இளைஞரின் பெலனுக்காக
இந்த வாழ்க்கைக்குப் பிறகு: சில கேள்விகளுக்கான பதில்கள்
இளைஞரின் பெலனுக்காக ஜூலை 2025.


இளைஞரின் பெலனுக்காக மாதாந்திர செய்தி, ஜூலை 2025

இந்த வாழ்க்கைக்குப் பிறகு

சில கேள்விகளுக்கான பதில்கள்

பரலோக பிதாவின் திட்டத்தால் நமக்கு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப்பற்றிய கண்ணோட்டத்தையும் சமாதானத்தையும் கொடுக்க முடியும்.

மேகங்களில் ஒரு ஏணி

தாமஸ் அர்னாட் விளக்கப்படம்

நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?

எல்லா மதங்களிலும் உள்ள கேள்வி இதுதான். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தின் மூலமாக நமக்குக் கிடைத்திருக்கும் பதில்கள் வல்லமையுள்ளவை. இந்த வாழ்க்கை ஒரு முடிவு அல்ல. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டதால், நமது ஆவிகள் நம் சரீரங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படும், நாம் அனைவரும் ஒரு நாள் உயிர்த்தெழுப்பப்படுவோம்.

நிச்சயமாக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய மற்ற விவரங்கள் பிற்கால வெளிப்பாட்டின் மூலம் நமக்கு வந்துள்ளன, அவை நம்மிடம் உள்ள மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடும். இதுபோன்ற சில கேள்விகள், சில சுருக்கமான பதில்களுடன் இங்கே உள்ளன.

ஆவி உடல்கள் எப்படி இருக்கும்?

ஆவி என்பது ஒரு வகையான நிலை, “அதிக மெல்லியதும் அல்லது தூய்மையானதும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:7). ஆவி உடல்கள் வயது வந்த மனித உடல்களைப் போல தோற்றமளிக்கின்றன.

ஆவி உலகம் எங்கே இருக்கின்றது?

இங்கே, நம்மைச் சுற்றிலும்.

ஆவி உலகில் என்ன நடக்கிறது?

மற்றவற்றுடன், சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட ஆவிகள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத ஆவிகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆவிகள் அதை ஏற்கவோ நிராகரிக்கவோ தேர்வு செய்யலாம்.

உயிர்த்தெழுப்பப்பட்ட உடல்கள் எப்படி இருக்கும்?

உயிர்த்தெழுப்பப்பட்ட உடல்கள் இறக்க முடியாது, மாம்சத்தினாலும் எலும்பினாலும் ஆனவை, அவை பரிபூரணமானவை. அவை மகிமையானவை, அழகானவை. “உயிர்த்தெழுப்பப்பட்ட ஆணையோ பெண்ணையோ விட பார்ப்பதற்கு அழகானது வேறெதுவும் இல்லை.”

சிலஸ்டியல் ராஜ்யத்தில் என்ன நடக்கிறது?

சிலஸ்டியல் ராஜ்யத்தின் மிக உயர்ந்த மகிமையில் இருப்பவர்கள் நமது பரலோக பிதாவைப் போல மாறி நிறைவான மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பிதாவினிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அவருடைய பணியிலும் மகிமையிலும் பங்கேற்கிறார்கள். அவர்கள் நித்திய திருமணத்தில் முத்திரிக்கப் பட்டு, இப்போது நித்திய குடும்பங்களாக வாழ்கிறார்கள், தங்கள் சொந்த நித்திய ஆவி பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாதவர்களின் நிலை என்ன?

பரலோக பிதா பரிபூரண நீதியும் இரக்கமுமுள்ளவர். “கட்டளைகளைக் கைக்கொண்டு, தங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாயிருந்து, சரியானதை வாஞ்சிக்கிற அவருடைய குமாரருக்கும் குமாரத்திகளுக்கும் நித்தியங்களில் எந்த ஆசீர்வாதமும் மறுக்கப்படாது என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்”

என் பெற்றோர் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டனர், ஆனால் இப்போது அவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். நான் யாருடன் முத்திரிக்கப்பட்டிருக்கிறேன்?

நீங்கள் “உடன்படிக்கையில் பிறந்திருக்கலாம்”(அதாவது, உங்கள் பெற்றோர் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்ட பிறகு பிறந்திருக்கலாம்), அல்லது உங்கள் பெற்றோர் ஒருவருக்கொருவர் முத்திரிக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆலயத்தில் அவர்களுடன் முத்திரிக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், உங்கள் பெற்றோர் விவாகரத்து செய்து, அவர்களின் முத்திரிப்பை ரத்து செய்தாலும், உங்கள் ஆசீர்வாதங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன.

உங்கள் பெற்றோரின் தேர்வு உங்கள் ஆசீர்வாதங்களை பாதிக்காது. முக்கியமான காரியம் என்னவென்றால், நீங்கள் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்து ஆலயத்தின் ஆசீர்வாதங்களை நீங்களே நாட வேண்டும். உங்கள் குடும்ப உறவுகளைக் குறித்து, “ஒவ்வொரு நபரும் தனது விருப்பங்களும் தேர்வுகளும் அனுமதிக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களையும் பெறுவதை பரலோக பிதா உறுதி செய்வார்” என்பதை அறிந்து, நீங்கள் “கர்த்தரில் நம்பிக்கை வைத்து அவரது ஆறுதலைத் தேடுங்கள்.”

தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு என்ன நடக்கிறது?

தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது, அவர்களை நாம் நியாயந்தீர்க்க முடியாது (எல்லா மக்களையும் போலவே,முடிவாக). “அன்புக்குரியவர்கள், தலைவர்கள் மற்றும் வல்லுநர்களின் சிறந்த முயற்சிகள் இருக்கும் போதிலும், தற்கொலைகளை எல்லா நேரங்களிலும் தடுத்துவிட முடியாது. …

“ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக்கொள்வது சரியல்ல. இருப்பினும், தேவன் மட்டுமே ஒருவரின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் பொறுப்புக்கூறலின் அளவை நியாயந்தீர்க்க முடியும் (பார்க்கவும் 1 சாமுவேல் 16:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:9). …

“அன்புக்குரியவர்களை தற்கொலைக்கு இழந்தவர்கள் இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவர்த்தியிலும் நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் காணலாம்.”