பொது மாநாடு
ஆயர்கள்—கர்த்தருடைய மந்தையின் மேய்ப்பர்கள்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


ஆயர்கள்—கர்த்தருடைய மந்தையின் மேய்ப்பர்கள்

வளர்ந்து வரும் தலைமுறையை, இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்த, மேய்ப்பராக சேவை செய்வதில் ஆயருக்கு தலையாய பங்கிருக்கிறது.

ஆசாரியத்துவத்தின் என் அன்பான சகோதரர்களே, மிகவும் விரும்பப்பட்ட ஒரு பாடலில் மறக்கமுடியாத வரிகளில் ஒன்று, “சீயோனின் இளைஞர்கள் தடுமாறுவார்களா?”1 அந்த கேள்விக்கான பதிலில் எனது இதயப்பூர்வமான மற்றும் உறுதியான அறிவிப்பு “இல்லை!” என்பதே.

அந்த பதில் உண்மையாக இருப்பதை உறுதிசெய்ய, அசாதாரண சவால்கள் மற்றும் சோதனைகளின் போது வளர்ந்து வரும் தலைமுறையை ஆதரிப்பது பெற்றோர் மற்றும் ஆயத்துவத்திற்கு பரலோக பிதாவால் வழங்கப்பட்ட ஒரு அத்தியாவசியமான பொறுப்பு என்று இன்று நான் சாட்சியளிக்கிறேன். 2 தனிப்பட்ட அனுபவத்துடன் ஒரு ஆயத்துவத்தின் முக்கியத்துவத்தை நான் விளக்குகிறேன்.

நான் ஒரு உதவிக்காரனாக இருந்தபோது, என் குடும்பம் வேறு தொகுதியில் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறினோம். நான் இளம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கினேன், எனவே நானும் ஒரு புதிய பள்ளியில் படித்தேன். உதவிக்காரர் குழுமத்தில் இளைஞர்களின் ஒரு அற்புதமான குழு இருந்தது. அவர்களது பெற்றோர்களில் பெரும்பாலோர் ஆர்வமிக்க உறுப்பினர்களாக இருந்தனர். என் தாய் முற்றிலும் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார்; என் தகப்பன் எல்லா வகையிலும் விதிவிலக்கானவர், ஆனால் ஆர்வமிக்க உறுப்பினராக இருக்கவில்லை.

ஆயத்துவத்தில் இரண்டாவது ஆலோசகர் 3 சகோதரர் டீன் ஐர் அர்ப்பணிப்புள்ள தலைவராயிருந்தார். நான் புதிய தொகுதியுடன் என்னை சரிசெய்துகொண்டிருந்தபோது, சுமார் 40 மைல் (65 கி.மீ) தொலைவில் உள்ள பியர் ஏரிக்கு ஒரு தகப்பன்-மகன் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. என் தகப்பனில்லாமல் நான் கலந்து கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவருடன் வரும்படி எனக்கு ஒரு சிறப்பு அழைப்பை சகோதரர் ஐர் வழங்கினார். அவர் என் தகப்பனைப்பற்றி உயர்வாகவும் மரியாதையுடனும் பேசினார், மேலும் உதவிக்காரர் குழுமத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இருக்க எனக்கு கிடைத்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆகவே நான் சகோதரர் ஐருடன் செல்ல முடிவு செய்தேன், எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது.

இளைஞர்களைக் கவனிப்பதில், போஷிப்பதில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் ஆயத்துவத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதில் கிறிஸ்துவைப் போன்ற அன்புமிக்க அற்புதமான எடுத்துக்காட்டு சகோதரர் ஐர். இந்த புதிய தொகுதியில் ஒரு சிறந்த தொடக்கத்தை அவர் எனக்குக் கொடுத்தார், எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.

