்பதில்லை. நேர்காணல் கேள்விகளையும் அவர்கள் மாற்றுவதில்லை.
ஒரு விண்ணப்பத்தாரர் தகுதித் தரங்களை பூர்த்தி செய்வதைப்பற்றியோ அல்லது அவரது உடல்நலத் தயார்நிலையைப்பற்றியோ ஆயருக்கும் பிணையத் தலைவருக்கும் அக்கறை இருந்தால், அவர்கள் ஒன்றுசேர்ந்தும் அந்த நபருடனும் ஆலோசனை வழங்குகிறார்கள். ஒரு இளம் விண்ணப்பதாரரின் அனுமதியுடன், அவர்கள் அவன் அல்லது அவளுடைய பெற்றோருடனும் ஆலோசனை செய்யலாம். ஒரு நபர் கடுமையான பாவத்திற்காக மனந்திரும்பும் வரை ஆயரும் பிணையத் தலைவரும் ஒரு பரிந்துரையை சமர்ப்பிக்க மாட்டார்கள் (24.3.2.1 பார்க்கவும்). நபரின் உடல், மன அல்லது உணர்ச்சி ஆரோக்கியத்தைப் பொறுத்து, அவர்கள் ஒரு சேவை ஊழியக்காரராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியத்தைப்பற்றி விவாதிக்கலாம்.
அவசர சந்தர்ப்பங்களில் ஆயர் அல்லது பிணையத் தலைவர் இல்லாதபோது, இந்த நேர்காணல்களை நடத்துவதற்கு அவர் தனது ஆலோசகர்களில் ஒருவருக்கு அதிகாரமளிக்கலாம்.
சேகரங்களில், ஊழியத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஊழிய விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்து பரிந்துரைப்பார். இந்த நேர்காணல்களை சேகரத் தலைவர்கள் நடத்துவதில்லை.
24.4.4
முழுநேர ஊழியக்காரர்களாக சேவை செய்ய முடியாதவர்கள்
சில நேரங்களில் சேவை செய்ய விரும்பும் ஒரு உறுப்பினர் முழுநேர ஊழியக்காரராக அழைக்கப்படாமல் இருக்கலாம். இது உடல்நலச் சவால்கள், தகுதியின் தரநிலைகளை பூர்த்தி செய்யாதிருத்தல், சட்டச் சிக்கல்கள் அல்லது பிற சூழ்நிலைகள் போன்றவற்றின் காரணமாக இருக்கலாம். பிணையத் தலைவர் அவரை அல்லது அவளை முழுநேர ஊழியச் சேவையிலிருந்து விடுவிக்கலாம்.
24.5
ஊழிய அழைப்பைப் பெற்ற பின்பு
புதிதாக அழைக்கப்படும் ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் மார்மன் புஸ்தகத்தைப் படிக்க அல்லது மீண்டும் படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். “உங்கள் எண்ணங்களையும், உங்கள் வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும், உங்களையும் நீங்கள் காத்துக்கொள்ளுங்கள்,” என்ற பென்யமீன் இராஜாவின் அறிவுரையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.(மோசியா 4:30).
24.5.1
ஆலய தரிப்பித்தலும் ஆலய சேவையும்
புதிதாக அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் ஆலய தரிப்பித்தல் நியமத்தைப் பெறவில்லை என்றால், முடிந்தவரை ஊழிய சேவையைத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:15–16; 105:33 பார்க்கவும்). சேவை ஊழியக்காரர்கள் தங்கள் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருந்தால் இது அடங்கும்.
தரிப்பிக்கப்பட்ட புதிதாக அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள், தகுந்தபடி ஊழியச் சேவையைத் தொடங்குவதற்கு முன், ஆலய நியம ஊழியக்காரர்களாக பணியாற்றலாம் (25.5 பார்க்கவும்).
24.5.2
திருவிருந்துக் கூட்டங்கள்
புதிதாக அழைக்கப்படும் ஊழியக்காரர்களை தங்கள் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் திருவிருந்துக் கூட்டத்தில் பேச ஆயம் அழைக்கிறது. இது ஒரு வழக்கமான திருவிருந்துக் கூட்டம். திருவிருந்து மீதும் இரட்சகர் மீதும் கவனமிருக்க வேண்டும்.
24.5.3
ஊழியக்காரர்களைப் பணித்தல்
ஒவ்வொரு ஊழியக்காரருக்கும், அவன் அல்லது அவளின் ஊழியம் தொடங்கும் தேதிக்கு முடிந்தவரை நெருக்கமாக சொந்த பிணையத் தலைவர் அவர்களை பணிக்கிறார். அவசர சந்தர்ப்பங்களில், பிணையத் தலைவர் கிடைக்காதபோது, அவர் தனது ஆலோசகர்களில் ஒருவரை ஊழியக்காரர்களைப் பணித்தலுக்கு அதிகாரம் அளிக்கலாம்.
தனது ஊழியத்தில் சேகரங்களில் இருந்து அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களை ஊழியத் தலைவர் அல்லது அவரது ஆலோசகர்களில் ஒருவர் பணிக்கிறார். சேகரத் தலைவர் ஊழியக்காரர்களை பணிப்பதில்லை.
வீட்டை விட்டு வெளியே சேவை செய்யும் ஒரு சகோதரர் ஒரு ஊழியக்காரராக தெரிந்து கொள்ளப்படுவதற்கு முன்பு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். சேவை ஊழியராக சேவை செய்யப்போகிற ஒரு சகோதரர், அவரது சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருந்தால், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்க வேண்டும்.
