2023
நாம் இப்போது பரிபூரணமாக இருக்க வேண்டுமா?
பெப்ருவரி 2023


“நாம் இப்போது பரிபூரணமாக இருக்க வேண்டுமா?” இளைஞர்களின் பெலனுக்காக, பெப். 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2023

நாம் இப்போது பரிபூரணமாக இருக்க வேண்டுமா?

ஒரு அக்டோபர் 2017 பொதுமாநாட்டு உரையிலிருந்து.

படம்
இளம் வாலிபன் வேதங்களை வாசித்தல்

விளக்கப்படங்கள் - எமிலி ஈ. ஜோன்ஸ்

நம்மை ஆசீர்வதிப்பதற்காகவும் உற்சாகப்படுத்துவதற்காகவும் வேதங்கள் எழுதப்பட்டுள்ளன, நிச்சயமாக அவை அதைச் செய்கின்றன. ஆனால், எப்பொழுதாவது ஒரு வாசகம் தோன்றி, நாம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து வருகிறோம் என்பதை நினைவூட்டுவதை நீங்கள் கவனித்தீர்களா? உதாரணமாக: பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் (மத்தேயு 5:48) அந்த கட்டளையுடன், நாம் படுக்கைக்குச் சென்று நமது தலைக்குமேல் போர்வையால் மூடுகிறோம். அத்தகைய சிலஸ்ட்டியல் இலக்கு நம் எல்லைக்கு அப்பாற்பட்டதாக தோன்றலாம் ஆயினும், நம்மால் கடைப்பிடிக்க முடியாது என அவர் அறிந்த ஒரு கட்டளையை கர்த்தர் நமக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டார்.

படம்
மழையில் குடையுடன் இளம் பெண்

மரோனி மன்றாடுகிறான் “ஆம், கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரில் பூரணப்பட்டிருங்கள்,”. “தேவனில் உங்கள் முழுஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அன்புகூருவீர்களானால்…பின்பு அவருடைய கிருபையினிமித்தம் நீங்கள் கிறிஸ்துவில் பூரணப்படுவீர்கள்”(மரோனி 10:32;வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது) உண்மையான பரிபூரணத்திற்கான நமது ஒரே நம்பிக்கை, அதை பரலோகத்திலிருந்து ஒருபரிசாகப் பெறுவதுதான், நாம் அதை “சம்பாதிக்க” முடியாது.

படம்
இளம் பெண் நாயுடன் மலையேறுகிறாள்

இயேசுவைத் தவிர, நாம் தொடரும் இந்த பூமிக்குரிய பயணத்தில் குறைபாடற்ற நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை, எனவே அநித்தியத்தின் போது நிலையான முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுவோம், நம்மைப்பற்றியும் மற்றவர்களைப்பற்றியும் அதிக எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்போம்.

படம்
புயல் கடலில் கப்பல்

நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், நித்தியத்தில் எங்காவது நம் சுத்திகரிப்பு முடிந்து, முழுமையடையும், இது புதிய ஏற்பாட்டின் பரிபூரணத்தின் பொருள்.