1960 ல் நான் ஒரு ஊழியத்திற்குச் செல்வதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சகோதரர் ஐர் 39 வயதில் புற்றுநோயால் காலமானார். அவர் தனது மனைவியையும், அனைவருமே 16 வயதை விட இளையவர்களான அவர்களது ஐந்து பிள்ளைகளையும் விட்டுச்சென்றார். அவரது மூத்த மகன்களான ரிச்சர்ட் மற்றும் கிறிஸ் ஐர், தங்களுடைய தகப்பனில்லாத நிலையில், ஆயத்துவம் அவர்களையும் அவர்களுடைய இளைய சகோதரர்களையும் சகோதரியையும் கிறிஸ்துவைப் போன்ற அன்புடன் ஆதரவளித்து கவனித்து வந்ததாக எனக்கு உறுதியளித்தனர், அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எப்போதுமே, தங்கள் குடும்பங்களுக்கான முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கும். 4 ஆரோனிய ஆசாரியத்துவத்தின் கடமைகளையும் வல்லமையையும், அவர்களுடைய வாழ்க்கையின் மையமாக உயர்த்துவதில் குழும தலைமைகளும் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள். 5

படம்
ஆடுகளுடன் மேய்ப்பர்

வளர்ந்து வரும் தலைமுறைக்கு மேய்ப்பர்களாக இருப்பதை வலியுறுத்தி, “கர்த்தருடைய மந்தையின் மேய்ப்பர்கள்” என்று பொருத்தமாக அழைக்கப்படுகிற ஆயர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்கள் மீது கவனம் செலுத்துவது இன்று என் நோக்கம். 6 இயேசு கிறிஸ்துவை “உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும் ஆயரும்” என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டான் என்பது சுவாரஸ்யமானது.7

ஒரு தொகுதிக்கு தலைமை தாங்குவதில் ஆயருக்கு ஐந்து முக்கிய பொறுப்புகள் உள்ளன:

  1. தொகுதியில் அவர் தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்.8

  2. ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு அவர் தலைவர்.9

  3. அவர் ஒரு பொது நீதிபதி.10

  4. தேவைப்படுபவர்களை கவனிப்பது உட்பட இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் வேலைகளை அவர் ஒருங்கிணைக்கிறார். 11

  5. மேலும் அவர் ஆவணங்கள், நிதி மற்றும் கூடுமிடத்தின் பயன்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்12

பிரதான ஆசாரியனின் தலைமை தாங்கும் அவரது பாத்திரத்தில் ஆயர் தொகுதியின் “ஆவிக்குரிய தலைவர்”.13 அவர் “இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள சீஷர்.”14

கூடுதலாக, “தொகுதியில் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான பணிகளை ஆயர் ஒருங்கிணைக்கிறார்.”15 சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில், புதிய மற்றும் திரும்பி வரும் உறுப்பினர்களை பெலப்படுத்துதல், ஊழியம் செய்தல், மற்றும் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளை மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத்தின் தலைவர்களுக்கு அன்றாட பொறுப்பை ஆயர் பணிக்க வேண்டும்.15 தொகுதி ஆலோசனைக் குழுவிலும் தொகுதி இளைஞர் ஆலோசனைக்குழுவிலும் இந்தப் பணியை ஆயர் ஒருங்கிணைக்கிறார்.

இளம் தனிமையிலிருக்கும் வயதுவந்தோர் உட்பட வளர்ந்து வரும் தலைமுறையை இயேசு கிறிஸ்துவுக்கு வழிகாட்ட மேய்ப்பராக பணியாற்றுவதில் ஆயருக்கு தலையாய பங்கு உண்டு. 17 ஆயர் மற்றும் அவரது ஆலோசகர்களின் மூல பாத்திரத்தை தலைவர் ரசல்.எம். நெல்சன் வலியுறுத்தியுள்ளார். அவர்களின் “முதல் மற்றும் முக்கிய பொறுப்பு [அவர்களின்] தொகுதியின் இளைஞர்களையும் இளம் பெண்களையும் கவனிப்பதே”18 என அவர் போதித்திருக்கிறார். தொகுதியில் உள்ள பிள்ளைகளையும் இளைஞர்களையும் கண்காணித்து போஷிப்பதில் ஆயத்துவம் பெற்றோரை ஆதரிக்கிறார்கள். ஆயரும் தொகுதி இளம் பெண்கள் தலைவரும் ஒன்றுசேர்ந்து ஆலோசிக்கிறார்கள். இளைஞர்களின் பெலத்திற்காகவின் தரங்களின்படி வாழவும், நியமங்களைப் பெற தகுதியாகவும், பரிசுத்த உடன்படிக்கையை செய்து கைக்கொள்ளவும் இளைஞர்களுக்குதவ அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

