நண்பன்
அக்கினியில் பாதுகாப்பாய் இருத்தல்
அக்டோபர் 2026


“அக்கினியில் பாதுகாப்பாய் இருத்தல,” நண்பன், அக்டோபர் 2026, 46–48.

நண்பன் மாதாந்தர செய்தி, அக்டோபர் 2026

அக்கினியில் பாதுகாப்பாய் இருத்தல்

நேபுகாத்நேச்சார் ராஜாவின் சித்திரம்

நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு பிரம்மாண்டமான தங்கச் சிலையை உருவாக்கி, அதை வணங்கும்படி தன் ஜனங்களைக் கட்டாயப்படுத்தினான். அவர்கள் மறுத்தால், அவர்கள் எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவார்கள்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மற்றும் ஒரு போர்வீரன் ஆகியோரின் சித்திரம்

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் தேவனை நேசித்தார்கள், மேலும் ராஜாவின் அந்நிய தேவனை வணங்க மறுத்துவிட்டார்கள்.

நண்பர்கள் ராஜாவிடம் பேசும் சித்திரம்

அந்த மூன்று நண்பர்களும் தாங்கள் தேவனை மட்டுமே வணங்குவோம் என்று ராஜாவிடம் கூறினார்கள். தேவன் தங்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் அவர் தங்களைக் காப்பாற்றாமல் போனாலும், அவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக உறுதியாய் நிற்பார்கள்.

சூளையில் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோரின் சித்திரம்

ராஜா கோபமடைந்தான். அவன் அந்த நண்பர்களை எரிகிற அக்கினிச் சூளையிலே எறிந்தான். ஆனால் ராஜா சூளையினுள் பார்த்தபோது, அந்த மூன்று மனுஷரோடும் அக்கினியின் நடுவே ஒரு பரலோக ஜீவன் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ ஆகியோர் சூளையிலிருந்து வெளியே நடந்து வருவதை ராஜா பார்ப்பது போன்ற சித்திரம்.

சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோரை ராஜா அழைத்தான், அவர்கள் சூளைக்கு வெளியே நடந்தார்கள். அக்கினி அவர்களுக்கு எந்தவொரு தீங்கையும் செய்யவில்லை, அவர்களுடைய வஸ்திரங்களைக் கூட அது சுட்டெரிக்கவில்லை.

சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோர் ராஜாவுடன் நடந்து பேசும் சித்திரம்.

சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோர் தங்களுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட காலத்திலும் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்களுடைய முன்மாதிரி, ராஜா தேவனை விசுவாசிப்பதற்கு உதவியாக இருந்தது.

வண்ணம் தீட்டும் பக்கம்

கர்த்தருடைய வார்த்தையை பேச தீர்க்கதரிசிகள் அழைக்கப்படுகிறார்கள்.

வேதாகம தீர்க்கதரிசிகளின் வண்ணந்தீட்டும் பக்க PDF

ஆட்ரி டே விளக்கப்படங்கள் சபை பயன்பாட்டிற்கு மட்டும் நகலெடுக்க அனுமதிக்கப்படலாம்.

தீர்க்கதரிசியை நீங்கள் எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்?