2023
கடைசி வார்த்தை: புரிதலை நாடுங்கள்
ஆகஸ்டு 2023


“புரிதலை நாடுங்கள்” இளைஞர்களின் பெலனுக்காக, ஆகஸ்டு 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2023

புரிதலை நாடுங்கள்

படம்
எண்ணெய் விளக்குடன் பெண்

விளக்கப்படங்கள் - எமிலி ஈ. ஜோன்ஸ்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் நாம் நாடும்போது, தேவனிலும், அவருடைய தெய்வீக மகிழ்ச்சியின் திட்டத்தில், இயேசு கிறிஸ்துவில், அவருடைய பாவநிவர்த்தியின் பலியில், விசுவாசத்தை அதிகரிக்கவும் நீடித்த மனமாற்றத்தை அடைவதுமே நமது நோக்கம். தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்யவும், கைக்கொள்ளவும் இத்தகைய அதிகரிக்கப்பட்ட விசுவாசம் நமக்குதவும், அப்படியாக, இயேசுவைப் பின்பற்ற நமது விருப்பத்தை பெலப்படுத்தி, நம்மில் ஒரு உண்மையான ஆவிக்குரிய மாறுதலை விளைவிக்கிறது,. ஒரு அதிக சந்தோஷத்தை, ஆக்கபூர்வ, ஆரோக்கியமான வாழ்க்கையை இந்த மாற்றம் நமக்குக் கொண்டுவந்து, ஒரு நித்திய கண்ணோட்டத்தை பராமரிக்க நமக்கு உதவும்.

படம்
வாலிபன் வேதம் வாசித்தல்

மூப்பர் உலிசஸ் சோயர்ஸ் போதித்தார், “நாம் [இரட்சகரில்] நிலைத்திருக்க வேண்டும், வேதங்களில் நம்மை மூழ்கடித்து, அவற்றில் களிகூர வேண்டும், அவருடைய கோட்பாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர் வாழ்ந்த வழியில் வாழ முயற்சிக்க வேண்டும்” அப்போது மட்டுமே, அவரண்டை நாம் வந்து அவரில் நம்பிக்கை வைத்தால் நாம் பசியடையோம், தாகமடையோம் என்றறிந்து அவருடைய குரலை நாம் அடையாளம் காண்போம். யோவான் 6:35 பார்க்கவும்.

படம்
வாலிபன் ஜெபித்தல்

அது தற்செயலாக நடக்காது. தெய்வீகத்தின் மிக உயர்ந்த செல்வாக்கிற்கு நம்மை இசைய வைத்திருப்பது ஒரு எளிதான காரியமில்லை, அதற்கு தேவனை அழைப்பதும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நமது வாழ்க்கையின் மையமாக எவ்வாறு கொண்டுவருவதென்பதை கற்றுக்கொள்ளுதலும் அவசியமாகிறது.

படம்
இளம் பெண் தன் இருதயத்தை தொடல்

சுவிசேஷத்தில் என்னுடைய அன்பான கூட்டாளிகளே, உண்மையான நோக்கத்துடனும், பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் கீழும் ஆர்வத்துடனும் இதயப்பூர்வமாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நாம் கர்றுக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் போதிக்கவும் நாம் நாடும்போது, இந்த போதனைகள் இருதயங்களை மாற்றி தேவனின் சத்தியங்களின்படி வாழ ஒரு விருப்பத்தை உணர்த்தும் என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன்.