“ஏன் இளைஞர்களுடன் அதிக நேரம் செலவிட ஆயர் வழிகாட்டப்படுகிறார்?” என நீங்கள் கேட்கலாம். முக்கியமான முன்னுரிமைகளை நிறைவேற்ற கர்த்தர் அவருடைய சபையை அமைத்திருக்கிறார். அதன்படி, அவருடைய சபையின் அமைப்புக்கு ஒரு வடிவம் இருக்கிறது, அதில் ஆயருக்கு இரட்டை பொறுப்பிருக்கிறது. தொகுதி முழுவதற்கும் அவருக்கு கோட்பாட்டுப் பொறுப்பு உள்ளது, ஆனால் ஆசாரியர் குழுமத்திற்கும் குறிப்பிட்ட கோட்பாட்டுப் பொறுப்பு அவருக்கு உண்டு.19

ஆசாரியர்களாக இருக்கும் வாலிபர்களும், அதே வயதுடைய இளம் பெண்களும் தங்கள் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளனர். ஒரு குறுகிய காலத்தின்போது, வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்ட முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். ஆலயத்திற்குச் செல்ல அவர்கள் தகுதி பெறுவார்களா, ஊழியம் செய்வார்களா, 20ஆலயத்தில் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பார்களா, தங்கள் வாழ்க்கையின் பணிக்குத் தயாராகுவார்களா என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இந்த தீர்மானங்கள், ஒரு முறை எடுக்கப்பட்டால், அவர்களின் வாழ்நாள் முழுவதும் தனித்துவமான ஆவிக்குரிய மற்றும் நடைமுறை தாக்கங்களைக் கொண்டுள்ளன. ஆயர்களே, ஒரு இளம் ஆசாரியர், இளம் பெண் அல்லது இளம் வயதுவந்தோருடன் ஒப்பீட்டளவில் குறுகிய நேரம் செலவழிப்பது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின்மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். இது அவர்களின் முழு வாழ்க்கையிலும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்துகிற ஒரு பார்வையை வழங்க முடியும்.

படம்
ஆயர் மோவா மஹேவும் அவருடைய ஆலோசகர்களும்

ஒரு ஆயர் தனது இளைஞர்களுக்கு இந்த வகையான பார்வையை வழங்க உதவியதை நான் கண்ட சிறந்த உதாரணங்களில் ஒருவர் பிஷப் மோ மஹே. சான் பிரான்சிஸ்கோ டோங்கன் தொகுதியின் முதல் ஆயராக அவர் அழைக்கப்பட்டார்21 அவர் டோங்காவின் வாவாவிலிருந்து குடியேறியவர். அவர் பணியாற்றி இடமாகிய, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு அருகில் அவரது தொகுதி இருந்தது.22

படம்
டோங்கா தொகுதி

இந்த தொகுதியில் ஏராளமான இளைஞர்கள் இருந்தனர், பெரும்பாலானவர்கள் சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இயேசு கிறிஸ்துவின் நீதியுள்ள சீஷர்களாக எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆயர் மஹே அவர்களுக்கு வார்த்தையிலும், எடுத்துக்காட்டிலும் மட்டுமே கற்பிக்கவில்லை, ஆனால் அவர்கள் என்ன ஆகலாம் என்பதைப்பற்றிய ஒரு பார்வையை அவர்களுக்குக் கொடுக்க உதவியதுடன், ஆலயம், ஊழியங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு ஆயத்தமாகவும் அவர்களுக்கு உதவினார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அவர் பணியாற்றினார், மேலும் இளைஞர்களுக்கான அவரது கனவுகளும் விருப்பங்களும் நனவாகின.

ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத இளைஞர்கள் ஊழியம் செய்தனர். பதினைந்து வாலிபர்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பங்களில் கல்லூரியில் சேர்ந்த முதல் உறுப்பினர்களாக இருந்தனர்.23 அவர் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வரைச் சந்தித்தார் (நம் விசுவாசத்தைச் சேர்ந்தவர் அல்ல), அவர்கள் ஒரு நட்பை உருவாக்கி, ஒவ்வொரு இளைஞரும் பயனுள்ள குறிக்கோள்களை அடைவதற்கும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் எவ்வாறு உதவுவது என்பதில் ஒத்துழைத்தனர். போராடிக்கொண்டிருந்த அனைத்து மதங்களைச் சார்ந்த குடியேறியவர்களுடன் பணியாற்ற ஆயர் மஹே அவருக்கு உதவியதாக முதல்வர் என்னிடம் கூறினார். ஆயர் தங்களை நேசிக்கிறார் என்பதை இளைஞர்கள் அறிந்திருந்தார்கள்.

துரதிருஷ்டவசமாக, ஆயராக பணியாற்றும் போது ஆயர் மஹே காலமானார். உள்ளத்தை தொடும் மற்றும் உணர்த்துதலான அவருடைய இறுதி சடங்கை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அங்கே ஒரு பெரிய கூட்டமிருந்தது தேர்ந்திசைக் குழுவினரில் 35 க்கும் மேற்பட்ட விசுவாசமான இளம் உறுப்பினர்களிருந்தனர், அவர்கள் ஊழியங்கள் செய்தவர்கள் அல்லது கல்லூரியில் பயின்றவர்கள் மற்றும் அவர் ஆயராக பணியாற்றிய காலத்தில் இளைஞர்களாக இருந்தனர். ஒரு பேச்சாளர் தனது தொகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் வயதுவந்தோரிடமிருந்து தீவிர பாராட்டு உணர்வை வெளிப்படுத்தினார். வாழ்க்கைக்கும் நீதியான சேவைக்கும் ஆயத்தமாவதில் ஆயர் மஹே அவர்களுக்கு அளித்த பார்வைக்கு அவருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஆனால் அவர்களின் வாழ்க்கையின் அஸ்திபாரமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க அவர்களுக்கு ஆயர் மஹே உதவியிருந்தது மிக முக்கியமானது.

இப்போது, ஆயர்களே, நீங்கள் எங்கு சேவை செய்தாலும், உங்கள் நேர்காணல்களிலும் பிற தொடர்புகளிலும், நீங்கள் அந்த வகையான பார்வையை அளித்து, இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம். நடத்தையை மாற்றவும், வாழ்க்கைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும், உடன்படிக்கை பாதையில் இருக்க அவர்களை ஊக்குவிக்கவும் நீங்கள் வல்லமை வாய்ந்த அழைப்புகளை கொடுக்க முடியும்.

கூடுதலாக, ஒப்பீட்டளவில் முக்கியமில்லாத காரியங்களில் பெற்றோருடன் முரண்படும் சில இளைஞர்களுக்கு நீங்கள் உதவலாம்.24 இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் அதிகபட்ச பிணக்கு கொண்டிருப்பதாகத் தோன்றும் நேரத்தில், அவர்களின் குழுமத்திற்குத் தலைமை தாங்கும் நபரும், அவர்கள் யாருக்கு சபையாக பதிலளிக்கிற நபரும், அவர்களுடைய பெற்றோர் ஆலய பரிந்துரைக்காக செல்கிற நபராவார். பிணக்கு ஒரு பிளவை உருவாக்கும்போது, இளைஞருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனையளிக்க இது ஆயரை ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. இருவரையும் நித்திய கண்ணோட்டத்துடன் பார்க்க ஆயர்கள் உதவலாம் மற்றும் அதிக அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை தீர்க்க உதவ முடியும். இந்த விதமான சூழ்நிலைகளில், இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஊழியம் செய்வதில் தங்கள் நேரத்திற்கும் சக்திக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும்படியாக ஆயர்களுக்கு ஊழியம் செய்யும் குடும்பங்கள் பணிக்கப்படவில்லை என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.25

