2023
கெத்செமனே
ஜூன் 2023


இளைஞர்களின் பெலனுக்காக, ஏப். 2023.

வேதங்களிலிருந்து இடங்கள்

கெத்செமனே

நமக்காக இரட்சகரின் துன்பங்கள் தொடங்கிய இடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

படம்
ஒலிவ தோப்பு

அது எங்கே உள்ளது?

ஒலிவ மலையின் சரிவில், எருசலேமின் கிழக்கே (விளக்கத்தில் வலதுபுறம், பெரிதாக்கப்பட்ட மரத்தால் குறிக்கப்பட்டுள்ளது).

படம்
பழங்கால எருசலேமின் வரைபடம்

ஜிம் மேட்சன் உருவாக்கிய எருசலேம் வரைபட விளக்கம்

அங்கே என்ன இருந்தது?

ஒலிவ மரங்களின் தோப்பு மற்றும் ஒலிவத்திலிருந்து எணணெயைப் பெறுவதற்கான செக்கு

படம்
ஒலிவ செக்கு

இங்கே என்ன நடந்தது?

கடைசி இராப் போஜனத்திற்கு பிறகு, இயேசு கிறிஸ்து தனது பதினொரு அப்போஸ்தலர்களுடன் கெத்செமனே சென்றார். பின்னர் அவர் ஜெபிக்க பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை தனியே அழைத்துச் சென்றார்.

அவர் “திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.” அவர் சொன்னார்: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.”(மாற்கு 14:33–34)

“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்

“அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.”(லூக்கா 22:42–44).

இரட்சகரின் இந்த கடுமையான துன்பத்திற்குப் பிறகு, அவர் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டார் மற்றும் யூத அதிகாரிகள் மற்றும் ரோமானிய வீரர்களின் குழுவால் கைது செய்யப்பட்டார்.

படம்
கெத்செமனேயில் இயேசு கிறிஸ்து

கெத்செமனே – மைக்கேல் மால்ம்

குறிப்புகள்

  1. Guide to the Scriptures, “Gethsemane.”

  2. D. Todd Christofferson, Oct. 2016 general conference (Ensign or Liahona, Nov. 2016, 50) பாரக்கவும்.