2023
இப்போது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
செப்டம்பர் 2023


“இப்போது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்,” இளைஞரின் பெலனுக்காக, செப்டம்பர் 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, செப்டம்பர் 2023

இப்போது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன போதித்தான் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

படம்
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து

உயிர்த்தெழுந்த கிறிஸ்து–வில்சன் ஜே. ஓங்

இப்போது கிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்தார்

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, கல்லறையில் வைக்கப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

நித்திரையடைந்தவர்களில் முதற்பலன்

முதற்பலன்இங்கு பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையானது ஆண்டின் ஆரம்பகால பயிர் என்று பொருள் இது முதலில் அறுவடை செய்யப்படுவது—மேலும் வரவிருக்கும் முதல் அறுவடை.

நித்திரையடைந்தவர்கள் என்ற சொற்றொடர்க்கு “மரித்தவர்கள்” என்று பொருள்.

இயேசு கிறிஸ்து முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டார், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, எல்லா மக்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.

மனிதனால் மரணம் வந்தது

இது ஆதாமைப் பற்றி பேசுகிறது. அவனது வீழ்ச்சி என்பது உலகிற்கு வரவிருக்கும் மக்கள் அனைவரும் மரித்துவிடுவார்கள் என்று அர்த்தம். மோசே 4 பார்க்கவும்.

கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலாயே சகல ஜனங்களும் உயிர்த்தெழுவார்கள். அப்படியென்றால், இதுவரை வாழ்ந்த அல்லது வாழப்போகும் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். நம் ஆவிகள் நம் உடலுடன் மீண்டும் ஒன்றிணையும், மேலும் நம் உடல்கள் முழுமையடைந்து அழியாததாக இருக்கும். (ஆல்மா 11:43-45 பார்க்கவும்.)