ஒரு மகனுக்கும் அவனது பெற்றோருக்கும் இடையிலான தீவிர பிணக்கைத் தீர்க்கமுடிந்து, வீட்டிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவரவும், சுவிசேஷத்திற்கான அர்ப்பணிப்பை மேம்படுத்தவும் முடிந்த ஒரு ஆயரை நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் சீஷராக முயற்சி செய்வது, குடும்ப வேலைகள் எவ்வாறு, எப்போது செய்யப்பட்டன என்பதை விட முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள அந்த ஆயர் பெற்றோருக்கு உதவினார்.

பள்ளி நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகள் உட்பட அவர்கள் எங்கிருந்தாலும் இளைஞர்களுடன் அதிக நேரம் செலவழிக்கும்படியாக, வயதுவந்தோருடன் பொருத்தமான கூட்டங்கள் மற்றும் ஆலோசனை நேரத்தை வழங்குமாறு ஆயத்துவங்களுக்கு ஆலோசனையளிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கடுமையான மற்றும் அவசர காரியங்களில் ஆலோசனை வழங்க முடியும் என்றாலும், தகுதி தொடர்பான தீர்ப்புகளை உள்ளடக்காத நாள்பட்ட, குறைவான அவசர விஷயங்களுடன் தொடர்ந்து ஆலோசனை வழங்குவது மூப்பர்கள் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, பொதுவாக தலைமைகள் அல்லது ஊழிய சகோதர சகோதரிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஆலோசனையளிக்கிறோம். இந்த ஆலோசனையை மேற்கொள்ள சரியான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஆவியானவர் தலைவர்களுக்கு வழிகாட்டுவார்.26 இந்த ஒதுக்கப்பட்ட ஆலோசனை நியமிப்பைப் பெறுபவர்களுக்கு வெளிப்படுத்தல் பெறும் உரிமை உண்டு. அவர்கள், நிச்சயமாக, எப்போதும் கடுமையான இரகசியத்தன்மையை காத்துக்கொள்ளவேண்டும்.

வளர்ந்து வரும் தலைமுறைக்காக சிந்தனைமிக்க தலைவர்கள் எப்போதும் தியாகம் செய்திருக்கிறார்கள். தங்கள் சபை சேவை நேரத்தின் பெரும்பகுதியை ஆயத்துவ உறுப்பினர்கள் இங்குதான் செலவிடுகிறார்கள்.

இளைஞர்களிடமும் பின்னர் எங்கள் ஆயர்களிடமும் இப்போது சில விஷயங்களை நேரடியாக நான் சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் யார், நீங்கள் யார் ஆகலாம் என்ற தெளிவான பார்வை, உங்களில் பல விலைமதிப்பற்ற இளைஞர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானங்களின் வாசலில் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் உள்ள முக்கியமான தேர்ந்தெடுப்புகள் குறித்து உங்கள் பெற்றோர் மற்றும் ஆயர் இருவரிடமும் ஆலோசனை கேளுங்கள். ஆயர் உங்களுடைய நண்பராகவும் ஆலோசனைக்காரராகவுமிருக்க அனுமதியுங்கள்.

ஒவ்வொரு திசையிலிருந்தும் உங்களிடம் பாடுகளும் சோதனைகளும் வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம். தலைவர் நெல்சன் போதித்ததைப்போல தினமும் நாம் அனைவரும் மனந்திரும்பவேண்டும். இந்த இறுதி ஊழியக்காலத்தில் உங்களுக்காக அவர் வைத்திருக்கும் “மகத்தான பணிக்காக” உங்களை ஆயத்தப்படுத்த, கர்த்தருடன் உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த, ஒரு பொதுவான நியாயாதிபதி உங்களுக்கு உதவ முடியுமென்பதில் எந்தவொரு காரியத்திலும் தயவுசெய்து உங்கள் ஆயருடன் பேசுங்கள் .27 தலைவர் நெல்சன் உங்களை அழைத்தபடி, தயவுசெய்து கர்த்தருடைய இளைஞர் பட்டாளத்தின் ஒரு பகுதியாக இருக்க உங்களைத் தகுதிபடுத்திக் கொள்ளுங்கள்! 28

