ஆபாச படங்கள்
ஆரோக்கியமான பாலுணர்வைப்பற்றி என் பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?


“ஆரோக்கியமான பாலுணர்வைப்பற்றி என் பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?” பெற்றோருக்கான உதவி (2021)

“ஆரோக்கியமான பாலுணர்வைப்பற்றி என் பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?” பெற்றோருக்கான உதவி

படம்
குடும்பம் வெளியே நடந்து செல்லுதல்

ஆரோக்கியமான பாலுணர்வைப்பற்றி என் பிள்ளையிடம் நான் எவ்வாறு பேசுவது?

பாலுணர்வைப்பற்றி தங்களுடைய பிள்ளைகளிடம் பேச அநேக பெற்றோர் தயக்கமடைகின்றனர் அல்லது சங்கடப்படுகிறார்கள், அல்லது பாலுணர்வைப்பற்றி தங்களுடைய பிள்ளைகளிடம் பேசுதல் அவர்களுடைய பாலியல் நடத்தையை தூண்டு்ம் என அவர்கள் பயப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால், பாலுணர்வைப்பற்றி நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் பேசவில்லையென்றால் அதைப்பற்றி அவர்கள் மற்றொரு வகையில் அறிந்துகொள்வார்கள். ஆரோக்கிய பாலுணர்வைப் போன்று முக்கியமான தலைப்புகளைப்பற்றி உங்கள் பிள்ளைகளிடம் வழக்கமான உரையாடல்களை வைத்திருப்பதால், அணுகுவதற்கு நீங்கள் பாதுகாப்பான ஒருவர் என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள்.

பெரும்பாலான பிள்ளைகள் இயற்கையாகவே ஆர்வமாக உள்ளனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் இயற்கையான, தேவன் கொடுத்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். உங்கள் பிள்ளைகளின் வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் பாலுணர்வைப்பற்றி அவர்களிடம் பேச உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் அனுபவித்த சில உணர்வுகள் எவை? உங்களுக்கு என்ன சிந்தனைகள், கேள்விகள், அல்லது அக்கறைகள் இருந்தன? தகவலை நீங்கள் எங்கே தேடுனீர்கள்? நீங்கள் என்ன கேட்டிருக்க வேண்டும் அல்லது கற்பிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

இந்த உரையாடல்களை எவ்வாறு சிறப்பாகக் கையாள்வது என்பதைப்பற்றி உங்களுக்கு நிச்சயமில்லாமல் இருந்தால் பரவாயில்லை. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவை வளர்க்க உங்கள் பாதிக்கப்படும் தன்மையை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் எந்த அசௌரியத்தை உணர்ந்தாலும், அவர்களுடன் தொடர்புகொள்வதில் நேர்மையாகவும் உண்மையாகவுமிருக்கும் போது உங்கள் அன்பை பிள்ளைகள் உணரமுடியும்.

வெளிப்படையான தொடர்பை வளர்க்க, உங்களால் முடியும்:

  • உங்கள் பிள்ளைகள் இளமையாயிருக்கும்போது, உடல் உறுப்புகளை அவைகளின் சரியான பெயர்களால் அழைப்பதின் மூலம் ஆரம்பியுங்கள். இது பிள்ளைகளுக்கு அவர்களின் உடலைப்பற்றி கற்றுக்கொடுக்கிறது மற்றும் அவர்கள் ஆரோக்கியமாகவும் தகவலறிந்தவர்களாகவும் இருக்க வேண்டிய மொழியை அவர்களுக்கு வழங்குகிறது.

  • உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஏதேனும் கேள்விகளைக் கேட்கலாம் என்பதை அவர்கள் தெரிந்திருக்கட்டும், பின்னர் அவர்களின் கேள்விகள் அல்லது ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மிகையானதை அல்லது அவமானத்தை இணைக்க வேண்டாம். அவர்கள் உங்களோடு பேசிக்கொண்டிருப்பதை கொண்டாடுங்கள், அன்பையும் ஆதரவையும் அவர்களிடம் காட்டுங்கள், தொடர்ந்து தொடர்புகொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

  • பாலுறவுக்கு உருவகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு தெளிவான, நேர்மையான வழியில் பிள்ளைகளுக்கு தகவல் வழங்கப்படவேண்டும். உதாரணமாக, சில இளைஞர்கள் கற்புடமை நியாயப்பிரமாணத்தை மீறுவதை மெல்லும் மிட்டாய் அல்லது அறையைச் சுற்றியுள்ள ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு அனுப்பப்படுகிற உணவோடு ஒப்பிடும் பாடங்களைப்பற்றிச் சொல்கிறார்கள், எனவே இனியும் அது விரும்பத்தகாதது. நல்ல எண்ணத்துடன் இருந்தாலும்கூட, இந்த வகையான உருவகங்கள் பெரும்பாலும் பாலுணர்வு பயம் அல்லது குறைந்த அல்லது ஈடுசெய்ய முடியாத சுய மதிப்பு உணர்வுகளை ஊக்குவிக்கின்றன.

  • பாலுணர்வுக்கு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் வீட்டு மாலை பாடங்களை நடத்துங்கள், உங்கள் பிள்ளைகள் தயாராக இருப்பதை உணரும்போது அவர்கள் கற்பிக்கட்டு்ம். பருவமடைதல், உடல் உருவம் மற்றும் பாலுணர்வின் நேர்மறையான அம்சங்கள் தலைப்புகளில் அடங்கக்கூடும்.

  • பாலியல் உணர்வுகள் மற்றும் பாலியல் தூண்டுதல்களை அனுபவிப்பது எப்படி இயல்பானது என்பதைப்பற்றி விவாதியுங்கள். அந்த உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் படி பிள்ளைகள் செயல்படத் தேவையில்லை, ஆனால் அவற்றைப்பற்றி அவர்கள் கவனத்தில் கொள்ள முடியும். பாலியல் உணர்வுகளைக் கவனிப்பது ஆனால் எதிர்மறையாக மதிப்பிடுவது அல்ல என்பது இதன் அர்த்தம். பிள்ளைகள் தங்கள் நற்பண்புகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப சிறந்த தேர்ந்தெடுப்புகளை செய்ய நினைவாற்றல் பயிற்சி செய்தல் அவர்களுக்கு உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

  • பிள்ளைகள் சுயஇன்பத்தில் ஈடுபடும் போது அல்லது இளைஞர்கள் சுய தொடுதலில் ஈடுபடும் போது அல்லது சுயஇன்பத்தை ஒப்புக்கொள்ளும்போது வெறுப்பு அல்லது கோபத்துடன் செயல்பட முயற்சிக்க வேண்டாம். இந்த நடத்தைகளுக்கு பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் தங்களைப்பற்றியும் அவர்களின் பாலுணர்வைப்பற்றியும் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பாதிக்கிறது.

  • உறவுகள் மற்றும் பாலுணர்வு தொடர்பான தரங்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். இந்த தரங்களையும் அவை ஏன் மதிப்புமிக்கவை என்பதற்கான காரணங்களையும் நீங்கள் கற்பிக்கும்போது, வெட்கத்தையோ பயத்தையோ திணிக்காமல் அதைச் செய்வது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.1

குறிப்பு

  1. Bullet points quoted and adapted from Laura M. Padilla-Walker and Meg O. Jankovich, “How, When, and Why: Talking to Your Children about Sexuality,” Liahona, Aug. 2020.