2023
இயேசு கிறிஸ்து உங்களை பலப்படுத்தும் 4 வழிகள்
ஜனுவரி 2023


இயேசு கிறிஸ்து உங்களை பலப்படுத்தும் 4 வழிகள்இளைஞரின் பெலனுக்காக, ஜனுவரி 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனுவரி 2023

இயேசு கிறிஸ்துஉங்களை பலப்படுத்தும் 4 வழிகள்

கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு”
பிலிப்பியர் 4:13.

படம்
காய்ர்ன்

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13) என்ற இந்த வேத வசனத்தில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்

ஜனங்கள் இதைக் கேட்கும்போது, ​​அவர்களில் சிலர் எந்த தேர்விலும் தேர்ச்சி பெறலாம், எந்த விளையாட்டிலும் வெற்றி பெறலாம் மற்றும் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றலாம் என்று நினைக்கலாம் ஆனால் இந்த வேதம் கற்பிப்பது அதுவல்ல.

இது அப்போஸ்தலனாகிய பவுல் சிறையில் இருந்தபோது எழுதியது. ஒரு கைதியாக, பவுல் செய்ய முடியாதவை நிறைய இருந்தன, ஆனால் மிக முக்கியமானதைச் செய்ய இயேசு கிறிஸ்து தன்னை பலப்படுத்த முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.

நமக்கும் அப்படித்தான், இதுவே உண்மை!

1அறிந்து கொள்ளும்படிக்கு கிறிஸ்து உங்களை பலப்படுத்துகிறார்

உண்மை என்ன என்பதை அறிய இயேசு கிறிஸ்து பல முக்கியமான வழிகளை உங்களுக்கு வழங்கியுள்ளார். எப்பொழுதும் ஜெபிக்கவும் (3 நேபி 18:18 பார்க்கவும்) உண்மை என்ன என்று கேட்கவும் (மரோனி 10:4-5 பார்க்கவும்) அவர் நம் அனைவருக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். வேதங்களை நீங்கள் படிப்பதின் மூலம் உண்மை என்ன என்பதையும் நீங்கள் கண்டுபிடித்து அறியலாம்.

ஜெபமும் வேதப் படிப்பும் பரிசுத்த ஆவியை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவருகிறது. பரிசுத்த ஆவி “உன் மனதிலும் மற்றும்… உன் இருதயத்திலும்” பேசலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2)” உனது ஆத்துமாவை சந்தோஷத்தால் நிரப்பும் உன் மனதை தெளிவுபடுத்தும், ”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:13)

இந்த வழிகளில், நீங்கள் “அவரிடமிருந்து கேட்கலாம்”, இரட்சகரின் வார்த்தைகளைக் கேட்டு, அவர் சொன்னதைப் பின்பற்றுங்கள் இது “இந்த வாழ்க்கையில் வெற்றி, சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சிக்கான முன்மாதிரி” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்தார்.1

2 செயல்பட கிறிஸ்து உங்களை பலப்படுத்துகிறார்

நீங்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் நல்ல தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்ளவும் நீங்கள் முயற்சி செய்யும்போது உங்களுக்கு பலம் வருகிறது. அந்தத் தேர்ந்தெடுப்புகள் கடினமாக இருந்தாலும் இதைச் செய்ய இயேசு கிறிஸ்து உங்களைப் பலப்படுத்துகிறார். சில நேரங்களில் நீங்கள் தவறான தேர்ந்தெடுப்புகளை மேற்கொள்ளலாம் நன்றிகூறும்படியாக, இரட்சகரின் பாவநிவர்த்தி மனந்திரும்புதலை சாத்தியமாக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நீங்கள் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் “சிறப்பாகசெய்யவும் சிறப்பாக இருப்பதற்கும்2 அவர் உங்களைப் பலப்படுத்தலாம்.

3மேற்கொள்ள கிறிஸ்து உங்களை பலப்படுத்துகிறார்

சிறையில் இருந்தபோது பவுல் இவ்வாறு எழுதினான்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்: எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் போதிக்கப்பட்டேன்”(பிலிப்பியர் 4:11-12).

வேறு வார்த்தைகளெனில் , கிறிஸ்துவின் மூலம், அவன் தனது சோதனைகள் மற்றும் சவால்களை சமாளிக்கவும் கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதை பவுல் கற்றுக்கொண்டான். அதையே செய்ய இயேசு கிறிஸ்து உங்களைப் பலப்படுத்த முடியும்.

இரட்சகர் “எல்லா விதமான வலிகளையும் துன்பங்களையும் சோதனைகளையும்” அனுபவித்தார் “தம்முடைய ஜனங்களின் பெலவீனங்களுக்குத் தக்கதாய் அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்று அவர் அறிந்திருந்ததால்,” [உதவ என அர்த்தம்] அவர் நம்முடைய பலவீனங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார் (ஆல்மா 7:11–12). நீங்கள் எதை எதிர்கொண்டாலும், உங்களால் செய்ய முடியாத காரியங்க ளில் நிலைத்திருப்பதற்கு மற்றும் நிறைவேற்றுவதற்கு இயேசு கிறிஸ்து உங்களைப் பலப்படுத்தலாம்

4மாறுவதற்கு கிறிஸ்து உங்களை பலப்படுத்துகிறார்

இயேசு கிறிஸ்து நம் அனைவருக்கும் உயிர்த்தெழுதலை நிஜமாக்கியுள்ளார், மேலும் மனந்திரும்புபவர்களுக்கு அத்தியாவசிய நியமங்களைப் பெறுகிறவர்களுக்கு,, அவைகளுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை சாத்தியமாக்குகிறார். நாம் பரலோக பிதா அதிகம் விரும்புவதான, அவரைப் போலாகவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போலாகவும், அவர்களுடன் நித்தியமாக வாழவும், கிறிஸ்து இல்லாமல், நம்மால் நிறைவேற்ற முடியாது.

படம்
இயேசு கிறிஸ்து

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ளும்போதும், அவரை சார்ந்து, நம்பி, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்போதும் நீங்கள் அவரைப் போல் ஆகலாம். இது உங்களை அதிக விசுவாசம், நம்பிக்கை, தயாளத்துவம், பொறுமை, தாழ்மை, சுத்தம், கீழ்ப்படிதல் ஆகியவற்றுடன் வாழ வழிவகுக்கும். இவை அனைத்தும் இரட்சகரின் குணாதிசயங்களாகும்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயலும்போது, ​​அவர் உங்கள் நம்பிக்கையாகவும் , உங்களால் மாற முடியும் என அவர் அறிந்திருக்கிற எல்லாமுமாக மாற உங்கள் ஒளியாகவும் இருப்பார். “என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்று பவுலுடன் சேர்ந்து நீங்கள் கூற முடியும்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Hear Him,” Apr. 2020 general conference (Ensign or Liahona, May 2020, 89).

  2. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Apr. 2019 general conference (Ensign or Liahona, May 2019, 67) பார்க்கவும்.