2023
ஏழு நாட்கள் பகிர்தல்
ஜூலை 2023


“ஏழு நாட்கள் பகிர்வு,” இளைஞரின் பெலனுக்காக, ஜூலை 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜூலை 2023

ஏழுநாட்கள் பகிர்வு

நீங்கள் சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் சுவிசேஷத்தைப் பகிரலாம். நீங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறீர்களா?

சாட்சியங்களைப் பகிர்வதைப் பற்றி நாம் பேசும்போது, ​​திருவிருந்து கூட்டத்திலோ அல்லது வேறு சில வழக்கமான பின்னணியில் சாட்சிகள் பகிர்வதே என பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால் “சாதாரண, இயற்கையான தொடர்பில் உங்கள் விசுவாசத்தை உயர்த்தக்கூடிய சந்தர்ப்பங்களை எப்போதும் தேடுங்கள்” என்று நாம் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ”1

கீழே உள்ள ஏழு நாள் சவாலில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான வழியில் உங்கள் சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த காரியங்களை நீங்கள் எந்த வரிசையிலும் செய்யலாம் அல்லது நீங்கள் சொந்தமாக உருவாக்கலாம்! நீங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறீர்களா?

படம்
கூடுமிடம்

விளக்கப்படங்கள் - எமிலி டேவிஸ்

நாள் 1: சபை

சபையின் உபவாச மற்றும் சாட்சி கூட்டத்தில் உங்களுக்கு சவுகரியமாக இருந்தால் சாட்சி பகிர்வதை கருத்தில் கொள்ளவும். இல்லையெனில், ஞாயிறு மற்றும் வேதபாட வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் சபையில் உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். அங்கு நீங்கள் பகிரும் கருத்துகள் மற்றவர்களை உயர்த்தி அவர்களின் சாட்சியங்களையும் உங்கள் சாட்சிகளையும் பலப்படுத்தலாம்.

படம்
நண்பர்கள்

நாள் 2: நண்பர்கள்

ஞாயிற்றுக்கிழமை சபையில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? திருவிருந்து கூட்ட செய்தி அல்லது உங்கள் வகுப்பு கலந்துரையாடலில் யாரோ பகிர்ந்தவை ஏதும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? துவக்கப் பாடல் உங்களுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்கலாம். அதைப் பற்றி நண்பரிடம் சொல்லுங்கள்! பின்னர் அவர்களின் வார இறுதி பற்றியும் கேளுங்கள்.

படம்
கைபேசியில் சமூக ஊடகம்

நாள் 3: சமூக ஊடகங்கள்.

ஆவிக்குரிய காரியங்களை சாதாரண மற்றும் இயற்கையான வழியில், பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்கள் சிறந்த இடம். சவாலின் இந்த நாளுக்காக, கீழ்க்காணும் இடுகையைப் பகிர்வதைக் கருத்தில் கொள்ளவும்:

  • உங்களுக்கு பிடித்த வசனங்களில் ஒன்று.

  • பொது மாநாட்டிலிருந்து ஒரு உயர்த்தக்கூடிய மேற்கோள்.

  • ஒரு ஆவிக்குரிய சிந்தனை அல்லது அனுபவம்.

  • இரட்சகர்பற்றி நீங்கள் விரும்பும் அல்லது பாராட்டக்கூடிய ஒன்று.

  • சமீபத்தில் அவர் உங்களுக்கு உதவிய விதம் அல்லது அவரில் நீங்கள் போற்றும் குணாதிசயம் மேலும் எதற்காக.

படம்
வீடியோ மற்றும் குறுஞ் செய்தி- கைபேசி

நாள் 4: வீடியோ அல்லது குறுஞ் செய்தி

குறுஞ் செய்திஅல்லது வீடியோ மூலம் நண்பருக்கு உயர்த்தக்கூடிய செய்தியை அனுப்பவும். அவர்கள் விரும்பலாம் என்று நீங்கள் நினைக்கும் ஒரு மாநாட்டுச் செய்தியை நீங்கள் பகிரலாம், அவர்களைப் பற்றி நீங்கள் பாராட்டக்கூடிய ஒன்றை அவர்களிடம் சொல்லலாம் அல்லது இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக, பரலோக பிதா அவர்கள் மீது வைத்துள்ள அன்பைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம். நீங்கள் எப்போதும் அவர்களிடம் நேரடியாகவும் சொல்லலாம்!

படம்
இதய வடிவ பலூனுடன் இளம் பெண்

நாள் 5: சேவை

மற்றவர்களுக்குச் சேவை செய்வது உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாக எப்படி இருக்கும் என்று நீங்கள் வியக்கலாம். அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிடம், “நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு” எனக் கூறினார்I தீமோத்தேயு 4:12. எனவே மீட்பர் சேவை செய்ததைப் போல் நீங்களும் மற்றவர்களுக்குச் சேவை செய்து உங்கள் நம்பிக்கைகளை முன்மாதிரியின் மூலமாகக் காண்பிக்கலாம்.

படம்
கலையை ஈடுபடுத்தல்

நாள் 6: கலை

சில நேரங்களில் மக்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள கலையை மாற்று வழியாகப் பயன்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள ஓவியங்கள், சிற்பங்கள், கவிதைகள், இசை அல்லது வேறு எந்த வகையான கலைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

படம்
இளைஞர்கள் பேசுகிறார்கள்

நாள் 7: சாதாரண உரையாடல்கள்

கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது போல சாதாரண வேளைகளில் உங்கள் நம்பிக்கைகளைக் குறிப்பிட பயப்பட வேண்டாம்.

சபை நிகழ்ச்சிகள் அல்லது சமீபத்தில் நீங்கள் படித்த ஒரு வசனத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமாகப் பேசலாம், அதைவிட சாதாரணமாகவும் இருக்கலாம். உதாரணமாக:

  • நீங்கள் இயற்கையால் உணர்த்தப்பட்டதாக உணர்ந்தால், கர்த்தரின் படைப்புகளைப் பற்றிய உங்கள் பாராட்டை வேறொருவருக்கு வெளிப்படுத்துங்கள்.

  • சமீபத்தில் உங்களுக்கு ஒரு அருமையான ஆவிக்குரிய அனுபவம் கிடைத்திருக்கலாம். அது மிகவும் தனிப்பட்டதாக இல்லாவிட்டால் அதைப் பற்றி நண்பரிடம் சொல்லுங்கள்.

  • நீங்கள் விரும்பும் புத்தகம் அல்லது திரைப்படத்தில் சுவிசேஷ ஒப்புமைகளைக் கண்டறிந்து, உங்கள் கருத்துகளைப் பகிரவும்.

சாதாரண மற்றும் இயற்கையான

உங்கள் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான பல்வேறு வழிகளை நீங்கள் கண்டறிந்தால், நீங்கள் அவ்வாறு செய்வது மேலும் மேலும் இயல்பாகிவிடும். இது முதலில் அசவுகரியமாக இருக்கலாம், ஆனால் அது பரவாயில்லை! நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் சாட்சியம் உங்களுக்கு ஏற்கனவே இயற்கையானது - அது நீங்கள் யார் என்பதன் ஒரு பகுதியாகும். பகிர்வது இயற்கையானதாகவும் இருக்க கூடும். ஒவ்வொரு நாளும் அதை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தினால் போதும்.

இன்று உங்கள் சாட்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்வீர்கள்?