அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள் உங்களுக்கு அருகிலுள்ள சபைக்குச் செல்லவும்
பொதுவான கேள்விகள்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களா?
ஆம்! பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக, இயேசு கிறிஸ்து தேவ குமாரனாகவும் உலகத்தின் இரட்சகராகவும் இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாம் கற்பனை செய்வதைவிட அதிகமாக அவர் நம் அனைவரையும் நேசிக்கிறார். நாங்கள் எங்களை இயேசுவின் அர்ப்பணிப்புள்ள சீஷர்களாகக் கருதுகிறோம். எங்கள் நம்பிக்கைகளில் சில தனித்துவமானவை என்றாலும், அவருடைய வாழ்க்கை, ஊழியம், தியாகம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், இயேசு கிறிஸ்து நம்மை பாவம், பாடு மற்றும் மரணத்திலிருந்து இரட்சிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்களுடைய நம்பிக்கைகள் பற்றி மேலும் அறியுங்கள்
சபை ஆராதனைகள் எவ்வாறிருக்கும்?
சபை ஆராதனை நேரங்கள் சபைக்கு சபை வேறுபடுகின்றன. இருப்பினும், அனைவருக்குமான ஒரு முக்கிய ஆராதனையை நீங்கள் எப்போதும் நம்பலாம், அதைத் தொடர்ந்து பிள்ளைகள், இளைஞர்கள் மற்றும் வயதுவந்தோருக்கான வகுப்புகள் நடைபெறும்.
அனைவருக்குமான ஆராதனை “திருவிருந்துக் கூட்டம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் சபையின் வெவ்வேறு உறுப்பினர்களால் வழங்கப்படும் பாடல்கள், ஜெபங்கள் மற்றும் பிரசங்கங்கள் (அல்லது “செய்திகள்”) ஆகியவைகளைக் கொண்டுள்ளன. இரட்சகரை நினைவுகூர திருவிருந்தை (நற்கருணை போன்றது) எடுப்பது கூட்டத்தின் மிக முக்கியமான பகுதியாயிருக்கிறது.
ஞாயிறு சேவைகள் பற்றி மேலும் அறியவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள ஒரு சபையைக் காணவும்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு ஏன் ஆலயங்கள் உள்ளன?
பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு, ஒரு ஆலயம் மற்ற சபை கட்டிடங்களிலிருந்து வேறுபட்டதாயிருக்கிறது. பிற்காலப் பரிசுத்தவான்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி விசேஷித்த போதனைகளைப் பெறும் இடமாக ஆலயமிருக்கிறது. ஆலயத்தில், உறுப்பினர்கள் தேவனுடன் நித்திய உடன்படிக்கைகளை (அல்லது வாக்குத்தத்தங்களை) செய்கிறார்கள். கட்டளைகளைக் கைக்கொள்வது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வது, திருமணத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பது, நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்ள உதவுவது போன்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும்.
மேலும், குடும்பங்கள் என்றென்றைக்குமானது என்று நாங்கள் நம்புவதால், ஆலயங்களுக்குள் செய்யப்படும் பெரும்பாலான பணிகள் குடும்ப பிணைப்புகளை இன்னும் வலுவாக்குவதற்காகவே ஆகும். ஆலயத்தில் திருமணங்கள் “மரணத்தால் நீங்கள் பிரியும் வரை” மட்டுமல்ல, நித்தியமாக நிலைத்திருக்க நிறைவேற்றப்படுகின்றன. பெற்றோரும் பிள்ளைகளும் ஆலயங்களில் நித்திய குடும்பங்கள் ஆகிறார்கள். முன்னோர்கள் சார்பாக பரிசுத்த நியமங்களை யாராவது செய்து அந்த சேவையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களும் ஆலயத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற முடியும். ஆலயங்கள் சுறுசுறுப்பான இடங்களாயிருக்கின்றன!
மார்மன் புஸ்தகம் என்றால் என்ன?
மார்மன் புஸ்தகம் என்பது தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி நமக்குப் போதிக்கும் உணர்த்தப்பட்ட ஒரு வேதம். இது நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிநடத்துதலைப் பெற உதவி செய்து, இயேசு கிறிஸ்துவுடன் நெருக்கமாக உணர நமக்கு உதவ முடியும். இப் பெயர் எங்கிருந்து வந்தது? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மார்மன் என்ற பூர்வகால தீர்க்கதரிசி தன் ஜனங்களின் பதிவேட்டைத் தொகுத்தான். நாம் எதிர்கொள்ளும் அதே சவால்களை அவர்களும் எதிர்கொண்டனர். நம்மைப் போலவே, அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் திரும்பியபோது பலத்தைக் கண்டார்கள். ஊழியக்காரர்களுடன் மார்மன் புஸ்தகத்தின் அறிமுகத்தைப் பெறுங்கள்
மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடாகவும், உலக இரட்சகராகவும் மீட்பராகவும் அவரது தெய்வீக ஊழியமாகவும் வேதாகமத்துடன் இணைந்து நிற்கிறது. ஒன்றாக, வேதாகமமும் மார்மன் புஸ்தகமும் நம் அனைவர் மீதும் தேவனின் மிகுந்த அன்பைப் பற்றி அதிக புரிதலை அளிக்கின்றன, மேலும் அவரிடம் நெருங்கி வர நமக்கு உதவ முடியும்.
வேதாகமமும் மார்மன் புஸ்தகமும் எவ்வாறு ஒன்றாக செயல்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் வேதாகமத்தை நம்புகிறீர்களா?
ஆம். வேதாகமம் தேவனுடைய வார்த்தை, வேதத்தின் ஒரு பரிசுத்த தொகுதி, அதன் போதனைகளைப் பின்பற்றுவது நம் வாழ்வில் மகிழ்ச்சியைத் தருகிறது. வேதாகமத்துடன், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு தனித்துவமான மற்ற வேத புத்தகங்களிலும் உணர்த்துதலைக் காண்கிறோம். தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய முக்கியமான சத்தியங்களை நமக்குக் கற்பிக்க அவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
வேதாகமம் மீது எங்கள் நம்பிக்கையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவனிடம் நெருங்கி வளருங்கள். ஊழியக்காரர்களை சந்திக்கவும்
நேரலையில் அல்லது நேரில் சந்திக்கவும். நாங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்போம், உங்கள் உள்ளூர் சபை சமூகத்திற்கு உங்களை அறிமுகப்படுத்துவோம்.
இயேசு கிறிஸ்து, நமது பூரண உதாரணம்
இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு விசுவாச சமூகம்
சபையிலிருந்து சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.
உலகெங்கும் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. சபை திட்டங்கள், நிகழ்வுகள், பேரழிவு நிவாரண முயற்சிகள் மற்றும் பலவற்றின் தற்போதைய புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.