“ரூத்தும் நகோமியும்,” நண்பன், செப்டம்பர் 2026, 46–48.
மாதாந்தரநண்பன் செய்தி, செப்டம்பர் 2026
ரூத்தும் நகோமியும்
நகோமியின் குடும்பத்தினர் யூதாவில் வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தின் காரணமாக அவர்களுக்குப் போதுமான உணவு இல்லாததால், அவர்கள் மோவாபிற்கு இடம்பெயர்ந்தனர்.
மோவாபில், நகோமியின் கணவர் இறந்து போனார், அவளுடைய மகன்கள் ஒர்பாள் மற்றும் ரூத் என்ற பெயருள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் 10 ஆண்டுகள் நகோமியை கவனித்துக் கொண்டனர். ஆனால் அதன் பிறகு ஒர்பாள் மற்றும் ரூத்தின் கணவர்கள் இறந்து போனார்கள். இப்போது அந்தப் பெண்கள் தனியாக இருந்தனர்.
ஒர்பாள் தன் வீட்டிற்குத் திரும்பினாள். ஆனால் ரூத் தங்கியிருந்து நகோமியை கவனித்துக் கொள்ள விரும்பினாள். யூதா தேசத்தில் மீண்டும் பயிர்கள் விளைந்ததைக் குறித்து ரூத்தும் நகோமியும் கேள்விப்பட்டனர், எனவே அவர்கள் அங்கே பயணம் செய்தனர்.
அவர்கள் அறுவடை காலத்தின் போது வந்தடைந்தனர். நகோமியின் உறவினரான போவாஸுக்கு வயல்கள் சொந்தமாக இருந்தன. உணவிற்காக மீதமுள்ள கதிர்களை எடுத்துக்கொள்ள அவர் ரூத்தை அனுமதித்தார். அது கடினமான வேலையாக இருந்தது.
ரூத் கடுமையாக உழைத்ததாலும், அவள் நகோமிக்கும் கர்த்தருக்கும் விசுவாசமாக இருந்ததாலும் போவாஸ் அவளை மதித்தார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ரூத் போவாஸைக் கேட்டாள். ரூத் ஒரு விசுவாசமுள்ள மற்றும் குணசாலி என்பதை போவாஸ் அறிந்திருந்தார். அவர் ஒப்புக்கொண்டார்.
ரூத்தும் போவாஸும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து இந்த வம்சாவளியில் பிறந்தார்.
வண்ணம் தீட்டும் பக்கம்
இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நான் மனந்திரும்பி சுத்தமாக முடியும்
ஆட்ரி டே விளக்கப்படங்கள் சபை பயன்பாட்டிற்கு மட்டும் நகலெடுக்க அனுமதிக்கப்படலாம்.
நல்ல முடிவுகளை எடுக்க உங்களுக்கு எது நினைவூட்டுகிறது?
© 2026-இல் Intellectual Reserve, Inc.அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்தர நண்பன் செய்தி, செப்டம்பர் 2026 மொழிபெயர்ப்புTamil. 20073 418