24.6
வீட்டிலிருந்து வெளியே சேவை
24.6.2
களத்தில்
24.6.2.5
மற்றவர்களுக்கு நிதி ரீதியாக அல்லது பள்ளிப்படிப்பு அல்லது குடியேற்றத்துக்காக ஆதரவளிப்பதற்கான கோரிக்கைகள்
ஊழியக்காரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஊழியக்காரர் சேவை செய்யும் இடத்தில் வசிப்பவர்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியுதவி உட்பட நிதியுதவி வழங்கப்படக்கூடாது. மற்ற நாடுகளுக்கு குடிபெயர விரும்பும் நபர்களுக்கு ஊழியக்காரர்களும் அவர்களது குடும்பத்தினரும் நிதியுதவி செய்யக்கூடாது (38.8.19 பார்க்கவும்).
24.6.2.8
அங்கத்தினர் பதிவேடுகளும் தசமபாகமும்
ஒரு ஊழியக்காரரின் சொந்த தொகுதி உறுப்பினர் பதிவேட்டை வைத்திருக்கிறது. சொந்த தொகுதி அவரது தசமபாக நிலையையும் பதிவு செய்கிறது. ஊழியக்காரர்கள் ஊழியத்திலிருந்து பெறும் ஆதரவு நிதியில் தசமபாகம் செலுத்துவதில்லை. இருப்பினும், அவர்களுக்கு தனிப்பட்ட வருமானம் இருந்தால் தசமபாகம் செலுத்துகிறார்கள்.
24.6.3
ஊழியத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புதல்
24.6.3.1
முதலில் திட்டமிட்டபடி வீடு திரும்புதல்
ஊழியக்காரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிப்பட்ட வசதிக்காக முன்கூட்டியே விடுவிப்புகளையோ சேவை நீட்டிப்புகளையோ கோரக்கூடாது.
இளம் ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியங்களில் இருந்து நேரடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஊழியக்காரருடன் குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருந்தால் மட்டுமே மற்ற பயணங்கள் அனுமதிக்கப்படும்.
ஊழியக்காரர்கள் தங்கள் பிணையத் தலைவரிடம் தெரிவிக்கும் வரை விடுவிக்கப்பட மாட்டார்கள். அந்த நேரம் வரை அவர்கள் ஊழியக்காரர் தரங்களை பின்பற்றுகிறார்கள்.
24.6.3.2
ஊழியத்திலிருந்து வீட்டிற்கு முன்பே திரும்புதல்
சில ஊழியக்காரர்கள் உடல்நலம், தகுதி அல்லது பிற காரணங்களுக்காக முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறார்கள். இந்த வீடு திரும்பிய ஊழியக்காரர்களுக்கு ஆயர்களும் பிணையத் தலைவர்களும் சிறப்பு ஆதரவை வழங்குகிறார்கள். ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அல்லது முடிந்தால் சேவைக்குத் திரும்புவதற்குத் தலைவர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள்.
24.7
சேவை ஊழியங்கள்
24.7.1
சேவை ஊழியக்காரர்களுக்கான வாய்ப்புகளை கண்டறிதல்
ஆயர், பிணையத் தலைவர் சேவை ஊழியக்காரர் ஆகியோர் சேவை செய்வதற்கான உள்ளூர் வாய்ப்புகளை அடையாளம் காண ஒன்றுசேர்ந்து ஆலோசிக்கிறார்கள். இளம் சேவை ஊழியக்காரர்களுக்கு, ஒரு சேவை ஊழியத் தலைவர் மற்றும் ஊழியக்காரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.
24.8
ஊழியச் சேவைக்குப் பின்பு
24.8.2
ஊழிய விடுவிப்பு நேர்காணல்
பிணையத் தலைவர் ஊழியக்காரர்களை விடுவித்து ஒரு விடுவிப்பு நேர்காணலை நடத்துகிறார். சேகரங்களில், பொதுவாக ஊழியத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் ஊழியக்காரர்களை விடுவிக்கிறார்.
இந்த நேர்காணலுக்கான பின்வரும் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும்.
-
இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷராகத் தொடர அவர்களை ஊக்குவியுங்கள்.
-
ஒரு ஊழியக்காரராக அவர்கள் வளர்த்துக் கொண்ட நல்ல பழக்கங்களைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.
-
இளம் ஊழியக்காரர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயத்தப்பட அவர்களை ஊக்குவிக்கவும்.
-
எப்போதும் ஆலயப் பரிந்துரைக்கு தகுதியானவர்களாக வாழ அவர்களை ஊக்குவிக்கவும்.
24.8.4
அழைப்புகள்
சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஊழியக்காரர்களுக்கு தலைவர்கள் உடனடியாக ஊழியம் செய்தலின் பணிகளையும் அழைப்புகளையும் வழங்குகிறார்கள். பொருந்துவதாக இருந்தால், ஆலய நியமப் பணியாளர்களாகக் கருதப்படுவது இதில் அடங்கும் (25.5 பார்க்கவும்).
24.9
ஊழிய பரிந்துரைகளுக்கான ஆதாரங்களும் சேவையும்
24.9.2
இணையதளங்கள்
-
MissionaryRecommendations.ChurchofJesusChrist.org (உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஊழிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்)