2021
தொடர்ச்சியான வெளிப்படுத்தல்
மார்ச் 2021


“தொடர்ச்சியான வெளிப்படுத்தல்,” இளைஞரின் பெலனுக்காக, மார்ச் 2021, 16.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, மார்ச் 2021

தொடர்ச்சியான வெளிப்படுத்தல்

ஏப்ரல் 2020 பொதுமாநாட்டு உரையிலிருந்து.

படம்
முதல் தரிசனம்

படவிளக்கம்- பென் சைமன்சென்

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்தலுக்குப் பின் வெளிப்படுத்தலாக பெற்றார். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் பெறப்பட்ட அநேக வெளிப்படுத்தல்கள் நமக்காக கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, “ நியமிக்கப்பட்ட கர்த்தருடைய முகவர்களாக, அவர் சார்பாக பேச அதிகாரம் பெற்ற ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளுக்கு தொடர்ச்சியான வெளிப்படுத்தல் மூலம் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்”1

கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை தாழ்மையாக நாடுபவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் கிடைக்கிறது. இது தீர்க்கதரிசன வெளிப்படுத்தல் போலவே முக்கியமானது.

தனிப்பட்ட வெளிப்படுத்தல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெறப்பட்ட ஆவிக்குரிய சத்தியங்களின் அடிப்படையிலானது. பரிசுத்த ஆவியானவர் விசேஷமாக இரட்சகரைப்பற்றிய எல்லா சத்தியங்களின் வெளிப்படுத்துபவர் மற்றும் சாட்சி கொடுப்பவர். பரிசுத்த ஆவி இல்லாமல் இயேசுவே கிறிஸ்து என நாம் உண்மையாகவே அறிய முடியாது. அவரது அடிப்படை பாத்திரம், பிதா மற்றும் குமாரன் மற்றும் அவர்களது நாமங்கள் மற்றும் அவர்களது மகிமையைப்பற்றி சாட்சியமளிப்பதுவே.

வெளிப்படுத்தும் வழிகாட்டுதல், கர்த்தரின் திராட்சைத்தோட்டத்தில் நாம் தாழ்மையாக பிரயாசப்படும்போது, நம் ஒவ்வொருவராலும் பெறப்படமுடியும் என நான் உறுதியளிக்கிறேன்.

பிதாவாகிய தேவனையும் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை வழிநடத்துவதற்கும் ஆவியானவரைப் பின்பற்றுவதற்கும் தொடர்ச்சியான வெளிப்படுத்தலை நாடுவோம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

குறிப்பு

  1. Hugh B. Brown, “Joseph Smith among the Prophets” (Sixteenth Annual Joseph Smith Memorial Sermon, Logan Institute of Religion, Dec. 7, 1958), 7.