நண்பன்
தீர்க்கதரிசியாகிய ஏசாயா
டிசம்பர் 2026


“தீர்க்கதரிசியாகிய ஏசாயா,” நண்பன், டிசம்பர் 2026, 46–47.

மாதாந்தரநண்பன்செய்தி, டிசம்பர் 2026

தீர்க்கதரிசியாகிய ஏசாயா

ஏசாயா தரிசனத்தில் கர்த்தரைக் கண்டதின் சித்திரம்

ஒரு நாள் ஆலயத்தில் கர்த்தர் ஏசாயாவை ஒரு தீர்க்கதரிசியாகும்படி அழைத்தார். ஏசாயா ஜனங்களை நேசித்து, இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தான்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கும் சித்திரம்.

தமது ஜனங்களைப் பாவத்திலிருந்து காப்பாற்ற இயேசு கிறிஸ்து ஒரு நாள் வருவார் என்று ஏசாயா அறிந்தான். ஆனால் எல்லோரும் அவரை தங்கள் இரட்சகராக அங்கீகரிக்க மாட்டார்கள். ஏசாயா மிகவும் துக்கமாக இருந்தான், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவை பலர் நம்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஏசாயா எழுதும் சித்திரம்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் ஏசாயா தீர்க்கதரிசனமுரைத்தான். ஒரு நாள் அவர் திரும்பி வந்து, பூமி அனைத்திற்கும் ராஜாவாக இருப்பார். தயவு மற்றும் சமாதானத்தை என்றென்றும் கொண்டுவருவதன் மூலம் அவர் தமது பிதாவின் திட்டத்தை நிறைவேற்றுவார். இயேசு கிறிஸ்து தங்களின் இரட்சகர் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று ஏசாயா கூறினான்.

வண்ணம் தீட்டும் பக்கம்

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார்

யோசேப்பு ஒரு கழுதையை வழிநடத்திச் செல்ல, அதன் மீது மரியாள் அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் வண்ணந்தீட்டும் பக்கத்தின் PDF

ஆட்ரி டே விளக்கப்படங்கள் சபை பயன்பாட்டிற்கு மட்டும் நகலெடுக்க அனுமதிக்கப்படலாம்.

இரட்சகரின் பிறப்பை நீங்கள் எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்?