சபையின் தலைமை மற்றும் உறுப்பினர்கள் சார்பாக விலைமதிப்பற்ற ஆயர்களுக்காக இப்போது உங்களுக்கு ஒரு வார்த்தை. உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றியை நாங்கள் தெரிவிக்கிறோம். அன்புள்ள ஆயர்களே, சமீபத்திய ஆண்டுகளில் நீங்கள் செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்பட்ட அனுசரிப்புகளுடன், நாங்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், பாராட்டுகிறோம் என்பதை அறியுங்கள். ராஜ்யத்திற்கான உங்கள் பங்களிப்பு ஏறக்குறைய விளக்கத்திற்கு அப்பாற்பட்டது. இந்த சபையில், உலகம் முழுவதும் 30,900 ஆயர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.29 உங்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் கௌரவிக்கிறோம்.

சில வார்த்தைகளும் அவை விவரிக்கும் பரிசுத்த அழைப்புகளும் ஏறக்குறைய ஆவிக்குரிய, அளவுகடந்த முக்கியத்துவத்துடன் ஊக்கமளிக்கின்றன. ஆயரின் அழைப்பு, நிச்சயமாக இத்தகைய வார்த்தைகளின் மேல் அடுக்கிலிருக்கும். இந்த திறனில் கர்த்தருக்கு சேவை செய்வது அநேக வழிகளில் குறிப்பிடத்தக்கது. ஒரு ஆயரின் அழைப்பு, ஆதரித்தல் மற்றும் தெரிந்தெடுத்தல் ஒருபோதும் மறக்க முடியாத அனுபவம். என்னைப் பொறுத்தவரை, அது பரவலான மற்றும் உணர்ச்சிகளின் ஆழத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான விழுமிய நிகழ்வுகளுடன் உள்ளது. ஒரு சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத, திருமணம், தகப்பனத்துவம் போன்ற விலைமதிப்பற்ற நிகழ்வுகளின் வரிசையில் இது வசதியாக அமருகிறது.30

ஆயர்களே நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம்! ஆயர்களே, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்! நீங்கள் உண்மையிலேயே அவருடைய மந்தையின் கர்த்தருடைய மேய்ப்பர்கள். இந்த பரிசுத்த அழைப்புகளில் இரட்சகர் உங்களை கைவிட மாட்டார். இதைப்பற்றி இந்த ஈஸ்டர் வாரக்கடைசியில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. “True to the Faith,” Hymns, no. 254.

  2. இளைஞர் தலைவர்கள், குழும மற்றும் வகுப்பு தலைவர்கள் மற்றும் சபையின் பிற தலைவர்கள் இந்த பொறுப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

  3. ஆசாரியர்கள் குழுமத்தின் தலைவர் ஆயர். ஆசிரியர் குழுமத்திற்கு அவருடைய முதல் ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது, மற்றும் உதவிக்காரர் குழுமத்திற்கு அவரது இரண்டாவது ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது. (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 10.3, ChurchofJesusChrist.org பார்க்கவும்.)

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–28 பார்க்கவும்.

  5. Quentin L. Cook, “Adjustments to Strengthen Youth,” Liahona, Nov. 2019, 40–43 பார்க்கவும்

  6. உண்மையுள்ள கிளைத் தலைவர்களுக்கு ஆயர் என்ற வார்த்தையின் பயன்பாடு சம சக்தியுடன் பொருந்துகிறது.

  7. 1 பேதுரு 2:25.

