2022
இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து, அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
செப்டம்பர் 2022


இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து, அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள், “இளைஞரின் பெலனுக்காக செப்டம்பர் 2022

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, செப்டம்பர் 2022

இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்து, அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

ஒரு ஏப்ரல் 2017 பொதுமாநாட்டு உரையிலிருந்து.

நம்முடைய கர்த்தரும் எஜமானருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையை நாம் எவ்வாறு நம் வாழ்வில் உள்வாங்குவது என்பதைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

நாம் அவரைப்பற்றி அறிந்து கொள்வதன் மூலம் தொடங்கலாம்.1அறியாமையில் இரட்சிக்கப்படுவது [நமக்கு] கூடாததாயிருக்கிறது.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:6). இரட்சகரின் கோட்பாட்டையும் அவர் நமக்காக என்ன செய்தார் என்பதையும் நாம் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவர் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்க முடியும் என்பதை அறிவோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை அவருடைய பாவநிவர்த்தியாக நாம் குறிப்பிடுகிறோம், இது அனைவருக்கும் உயிர்த்தெழுதலை நிஜமாக்கியது மற்றும் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புபவர்களுக்கு மற்றும் அத்தியாவசிய நியமங்களையும் உடன்படிக்கைகளையும் பெற்றுக்கொண்டு கடைபிடிப்பவர்களுக்கு நித்திய ஜீவனை சாத்தியமாக்கியது.

பிதாவின் பெரிய நித்திய திட்டத்தின் கீழ், இரட்சகரே பாடனுபவித்தார். மரணத்தின் கட்டுகளை உடைத்தவர் இந்த இரட்சகரே நம்முடைய பாவங்களுக்கும் மீறுதல்களுக்கும் கிரயம் செலுத்தி, நம்முடைய மனந்திரும்புதலின். நிபந்தனையின்பேரில் அவற்றைத் துடைத்தெறிந்தவர் இரட்சகரே. அனைத்து ஜனங்களையும் சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து விடுவிக்கிறவர் இரட்சகரே.

பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதல் போன்ற பரிசுத்த சொற்கள், இந்த வாழ்க்கையில் நாம் நம்பிக்கையுடன் வாழவும், வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவனைப் பெறவும், பிதாவின் திட்டத்தின்படி, இரட்சகர் என்ன செய்தார் என்பதை விவரிக்கிறது.

குறிப்பு

  1. இயேசு கிறிஸ்து” மற்றும்“ஜீவிக்கிற கிறிஸ்து ஆகிய தலைப்புக்கான தலைப்புச்சார்ந்த வழிகாட்டி அல்லது வேதங்களுக்கான வழிகாட்டியை நீங்கள் படிக்கலாம்: அப்போஸ்தலர்களின் சாட்சி,” ,”ChurchofJesusChrist.org .