  8. General Handbook, 6.1.1 பார்க்கவும்.

  9. General Handbook, 6.1.2 பார்க்கவும்.

  10. General Handbook, 6.1.3 பார்க்கவும்.

  11. General Handbook, 6.1.4 பார்க்கவும்.

  12. General Handbook, 6.1.5 பார்க்கவும்.

  13. General Handbook, 6.1.1; see also General Handbook, 6.1.1.1–6.1.1.4.

  14. General Handbook, 6.1.1.

  15. General Handbook, 6.1.4.

  16. General Handbook, 21.2; 23.5; 25.2 பார்க்கவும்.

  17. General Handbook, 6.1; 14.3.3.1; see also Quentin L. Cook, “Adjustments to Strengthen Youth,” 40–43 பார்க்கவும். தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆயர் ஊக்குவிக்கப்படுகிறார். ஆரோனிய ஆசாரியத்துவ குழும தலைமைகளுக்கும் ஆயத்துவத்திற்கும் அவர்களின் கடமைகளில் உதவும்படி, திறமையான வயதுவந்த ஆலோசகர்களாகவும், வல்லுனர்களாகவும் அழைக்கப்படும்போது இத்தகைய கவனம் செலுத்தப்பட சாத்தியமாக்கப்படுகிறது.

  18. Russell M. Nelson, “Witnesses, Aaronic Priesthood Quorums, and Young Women Classes,” Liahona, Nov. 2019, 39.

  19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:87–88 பார்க்கவும்.

  20. “[ஒரு ஊழியத்தில்] சேவை செய்ய ஒவ்வொரு திறமையான இளைஞனும் ஆயத்தப்பட கர்த்தர் எதிர்பார்க்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 36:1, 4–7 பார்க்கவும்). சேவை செய்ய விருப்பமுள்ள இளம் பெண்களும் மூத்த உறுப்பினர்களும்கூட ஆயத்தப்படவேண்டும். இயேசு கிறிஸ்துவிடமும் அவருடைய மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்திற்கும் மனமாற்றப்பட முயற்சி செய்தல் ஆயத்தத்திற்கு ஒரு அத்தியாவசிய பகுதியாகும். சேவை செய்ய விரும்புவோர் உடல், மன, உணர்ச்சி மற்றும் நிதி ரீதியாகவும் ஆயத்தப்படுகிறார்கள்” (General Handbook, 24.0).

  21. டிசம்பர் 17, 1980 அன்று தொகுதி ஸ்தாபிக்கப்பட்டது. எழுபதின்மரின் முதல் குழுமத்தின் மூப்பர் ஜான் எச். க்ரோபெர்க் இந்த டோங்கன் மொழி தொகுதியை ஸ்தாபிக்க உதவினார். (Gordon Ashby, chairman, and Donna Osgood, ed., The San Francisco California Stake: The First 60 Years, 1927–1987 [1987], 49–52 பார்க்கவும்)

  22. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ, சர்வதேச விமான நிலையத்தில் பான் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஆயர் மஹே ஒரு மேலாண்மை நிலைக்கு முன்னேறினார்.

  23. The San Francisco California Stake, 49 பார்க்கவும்.

  24. அவர்கள் நித்திய முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்திருக்கலாம்.

  25. General Handbook, 21.2.1 பார்க்கவும்.

  26. மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத்தின் தலைமைகளுடன் யார் நியமிக்கப்பட வேண்டும், எவ்வளவு அன்பான மற்றும் அக்கறையுள்ள பின்தொடர்தலை அடைய வேண்டும் என்பதில் ஆயர் ஒருங்கிணைப்பார்.

  27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33.

  28. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), HopeofIsrael.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  29. பிப்ரவரி 19, 2021 நிலவரப்படி, உலகம் முழுவதும் 24,035 ஆயர்கள் மற்றும் 6,865 கிளைத் தலைவர்கள் பணியாற்றினர்.

  30. 1974 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் பர்லிங்கேம் தொகுதியின் ஆயராக தலைவர் டேவிட் பி பர்லோவால் நான் அழைக்கப்பட்டேன். சமீபத்தில் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் முழுமத்தின் உதவியாளராக அழைக்கப்பட்ட மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல்லால் செப்டம்பர் 15, 1974 ல் தெரிந்தெடுக்கப்பட்டேன்.